இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம்.
Beloved, now we are children of God; and it has not yet been revealed what we shall be, (1John 3:2)
1John 3:1; 1John 5:1;Romans 8:14,15,18; John 1:12; Galathians 3:26; Galahtians 4:6; Isaiah 56:4,5.
பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை. ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். (1 யோவான் 3:2)
1யோவான் 3:1; 1யோவான் 5:1; ரோமர் 8:14,15,18; யோவான் 1:12; கலாத்தியர் 3:26; கலாத்தியர் 4:6; ஏசாயா 56:4,5.
தேவனுடைய பிள்ளைகள்.
உலகத்திலுள்ள எல்லா மனிதர்களும் தேவனுடைய பிள்ளைகளே. அந்நிய மார்க்கத்தை பின்பற்றுகிறவர்களும், கடவுள் இல்லை என்று சொல்லுகிறவர்களும் தேவனுடைய பிள்ளைகளே. சபைகளை இடித்து ஊழியங்களை அழிக்க நினைக்கிறவனும் தேவனுடைய பிள்ளையே. எல்லாரும் தேவனால் பிறந்து தேவனுடைய நன்மைகளை கொண்டிருக்கிறார்கள். நல்லவர்களோ, கெட்டவர்களோ யாவரும் தேவனுடைய பூமியையும், அதிலுள்ளவைகளையும் உரிமையாகக் கொண்டிருக்கிறார்கள். பூமியை எவரொருவர் தன் உரிமையாகக் கொண்டிருக்கிறாரோ அவர்கள் யாவரும் தேவனுடைய பிள்ளைகளே. எல்லாரும் தேவனுடைய பிள்ளைகளாயிருக்க எல்லாரும் தந்தையாம் தேவனின் ஆஸ்தியிலே பங்கடைந்திருக்க தந்தையாம் தேவனை தங்கள் சொந்த பிதா என்றும், தேவன் என்றும் சொல்ல இயலாது போன காரணம் என்ன?…
தேவனால் படைக்கப்பட்ட மனிதன் பாவத்தினிமித்தம் தேவனுடைய வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டபின்பு தேவனுக்கு எதிராளியாக மாறிவிட்டான். அவனுக்கு தண்டனை கொடுப்பது தகப்பனின் உரிமையாகும். அந்த தண்டனையை ஏற்றுக்கொள்ள விரும்பாத ஆதி மனிதன் தன்னை வஞ்சித்த சாத்தானோடு கூட்டாண்மை வைத்துக்கொண்டு சொந்த தகப்பனுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தான். தேவன் தமது கோபத்தினாலும் , நீதியினாலும் மனிதனை தண்டித்திருந்தாலும் அவனை முற்றிலுமாய் வெறுக்கவில்லை. அவனை தம்மிடமாய் சேர்த்துக்கொள்வதற்கு பல முயற்சிகள் செய்தார். தேவனுடைய பிள்ளைகளோ தேவனை வெறுத்து , பகைத்து அவருக்கு எதிரான எல்லா காரியங்களையும் செய்ய முயற்சித்தார்கள். இன்னும் முயற்சித்துக் கொண்டேயிருக்கிறார்கள். தேவனும் மனிதனை மீட்க முயற்சித்துக் கொண்டேயிருந்தார். அதன் விளைவாகத்தான் ஒரே மகனை கொடுத்து கெட்டுப்போன மகன்களை மீட்டெடுத்தார். இப்பொழுது நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம்.
நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம் என்பதை எதிராளிகள் அறிய வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. தேவனுடைய கட்டளைகளை ஏற்றுக்கொண்டு இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு தேவனுடைய ஆவியை நிறைவாய் பெற்றுவாழ்கிறவர்களே தேவனுடைய பிள்ளைகள். தேவனுடைய பிள்ளைகள் கிறிஸ்துவின் வழியில் நடக்கிறவர்களாகவும், கிறிஸ்துவை போல காணப்படுகிறவர்களாகவும் கிறிஸ்துவின் தன்மைகளை கொண்டிருப்பவர்களாகவும் காணப்படுகிறார்கள். கிறிஸ்துவின் நற்கிரியைகளாகிய பிறரை இரட்சிப்பதற்காக தங்களை ஒப்புக்கொடுத்தவர்களாகவும், நன்மை தேவைபடுகிறவர்களுக்கு நன்மை செய்கிறவர்களாகவும் காணப்படுகிறார்கள்.
நாம் தேவனுடைய பிள்ளைகளுக்கும் பிசாசின் பிள்ளைகளுக்கும் உரிய வேறுபாட்டை கொண்டிருப்பதுவே முக்கியமான அடையாளமாகும். நமது பழக்கவழக்கங்கள் , ந்மது பேச்சுக்கள், நமது செயல்பாடுகள் யாவும் கிறிஸ்துவை காண்பிக்க வேண்டும். வெள்ளைமனம், திறந்த மனம், ஒளிவு மறைவற்ற ஜீவியம், வெளிப்படையான வாழ்க்கைமுறை, எல்லாவற்றிற்கும் தேவனையே நாடுதல், எவரையும் எதற்காகவும் நாடாதிருத்தல், ஜாதி மொழி நிறம் செல்வம் படிப்பு சார்ந்து நிற்காதிருத்தல், அரசியல் ஜாதி அமைப்புகளை விட்டு விலகியிருத்தல், தேவனை மட்டுமே இராஜாவாக கொண்டிருத்தல் etc….
கேள்வி….
நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம் என்பதற்கான அடையாளம் என்ன?…
நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,
காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார். மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.
ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய். நீங்கள் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள். இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி? என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன். கலாத்தியர் 4:4-9,19.
13/07/2021, 11:04 pm –