தேவனுக்கேற்ற கிரியைகள் நடப்பிக்க என்ன செய்யவேண்டும்?
What shall we do, that we may work the works of God? (John 6:28)
Mt19:16; Mk10:17; Lk10:25; Mt12:46-50; Lk8:21; Act2;37; Act9:6; Act16:30; Ro14:6; 1Cor15:58; Deu5:27; Jer42:3-6,20; Mic6:7,8.
அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்ய வேண்டும் என்றார்கள். (யோவான் 6:28)
மத்தேயு 19:16; மாற்கு 10:17; லூக்கா 10:25; மத்தேயு 12:46-50; லூக்கா 8:21; அப்போஸ்தலர் 2;37; அப்போஸ்தலர் 9:6; அப்போஸ்தலர் 16:30; ரோமர் 14:6; 1கொரிந்தியர் 15:58; உபாகமம் 5:27; எரேமியா 42:3-6,20; மீகா6:7,8.
நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்க விருப்பம்கொண்ட இயேசுவின் காலத்து இஸ்ராயேல் மக்கள் ‘அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டனர்.
தன் சுய விருப்பத்தின்படி கேட்டார்களா?அல்லது தேவன் கொடுத்த உளதூண்டுதலுன்பேரில் கேட்டார்களா? அல்லது விடை அறியவேண்டும் என்று சோதிக்கும்படி கேட்டார்களா? என்று தெளிவாகக் கூறமுடியாது. என்றாலும் நான் என்ன செய்யவேண்டும் என்று நமது ஆண்டவரிடம் கேட்பதில் அவர் பிரியப்படுகிறார்.
சங்கீதம் 32:8 ல் கர்த்தர் நமக்கு போதிக்கிறார் என்றுள்ளது. அவரிடம் கேட்டு பெறுவதிலும் அவரிடம் கேட்டு செய்வதே சிறப்பானது. இதனை கீழ்காணும் வழிமுறைகளில் சிந்திக்க இடமுண்டு.
– தகப்பனிடம் பிள்ளையானவன் கேட்பதுபோல தகப்பன் காட்டும் வழியில் மகன் நடப்பதையே தகப்பன் விரும்புகிறார். நீதிமொழிகள் 4:18. அதைபோலவே நம் பரம தகப்பனும் விரும்புகிறார்.
– எஜமானிடம் வேலைக்காரன் கேட்டு, கற்று அவர் விரும்பும்படி செய்வது. அதுபோலவே பரம எஜமானிடம்கேட்டு ஆலோசனை பெறாமல் அவருடைய காணியாட்சியில் நாம் பணி செய்ய இயலாது.
இது தாழ்மையின் கூற்று.
இது கற்றுகொள்ளும் ஆக்க சக்தி.
இது தேவனை தன்னைவிடவும் மேலானதாக நிறுத்துகிறது.
நாம் அவரிடம் அறியும்படியாகவும், கற்கும்படியாகவும், பெறும்படியாகவும் வரவேண்டும். அவரிடமிருந்து அனைத்தையும் அடையதக்க விருப்பம் எவ்வளவோ அவ்வளவாய் அவரிடமிருந்து கற்றுகொள்ளவும் ஆர்வமாய் இருக்க வேண்டும்.
கற்றுகொள்ள விரும்பாது
தேவனுடைய கிரியைகள் வெளிப்படாது.
கர்த்தாவே, உம்மிடம் கற்றுகொண்டவர்களும், உம் குமாரனிடம் கற்றவர்களும் இணைந்து செல்லவும், தேவனுக்கேற்ற கிரியைகள் செய்யவும் தக்கதாய் எங்களை பெலபடுத்தும்.