ஊரிலே

தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே கனமில்லை

For Jesus Himself testified that a prophet has no honor in his own country. (John 4:44)
Mt13:54-58; Mk6:1-6; Lk4:16-27; Ro13:7; 1The5:20; 1Pt1:7; 2Pt1:19-21.

ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல்லியிருந்தார். (யோவான் 4:44)

மத்தேயு 13:54-58; மாற்கு 6:1-6; லூக்கா 4:16-27; ரோமர் 13:7; 1 தெசலோனிக்கேயர் 5:20; 1 பேதுரு 1:7; 2 பேதுரு 1:19-21.

தீர்க்கதரிசி:

தீர்க்கதரிசி எனும்போது மறைவானவைகளை விளக்குகிறவர், பரிசுத்த ஆவியினால் இயக்கப்படுகிறவர் என்றுப்பொருள் படுகின்றது. தீர்க்கதரிசி தேவனுக்காக ஜனங்களிடம் நிற்பவர், தேவனின் இருதயத்தை கொண்டிருப்பவர்.

விவிலியத்தில் தீர்க்கதரிசியானவர் வெளிப்படுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு.
1. தேவ ஜனங்களிடம் பாவம் காணப்படும்போது. அதாவது, தேவனுடைய நோக்கத்தை விட்டு ஜனங்கள் வெளியேறும்போது தேவனுடைய மனந்திரும்புதலையும், கோபாக்கினையையும் அறிவிக்க வெளிப்படுகிறார்.
2. தேவ ஜனங்கள் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றும்போது அவர்களுக்குரிய வாக்குறுதியையும், ஆசீர்வாதங்களையும் அறிவிக்க வெளிப்படுகின்றார்.
3. தேவனுடைய ஆலோசனையையும், வழிகாட்டுதலையும் வெளிப்படுத்த தீர்க்கதரிசிகளை எழுப்புகிறார்.

தீர்க்கதரிசி தனித்து இயங்க முடியாது. தீர்க்கதரிசி தனித்து இயங்குகின்றானென்றால் பொய்யனாகின்றான். தீர்க்கதரிசியும், தேவ ஆவியும் இணைந்து செல்லுவதே மெய்யான தீர்க்கதரிசியின் அடையாளம்.

தீர்க்கதரிசி தனது சொந்த ஊரிலே கனமடையாத காரணம் மேலே சொல்லப்பட்ட 3 காரணங்களே. தீர்க்கதரிசியானவர் கண்டித்து உணர்த்தும்போது, தங்களை அறிந்துகொண்டு தன்னிஷ்டமாக அறிவிக்கின்றார் என்று கூறி வெறுக்கின்றனர். இதனால் தீர்க்கதரிசி தன் ஊரில் கனமடைய இயலாது. nazareth manifesto.
பொதுவாக, தீர்க்கதரிசன பணி மக்களிடம் கனமடையும் பணி அல்ல, தேவனிடம் கனம் பெறும் பணியாகும்.

ஜனங்களின் வெறுப்பையும், தேவனின் விருப்பையும் பெறும்பணி.(எரேமியா 1:6-10,17; எரேமியா 20:7-9).

தீர்க்கதரிசியானவன் தமக்கு கீழ்படியவேண்டும் என்று தேவன் ஒருபுறத்தில் நெருக்க, இன்னொருபுறத்தில் தங்களுக்கு கீழ்படியவேண்டும் என்று தீர்க்கதரிசியை ஜனங்கள் நெருக்குகின்றனர். இந்த போராட்டமே தீர்க்கதரிசியின் பாடுகள். இதனை கிறிஸ்துவிலும் காண்கின்றோம்.

தீர்க்கதரிசிகள் அதிகமாய் எழும்புகின்றார்களென்றால், ஒன்றில் கிறிஸ்தவம், தேசம் தாறுமாறாய் போகிறது என்று பொருளாகும். இல்லையெனில் கிறிஸ்தவம், தேசம் சரியான பாதையில் செல்லுகிறது என்று பொருளாகும்.

ஒரு தீர்க்கதரிசி யாவராலும் வெறுக்கப்படுகின்றானென்றால் அனேகமாக அவன் சரியான தீர்க்கதரிசியாகவே இருக்க கூடும்.

தீர்க்கதரிசியின் எழுச்சியை ஒருவராலும் கணிக்க முடியாது. எப்பொழுது எழும்புகிறார், மறைகிறார் என்று துல்லிபமாக கணிக்கவியலாது. இதனாலேயே அனேக கள்ளர்களை அடையாளம் காண்பது கடினமாயுள்ளது. ஆயினும் அவர்களின் கனிகளாலே அவர்களை அடையாளம் காணலாம்.

கர்த்தாவே, நீர் உமது குமாரனை கனம் பெறும்படியாகவோ, புகழடையும்படியாகவோ உலகிற்கு அனுப்பாமல் பாவம் பரிகரிக்கப்பட வேண்டும், சத்துரு பரிகரிக்கப்பட வேண்டும், மனிதர் மீட்கப் பட வேண்டும் என்பதற்காகவே அனுப்பினீர். அன்று அவரை சரியாக அறியாத யூதர் அவரை சிலுவைக்கு அனுப்பியதுபோல, இன்றைக்கும் அவரை அறியாத கிறிஸ்தவம் அவரை மறுபடியும் சிலுவையில் அறைய முயற்சிக்கின்றது. கர்த்தாவே இரட்சியும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME