திரளான ஜனங்கள் பின்சென்றனர்

திரளான ஜனங்கள் பின்சென்றனர்

Then a great multitude followed Him, because they saw His signs which He performed on those who were diseased. (John 6:1-4)
Mt4:24,25;8:1;12:15;13:2;14:14;15:30,31; Mt14:23;15:29;Lk6:12,13;9:28l; Jn11:55;12:1;13:1; Ex12:6-14;Lev23:5,7;Deu16:1.

அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள். ( யோவான் 6:2)

மத்தேயு 4:24,25; மத்தேயு 8:1; மத்தேயு 12:15; மத்தேயு 13:2; மத்தேயு 14:14; மத்தேயு 15:30,31; மத்தேயு 14:23; மத்தேயு 15:29; லூக்கா :12,13; லூக்கா 9:28l; யோவான் 11:55; யோவான் 12:1; யோவான் 13:1; யாத்திராகமம் 12:6-14; லேவியராகமம் 23:5,7; உபாகமம் 16:1.

கலிலேயா கடல் அக்கரை:

1. இயேசு வியாதியஸ்தர்களிடத்தில் செய்த அற்புதங்களை கண்டு திரளான ஜனங்கள் அவருக்கு பின்சென்றனர். அற்புதங்கள் கவர்ச்சிக்காகவும், புகழ்க்காகவும், பணத்துக்காகவும் செய்யப்படவில்லை. மாறாக.

– இயேசு தேவனுடைய குமாரன் என்று நிரூபிப்பதற்காக.
– மனிதரில் தேவன் தங்குவாரானால் அற்புதங்கள் தானாய் நடக்கும் என்பதற்கான நிரூபணம்.
– ஜனங்கள் பரலோக செய்தியை கேட்பதற்காகவும், கேட்டு பரலோக தேவனையும், இயேசுவையும் விசுவாசிப்பதற்காகவும் செய்யபட்டவை.
– அற்புதங்கள் இயேசு வாழ்கிறார், தேவன் இருக்கிறார் என்பதற்கான அத்தாட்சி.
– அற்புதங்கள் பிதாவுக்கும், குமாரனுக்கும் உள்ள தொடர்புகளின் வெளிப்பாடு.
– ஜனங்கள்மேல் தேவன் மனதுருக்கம் உடையவராய் இருக்கிறார் என்பதற்கான அத்தாட்சி.
– பரலோக செய்தியை சொல்ல கூட்டி சேர்க்கும் பரலோக மணியோசை.

இந்த அற்புதங்கள் திரளான ஜனங்களை இயேசுவிடம் கொண்டு வந்தது. இயேசு அந்த ஜனங்களை தம் தந்தையிடம் நெருங்க வைத்தார்.

2. இயேசு மலையின்மேல் சீஷருடன் உட்கார்ந்தார்.
இயேசுகிறிஸ்துவின் மலை அனுபவம் 3 விஜயங்களை உள்ளடக்கியது.
– தேவனோடு தனித்திருக்கும்படியான அனுபவம்.
– ஜனங்களுக்கு பரலோக செய்தியை கொடுக்கும்படியாக பயன்பட்ட இடம்.
– சீஷர்களுடன் ஆலோசிக்கவும், அவர்களுக்கு உபதேசிக்கவும் தெரிந்துகொள்ளப்பட்ட இடம்.

இந்த மலை அனுபவம் நமக்கு தேவை. நாம் தேவனோடு தனித்திருக்கும் சில நிமிட நேரங்களே நமது உன்னத அனுபவ நேரம்.

கர்த்தாவே நங்கள் உம்மை நம்பி உம் குமாரனின் அனுக்கிரகங்களை பெற அவரை பின்பற்றுகிறோம். மேலும் நாங்கள் அவரோடும், உம்மோடும் சில நேரங்களை செலவிடதக்கதாக எங்கள் வாழ்க்கை பயணத்தில் ஒரு அத்தியாயத்தை எங்களுக்கு உருவாக்கித்தர தாழ்மையுடன் கேட்கிறேன்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME