தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தைச் சொன்ன என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள்.
u seek to kill Me,a Man who has told u truth which I heard from God. (John 8:40)
Lk4:29; Lk6:41; Jn3:34; Jn8:26,37,38,56; Jn14:10; Jn17:17; Gal4:16,29; 1Jn3:12-15; Rev12:4,12,13,17; Ps37:12,32; Pr26:28; Isa48:1,2; Isa57:1,2.
தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே. (யோவான் 8:40)
லூக்கா 4:29; லூக்கா 6:41; யோவான் 3:34; யோவான் 8:26,37,38,56; யோவான் 14:10; யோவான் 17:17; கலாத்தியர் 4:16,29; 1யோவான் 3:12-15; வெளி 12:4,12,13,17; சங்கீதம் 37:12,32; நீதிமொழிகள் 26:29; ஏசாயா 48:1,2; ஏசாயா 57:1,2.
தேவனின் சத்தம் கேட்டல்:
விவிலியத்தின் முதல் ஐந்து புத்தகங்களில் தேவனுடைய சத்தத்தை கேட்டு அதன்படி நடந்த ஆதிமுற்பிதாக்களை பார்க்கின்றோம். அவர்களில் சிலர் தேவ சத்தம் கேட்டு மற்றுள்ளோருக்கு அறிவிக்கிறவ்ர்களாயிருந்தனர். அப்படி சொல்லப்பட்டவைகளை கேட்டு அதன்படி நடந்தவர்கள் சிலராகவே இருந்துள்ளனர்.
தீர்க்கதரிசிகளின் காலங்களிலும் தேவனுடைய சத்தம் கேட்டு அவைகளை மக்களுக்கு சொன்னபோது கோபமும் எரிச்சலும், கொலைவெறிதாக்குதலும் நடந்தேறியது. பல தீர்க்கதரிசிகள் மடிந்தும் போனார்கள்.
புதிய ஏற்பாட்டின் காலத்தின் சுவிசேஷ யுகத்தில் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அவருக்கு கீழ்படிந்து நடந்தவர்கள் சிலராகவே இருந்துள்ளனர். அவரை கொலைசெய்யவும் துணிந்தனர். தேவனின் சத்தத்தை நேரடியாகவே கேட்டு அறிவித்த இயேசுவையே கொலை செய்யவும் செய்தனர். அப்போஸ்தலர்களும் அவ்வாறே பாடுகளை அனுபவித்தனர்.
இக்காலத்தில் தேவசத்தம் கேட்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. தனி ஜெபங்களுக்கு நேரம் இல்லை. அப்படியே தனி ஜெபங்களுக்கு நேரம் ஒதுக்கினாலும் தங்களுடைய விருப்பத்தையே தேவனிடம் சொல்லுகிறவர்களாயுள்ளனர். ஏசாயா தேவசத்தம் கேட்டு தன்னைச் சுத்திகரித்துக்கொண்டு பிறருக்கு அறிவிக்க முன்வந்ததுபோன்ற தேவ மனிதர்கள் எழும்ப வேண்டும்.
சபைகளிலே அந்நிய புத்தக உளறல்கள் கேட்கின்றது. நா வர பேச்சுகள் காணப்படுகின்றன. தேவ சத்தத்தைக் கேட்டு கண்டித்து பேசும் ஊழியர்கள் குறைந்து போயுள்ளனர்.
இயேசு சொன்னார், நான் சொல்லிய வசனங்களைக் கேட்டு அதன்படி நடப்பவன் பாறைமேல் வீடு கட்டினவனுக்கு சமமானவன் என்றார். ஆம்! தேவசத்தம் கேட்க ஆயத்தமாவோம்.
தேவ சத்தம் பேச ஆயத்தமாவோம்.
கர்த்தாவே உம் மகன்மூலம் உம் சத்தம் கேட்டு வாழும் அனுபவத்தைக் கற்று தந்துள்ளதற்காய் உமக்கு நன்றி.