இயேசு தேவனை தனது சொந்தபிதா என்று தேவனுக்கு தன்னை சமமாக்கினார்.
God was His Father, making Himself equal with God. (John 5:18)
Mt26:63; Mk9:7; Mk14:61; Jn8:53-59; Jn10:29-42; Jn14:9,23,28; Jn19:7; Rom1:4,5; Phil2:6; Col1:12-18.
அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள். (யோவான் 5:18)
மத்தேயு 26:63; மாற்கு 9:7; மாற்கு 14:61; யோவான் 8:53-59; யோவான் 10:29-42; யோவான் 14:9,23,28; யோவான் 19:7; ரோமர் 1:4,5; பிலிப்பியர் 2:6; கொலோசெயர் 1:12-18.
இயேசு தேவனுடைய குமாரன்:
பிதாவை நம்பியதினால் அவர் தேவ குமாரன் அல்ல,
பிதாவுக்கு கீழ்படிந்ததினால் அவர் தேவகுமாரன் அல்ல,
பிதாவுக்கு பிறந்து அவர் தேவகுமாரன் ஆகவும் இல்லை.
அவர் தேவகுமாரன் என்பதை விவிலியம் சில சொற்களால் குறிப்பிட்டுச் சொல்லுகின்றது.
1. வித்து,
2. கிளை,
3. குமாரன் – இது ஏசாயாவில் 7:14,9:6,
4. குமாரன் – புதிய ஏற்பாடு,
5. முதற்பேறானவர், ஒரே பேறு,
6. அனுப்பப்பட்டவர்,
7. தேவனுடைய ரூபம், தற்சுரூபம்.
இயேசு தேவனுடைய குமாரன் என்று எப்படி அறிந்தனர்?
1. யூத சமய குழந்தையாக வந்திருந்தும் எல்லாரும் இயேசுவை தேவகுமாரனாக அறிந்திருக்கவில்லை.
சிலர் ஸ்திரீயின் வித்து இவர்தான்,
சிலர் பாடுபடும்தாசன் இவர்தான்,
சிலர் இவரே மேசியா என்றனர்.
2. பிசாசுகள் இயேசுவை எளிதாக அடையாளம் கண்டுகொண்டன.
3. இயேசுவின் சில அற்புதங்கள் அவரை தேவகுமாரன் என வெளிப்படுத்தியது.
4. பேதுரு போன்றவர்கள் வெளிப்பாடு பெற்று தேவகுமாரன் என்றனர்.
5. இயேசு மரித்தோரிலிருந்து எழுந்ததினால் தேவகுமாரன் என பவுல் கூறுகின்றார்.
6. இயேசுகிறிஸ்து தேவனை தனது சொந்தபிதா என்று கூறியதினிமித்தம் அவர் தேவகுமாரன் எனப்பட்டார்.
7. தேவனே இயேசுவை தம் நேசகுமாரன் என்று கூறி அறிவித்தார்.
இயேசு தேவனுடைய குமாரன் என்பது பிறப்பினால் உண்டானதல்ல. அது தேவனுடைய ஏற்பாடு.
இந்த ஏற்பாட்டை ஏற்றுக்கொள்கிறவனில் மட்டும்தான் நித்திய ஜீவன் தங்கும்.
இந்த ஏற்பாட்டை கேள்விக்கேட்கவும் முடியாது, கேள்விகேட்டு விளங்கி கொள்ளவும் முடியாது.
இதனை விளக்கும்படியாக முயன்று பல தப்பறை இறையியல்களும், இறையியலாளர்களும் உருவாகி கிறிஸ்துவின் புனிதத்தையும், கிறிஸ்தவத்தின் மாண்பையும் சிதைத்துள்ளதை வரலாற்றில் காணமுடிகின்றது.
கிறிஸ்து தேவகுமாரன் என்பதற்கான முன்சொல்லப்பட்ட 7 ஆதாரங்களும் அடையாளங்களாகவே உள்ளன.
விசுவாசமே இயேசு தேவனுடைய குமாரன் என்று நம்புவதாகும். விவிலியமே இயேசு தேவனுடைய குமாரன் என்று நம்பவைக்கும் ஆதாரமாகும்.
சபையே இயேசு தேவனுடைய குமாரன் என்பதற்கான அடையாளம்.
இதனை கேள்விகேட்காதீர். விசுவாசியுங்கள். நித்திய வாழ்வு பெறுங்கள்.
கர்த்தாவே, நீர் உமது மகனை எங்களது மீட்பிற்காக மனிதகுமாரனாக தந்தீர். அவர் உம்மிலும், நீர் அவரிலும் இருப்பதை நம்பும் சபையாக எங்களை வைத்துள்ளீர். நாங்கள் அவரிலும், அவர் எங்களிலும் நிலைத்திருந்து உமது குமாரனின் வருகைக்காக நாங்கள் அனுதினமும் காத்திருந்து ஜீவிக்க எங்களுக்கு கிருபை செய்தருளும். கேள்வி எழுப்பாத விசுவாசமுடையவர்களாக இருக்க உதவும்.