அடையும்படி

தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருப்பார்கள்.

those who have done evil, to the resurrection of condemnation. (John 5:29)
Mt10:28; Mt25:41-46; Ro2:6,8,9; Gal6:8a; 1Thes5:22; 2Thes1:7,8; 1Pet3;12b; Ecc8:12,13; Eze33:20.

அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். (யோவான் 5:29)

மத்தேயு 10:28; மத்தேயு 25:41-46; ரோமர் 2:6,8,9; கலாத்தியர் 6:8a; 1 தெசலோனிக்கேயர் 5:22; 2தெசலோனிக்கேயர் 1:7,8; 1 பேதுரு 3;12b; பிரசங்கி 8:12,13; எசேக்கியேல் 33:20.

தீமை செய்தவர்கள்:

விசுவாசத்தில் நிலைநிற்காமல் நன்மை செய்தவர்கள் தீமை செய்தவர்களாகவே கருதப்படுவர்.

நன்மை செய்யாமல் விசுவாசம் கொள்பவர்களும் தீமை செய்தவர்களாகவே கருதப்படுவர்.

தேவன் மனிதனை தீமை செய்யும்படியாக அல்ல, நன்மை செய்யும்படியாகவே உண்டாக்கினார்.

பொருளாசை, விக்கிரகவணக்கம்,விபசாரம் போன்றவைகள் எந்த மனிதனையும் தீமைக்கு நேராகவே வழிநடத்தும்.

சன்மார்க்கனாயிருந்தும் கிறிஸ்துவின்மேல் விசுவாசம் கொள்ளாமலும் கிறிஸ்துவை ஏற்றுகொள்ளாமலும் இருந்தால் தீமைசெய்தவர்களின் கூட்டத்தில் தான் செல்லவேண்டியதிருக்கும்.

லஞ்சம் வாங்கி நன்மை செய்கிறவர்களும், கொள்ளையடித்து நன்மை செய்கிறவர்களும், வன்முறை வெறியாட்டம் ஆடி நன்மை செய்கிறவர்களும் தீமை செய்கிறவர்களே.

பாவத்தை கொண்டிருந்து நன்மையின் பாதையில் ரொம்பநாள் பயணிக்கமுடியாது.

கசப்பு, வெறுப்பு, சூதுவாது, பிரிவினையின் இருதயம், கனம்பண்ணாமை, ஈவிரக்கமற்ற செயல், மனிதாபிமானமற்ற செயல், ஈனதனமான செயல்யாவும் தீமை செய்தலின் காரண காரியங்கள்.

குடும்ப உறவை சிதைப்பவர்கள்,கணவன் மனைவி உறவை பிரித்துகொள்கிறவர்கள், பலதார திருமணங்கள், தேவன் இணைத்த பந்தத்தை முறித்தவர்கள், தாய் தகப்பன்மாரை மதியாதிருத்தல், பிள்ளைகளை பக்திக்குரிய வழியில் நடத்தாதிருத்தல் யாவும் தீமையின் செயல்களே.

தீமை செய்தவர்கள் தேவனுடைய கோபாக்கினையின் பாத்திரங்கள், அவரின் தண்டனைக்குரியவர்கள்.

எனவே, நம்மில் காணப்படும் தீமையின் சிறு உருகூட நம்மைவிட்டு வெளியேற்றப்பட்டு நம்மை தம் இரத்தத்தால் இரட்சித்து அவரின் சிந்தையை தந்துள்ளவரை நோக்கி பொறுமையாக ஓடக்கடவோம்.

கர்த்தாவே, நாங்கள் உங்கள் குமாரனின் சரீரத்துக்குட்பட்டவர்களாயிருந்தும் சாத்தானின் குணநலங்களை வெளிப்படுத்துகிறவர்களாக இருந்துள்ளோம். எங்களை மன்னியும். இனி நாங்கள் எங்கள் வாழ்நாளளவும் கிறிஸ்துவின் குண்நலன்களை தரித்துகொண்டவர்களாக வாழவும் அனேகருக்கு நாங்கள் ஒளி கற்களாக இருந்து ஒளி கொடுக்கவும் எங்களுக்கு கிருபை செய்தருளும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME