திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்.

The thief does not come except to steal, and to kill, and to destroy. (John 10:10)

Jn10:1; Jn12:6; Mt21:13; Mt23:14; Mk11:17; Rom2:21; 2Pet2:1-3; Isa56:10,11; Eze34:2-4; Hos7:1.

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோவான் 10:10)

யோவான் 10:1; யோவான் 12:6; மத்தேயு 21:13; மத்தேயு 23:14; மாற்கு 11:17; ரோமர் 2:21; 2பேதுரு2:1-3; ஏசாயா 56:10,11; எசேக்கியேல் 34:2-4; ஓசியா 7:1.

திருடன்:
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மந்தைகளை செம்மையாக வழிநடத்தாத மேய்ப்பனையும், மந்தையின் கொழுமையின் மேல் நோக்கமாயிருக்கும் மேய்ப்பனையும், இயேசுவின் காலத்து சமய தலைவர்களையும் குறிப்பிடும்படியாக இவ்வாறு கூறுகின்றார். திருடனின் நோக்கம் பலன்பெறுவது மட்டுமே. இந்த திருடனைபோல எவரெல்லாம் மந்தைகளின்பலன்மேல் நோக்கமாயிருக்கிறார்களோ அவர்களெல்லாம் திருடர்கள். மந்தையின் வளர்ச்சியிலும், மந்தையின் சுகத்திலும் நலத்திலும் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தாத மேய்ப்பர்கள் திருடர்களே.

திருடர்கள் பக்கவழியாய் நுழைகின்றவர்கள், நேர்வழி நில்லாதவர்கள், சூதுவாது செய்கிறவர்கள், உலகத்தின்மேல் வாஞ்சையுள்ளவர்கள். இவர்களின் தேவன் வயிறு. இக்காலத்தின் மேய்ப்பர்களில் பலர் பலன்தேடும் நற்கிரியைகளின் போதகர்கள். தேவனால் அனுப்பப்படாதவர்கள். பெரிய கட்டளைமீது வஞ்சையில்லாதவர்கள். ஆன்ம சுத்திகரிப்பு, சரீர சுத்திகரிப்பு இல்லாதவர்கள். பாவத்தின் பிள்ளைகளாக இருக்கின்றவர்கள்.
விசுவாச குடும்பங்கள் திருடனாகிய சாத்தான், கடன்கள், வறுமைகள், தீராவியாதி போன்றவைகளினால் பாதிக்கப்பட்டு நிற்கதியாய் நிற்கும்போது மனித திருடர்களால் மேலும் சோதனைக்குள்ளாகின்றனர்.

திருடன் கொல்லுவதும், அழிப்பதும் அவனுடைய நோக்கம். மீட்பு என்பது இதற்கு எதிர்மாறானது. நரகத்துக்கும், பாதாளத்துக்கும், மரணத்துக்கும் எதிரானதே மீட்பு.

திருடர்களாகிய கள்ளத்தனமான ஈனத்தனமான பாவத்திலே வாழ்கின்ற ஊழியர்களைவிட்டு உண்மை ஊழியராகிய கிறிஸ்துவையே பற்றிக்கொள்ளுங்கள்.

விசுவாச குடும்பங்களை நரக வாழ்வுக்கு போகாமல் காப்பாற்றாதவனே உண்மை திருடன்.
நாம் இயேசுவின் பிள்ளைகள். அவரையே பின்பற்றுவோம்.

கர்த்தாவே உமது மகனின் ஆலோசனைக்கு உட்படாமல் சாத்தானின் ஆலோசனைக்கு நேராக வழிநடத்தும் திருட்டுதனமானவர்களை அடையாளம் கண்டுகொள்ளும் ஞானத்தை தாரும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME