அவர்கள் என்னைத் துன்புறுத்தினதுண்டானால் உங்களையும் துன்புறுத்துவார்கள்

அவர்கள் என்னைத் துன்புறுத்தினதுண்டானால் உங்களையும் துன்புறுத்துவார்கள்.

If they persecuted Me, they will also persecute you. (John 15:20)

Matthew 5:10-12,44; Matthew 10:23; Matthew 13:21; Matthew 23:34; Mark 10:30; Act 8:1; Act 9:45; Act 12:1; Act 13:50; Romans 12:14; 1Corinthians 4:12; 2Corinthians 4:9; Galathians 4:29; Galathians 5:11; Galathians 6:12; 2Timothy 3:11.

ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள். (யோவான் 15:20)

மத்தேயு 5:10-12,44; மத்தேயு 10:23; மத்தேயு 13:21; மத்தேயு 23:34; மாற்கு 10:30; அப்போஸ்தலர் 8:1; அப்போஸ்தலர் 9:45; அப்போஸ்தலர் 12:1; அப்போஸ்தலர் 13:50; ரோமர் 12:14; 1கொரிந்தியர் 4:12; 2கொரிந்தியர் 4:9; கலாத்தியர் 4:29; கலாத்தியர் 5:11; கலாத்தியர் 6:12; 2தீமோத்தேயு 3:11.

துன்பமுண்டு:

இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் மாத்திரமே கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டனர். அப்போஸ்தலர் 11:26. கிறிஸ்தவர்கள் என்றால் கிறிஸ்துவைப் போன்றவர்கள் மற்றும் கிறிஸ்துவைப் பிரதிபலிக்கின்றவர்கள் என்று பொருளாகும். இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகிய நாம் கிறிஸ்துவினிமித்தமும், அவரின் சுவிசேஷத்தினிமித்தமும், வசனத்தினிமித்தமும், நலநடக்கையினிமித்தமும் துன்பங்களை அடைய வேண்டியதாகின்றது. இருளினால் ஆதிக்கம் நிறைந்த உலகில் ஜீவஒளி தோன்றாதபடிக்கு, தீமையினால் பிடிபட்ட உலகில் நன்மை உண்டாகதபடிக்கு, இச்சையினால் நிரப்பப்பட்ட உலகில் கடிந்துகொள்ளுதல் மற்றும் கண்டித்துணர்த்துதல் உண்டாகாதபடிக்கு இவைகள் எதிர்த்து போராடுகின்றது. இயேசுகிறிஸ்து இவைகளினால் உபத்திரவப்பட்டது உண்மையென்றால் அவரை பின்பற்றுகிறவர்களையும் அவைகள் ஒருங்கிணைந்து துன்புறுத்தும். அதனால்தான் தன்னைப் பின்பற்றுகிறவனுக்கு உபத்திரவம் உண்டு என்று கூறினார் இயேசு.

ஆதிசபையானது கிறிஸ்துவின் உபதேசம், பாடுமரணம், உயிர்த்தெழுதல், இரண்டாம் வருகை குறித்து பிரசங்கித்தது. ஆதிசபை பாவத்தை குறித்தும், கீழ்படியாமைகள் குறித்தும் கண்டித்துணர்த்தியது. ஆகையினால் கிறிஸ்துவைபோல் உபத்திரவங்களை அனுபவித்தது. சிலுவை சுமந்து செல்வதும், சிலுவைக் குறித்து பிரசங்கிப்பதும் குறைந்து போனதினால்தான் பாவம் வேறு உருவம் கொண்டு கிறிஸ்தவர்களிடையில் பரவலாக காணப்படுகின்றது. அன்பைப் பேசுகிறவர்கள் சிலுவையில் மரித்து ஜீவன் கொடுத்ததில்தான் அன்பு உண்டாயிற்று என்று போதிப்பதில்லை. நாம் துன்படாதிருக்கும்படியாகவே ஆசீர்வாதங்களையும், அன்பையும் குறித்து பேசுகிறோம். இதுவும் வேண்டும் அதுவும் வேண்டும்.

சிலுவை சுமந்து சிலுவையில் மரித்து சிலுவையிலே வெற்றி சிறக்கும் போது தான் ஆசீர்வாதங்களும் நன்மைகளும் உண்டாகும்.

கிறிஸ்துவை பின்பற்றுவதினால் உண்டாகும் நிந்தை, துன்பங்களை பொறுமையாய் சகித்து முன்னேறினால் நித்திய வாழ்வு உண்டு.

துன்பத்தை வெறுக்காதே, இன்பத்தை விரும்பாதே, துன்பம் இன்பமாய் மாறும்வரை.

பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமைவெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.

நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார். ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது. ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன். நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?. 1பேதுரு 4:12-17.

ADD YOUR COMMENT

Powered By Indic IME