தேவனால் வருகிற மகிமை – ஒருவராலொருவர் வருகிற மகிமை.
How can u believe,receive honor from one another,not seek honor that comes from only God. (John 5:44)
Mt23:5; Ro8:7,8; Gal5;19-21; 1Thes2:3-6; Phil2:3; 2Tim2:1-13; Heb3:12; Jas2;1; 1Pet1:7; 2Pet2:13,14.
தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? (யோவான் 5:44)
மத்தேயு 23:5; ரோமர் 8:7,8; கலாத்தியர் 5;19-21; 1 தெசலோனிக்கேயர் 2:3-6; பிலிப்பியர் 2:3; 2தீமோத்தேயு 2:1-13; எபிரெயர் 3:12; யாக்கோபு 2;1; 1 பேதுரு 1:7; 2 பேதுரு 2:13,14.
எந்த மகிமைக்குரியவர்களாய் நாம் வாழ்கிறோம்?
கிறிஸ்தவம் என்பது கிறிஸ்துவை மையமாக கொண்டது. கிறிஸ்துவைபோல மாற விரும்புவது,கிறிஸ்துவை கொண்டு செல்ல போதிப்பது.
இன்னொருவரின் தோட்டத்தில் நான் வேலை செய்து கூலி அடைவதுபோல, கிறிஸ்துவின் தோட்டத்தில் கிறிஸ்துவுக்காய் கிறிஸ்துவை தரித்து பணி செய்தால் மட்டுமே கூலி கிடைக்கும்.
பணி செய்கிறவனுக்கு இங்கே கனம், மகிமை, பிரஸ்தாபம் கிடைப்பதில்லை. அது தோட்டக்காரருக்குரியது. உண்மையாய் பணி செய்தவனுக்கு தோட்டக்காரர் தக்க சமயத்தில் கனமடைய செய்வார்.
கிறிஸ்தவத்தில் – சபைகளில் பதவிகள் இருக்கின்றன.
இவைகள் சபை அமைப்புக்காய் ஏற்படுத்தபட்டவை. இதனை மறுக்கவும் இயலாது, வெறுக்கவும் இயலாது.
இந்த பதவிகள் யாவும் அலங்காரத்துக்கோ, அதிகாரத்துக்கோ, புகழுக்காகவோ, மேன்மைக்காகவோ ஏற்படுத்தப்பட்டதல்ல, கிறிஸ்துவின் தோட்டத்தில் பணி செய்வதற்கான பதவிகள்.
பதவிகள் உயர, உயர சேவை செய்யும் பொறுப்பும் உயர்கின்றது.
பதவிகள் தன் சுகத்திற்கானதல்ல, பிறர் சுகத்துக்கானது.
பதவிகள் ஒட்டிகொண்டிருப்பதற்கானதல்ல, மற்றவர்களை கிறிஸ்துவோடு இணைப்பதற்கானது.
பதவிகள் உபத்திரவபடுவதற்கு முன்னணியத்திற்கு கொண்டு செல்லும் உபகரணி என்பதை மறவாதீர்.
நீ அதிகம் படித்திருக்கிறாய் என்றால் உன்னிடம் அதிக தாழ்மை, பொறுமை அவசியம். உன்னிடம் அதிகம் கேட்கப்படும்.
நீ அதிகம் சம்பாதித்திருப்பாயானால் அவைகளை இராஜ்ஜிய மேன்மைக்காய் செலவழிக்க அவர் எதிர்பார்ப்பார்.
நீ அதிக பொறுப்பை பெற்றிருப்பாயானால் தாழ்மையோடு நடந்துகொள். தாழ்ந்த இடத்தில் இருக்கவும் பழகிகொள்.
உன்னிடம் அதிக அழகு இருக்குமானால் அழுக்கானவர்களின் துணையாளனாய் மாற கூச்சபடாதே.
உன்னிடம் அதிக திறமை இருக்குமானால் பலரை அதைவிடவும் திறன் பெற்றவர்களாய் மாற்று.
கிறிஸ்தவரே, நீர் புகழடைய உருவாக்கப்படவில்லை. கிறிஸ்து புகழடையவே உன்னை இரட்சித்துள்ளார். அபிஷேகித்துள்ளார்.
கர்த்தாவே, எங்களை உம் மகனின் வேலையாட்களாக தேர்ந்தெடுத்து பணி உத்தரவாதம் வாங்கி கொண்டீர் என்பதை மறந்து எங்களுக்கு பெருமை தேடிக்கொள்வதையே நாங்கள் நாடுகிறோம். எங்களை மன்னியும். இனி நாங்கள் எங்களையல்ல, உம்மையே மெச்சிவாழ உதவிடும்.