துவக்கம்

துவக்கம்

The beginning:

Deu 11:12; Job 8:7; Ecc 7:8; Acts 11:15; Hebrews 7:3; Hebrews 12:1;Luke 1:2; Hebrews 13:14.

உபாகமம் 11:12; யோபு 8:7; பிரசங்கி 7:8; அப்போஸ்தலர் 11:15; எபிரெயர் 7:3; எபிரெயர் 12:1; லூக்கா 1:2; எபிரெயர் 13:14

துவக்கம் முடிவை நோக்கியா? இல்லையா?
ஒரு செயல் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பமாகின்றது. தேவன் அனைத்தையும் ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்கினார். துவக்கம் அற்பமாய் இருந்தாலும் கவலைப்படாமல் முன்னேறுவதையே தேவன் விரும்புகிறார். எல்லாவற்றுக்கும் ஒரு துவக்கம் உண்டு. துவங்குதல் இல்லாமல் தொடர்வதும், முடித்து வைக்கப்படுவதும் உண்டாவதில்லை.

மனிதன் துவங்குவதுமுண்டு. இயற்கையில் தானாக தூங்குவதும் உண்டு. சாத்தானால் துவக்கபப்டுவதும் உண்டு. தேவனால் துவக்கப்படுவதும் உண்டு. தேவனால் துவக்கப்படுவது மட்டுமே நிலைந்திருக்கும். மற்றதெல்லாம் விரைவில் முடிவு பெறும். தேவனால் துவக்கம் பெறுவது உருமாற்றம் அடைவதில்லை. மற்றவைகளினால் துவக்கம் பெறுவது உருமாற்றமடையும். சிதைவடையும்.

ஆதியில் தேவன் தொடங்கியபோது முடிவைக் குறித்து சிந்திக்கவில்லை. அதனால் தான் துவங்கிய நோக்கம் நிறைவேறாத பட்சத்தில் முடிவு என்பது கடைசி அத்தியாயமாய் இருக்கும் என்றும் கூறினார். பாவம் உண்டான பின்பு துவக்கப்படுவது எல்லாமே முடிவு என்ற தலைவிதியைக் கொண்டே பிறப்பிக்கப்படுகிறது. ஆகையினால் தேவனால் துவக்கப்படுவதும் ஒரு முடிவுரை நோக்கியே பயணிக்கின்றது.

வருஷத்தில் துவக்கம் மங்களகரமாக இருக்க வேண்டும் என்று வாஞ்சிப்பது தவறில்லை. ஆனால் அப்படி இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை துவக்கம் அற்பமாக வலி மிகுந்ததாகவோ ஏமாற்றம் தருவதாகவும் காணப்பட்டாலும் அதன் தொடர்ச்சியும், இறுதியும் சம்பூரணமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்திருக்க வேண்டும். அதுவே நாம் தேவனால் போதிக்கப்பட்டிருப்பதாகும். எளிமையாய் இருந்து துவங்குவதும் பூஜ்ய நம்பிக்கையாயிருந்து துவங்குவதும் ஆவியானவர் மூலமாக நமக்கு தரப்பட்டுள்ள உந்துசக்தி.

துவக்கம் முடிவுக்கான நீரோட்டம். மலையிலிருந்து உற்பத்தியாகும் நீரோடை ஆறாகி, பெருநதியாகி முடிவில் கடலிலே சங்கமிக்கின்றது. மேட்டிலிருந்து தாழ்விடம் நோக்கிப் பயணிக்கும் நீரோடையை போல மனித வாழ்க்கை அமைவதை தேவன் விரும்பவில்லை. தேவனிடமிருந்து உற்பத்தியான மனித வாழ்க்கை தேவனிடமே முடிவு பெற வேண்டும் என்பது அவரின் விருப்பம். வருடம் முடிவை நோக்கி ஓடுகிறது. ஆனால் கிறிஸ்தவ வாழ்க்கையானது முடிவை நோக்கி பயணித்தாலும் துவக்கத்திலேயே போய் நிறைவடைவதாகும். 

துவக்கத்தை மறுப்பவர்களும், கவனிக்கத் தவறுகிறவர்களும், வெறுப்பவர்களும், நேரம் போதாதென்று சொல்லுபவர்களும் துவக்கத்தை இழக்கிறார்கள். நீரோடையைப் போல நரகத்திலே போய் – ஆழத்திலேயே போய் முடிவடைகிறார்கள். 

எனது உற்பத்தி ஸ்தானம் என் தாயாரின் வயிறும் அல்ல, என் தந்தையின் வித்தும் அல்ல. என் உற்பத்தி ஸ்தானம் தேவனுடைய இருதயமே – தேவனுடைய எண்ணமே – தேவனுடைய சித்தமே. ஆகையினால் எங்கே நான் துவக்கப்பட்டேனோ அங்கே நான் முடித்துக் கொள்ள வேண்டும். 

துவக்கம் இன்னொரு துவக்கத்திற்கு வழிகாட்டி.

ADD YOUR COMMENT

Powered By Indic IME