இந்தத் தைலத்தை 300 பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன

இந்தத் தைலத்தை 300 பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன?

Why was this fragrant oil not sold for three hundred denarii and given to the poor? (John 12:5)

Jn6:7; Jn13:29; Mt20:2; Mt26:8,9; Mk14:4,5; Lk12:33; Lk18:22; Gal2:10; Act11:29; Jos7:11; 2Kin5:20f; Am8:5.

இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான். (யோவான் 12:5)

யோவான் 6:7; யோவான் 13:29; மத்தேயு 20:2; மத்தேயு 26:8,9; மாற்கு 14:4,5; லூக்கா 12:33; லூக்கா 18:22; கலாத்தியர் 2:10; அப்போஸ்தலர் 11:29; யோசுவா 7:11; 2இராஜாக்கள் 5:20f; ஆமோஸ் 8:5.

தரித்திரரை நினைவுகூர்.
தினாரி என்பது ரோமர்களின் பணம். 300 தினாரி என்பது 3898 கிராம்.
இந்த வார்த்தையை இயேசுகிறிஸ்து கூறவில்லை. மாறாக யூதாஸ் கூறுகின்றான். சுவிசேஷங்களில் அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்திருந்தபடியினாலும் விசனப்பட்டு முறுமுறுத்தவனாய் கூறினான் என்று சொல்லப்பட்டுள்ளது. உள்ளத்தில் கசப்பும், வெறுப்பும், இச்சையையும், வன்மமும் கொண்டிருந்து தரித்திரரை குறித்த வாஞ்சையுள்ளவர்களாயிருத்தல் இயலாத காரியம். எளியவர்களின் பெயரைச் சொல்லி வஞ்சிக்கிறதும், ஏமாற்றுகிறதும், கொள்ளையடிப்பதும் தற்கால சமுதாயத்தில் கைவந்த கலையாக உல்ளது.

ஆதிசபையில் எளியவர்களை நினைவுகூரும்படியான சிந்தை, விருப்பம், ஆர்வம், அமைப்பு இருந்தது. இதனால் உள்ளவர்கள் எளியவர்களை தாங்கிப்பிடித்தனர். ஆனால் காலம் செல்ல செல்ல அனேக யூதாஸ்கள் சபைகளில் பெருக துவங்கினார்கள். எளியவர்களை குறித்த உணர்வே சபைகளில் இல்லாமல் போய்விட்டது. எளியவர்க்கு இரங்க வேண்டுமென்ற ஆர்வமுள்ளோர் சபைகளில் முற்றாக குறைந்து விட்டார்கள். வசதி படைத்தோர் தங்களை கர்த்தர் ஆசீர்வதித்துள்ளார் , நாங்கள் சுகமாய் உள்ளோம் என்று கூறுகின்றனர். எளியவர்களை, தரித்திரர்களை பாவத்தின் மக்களாக, சாபத்தின் மக்களாக, கீழ்படியாமையின் மக்களாக பாவிக்கின்ற சபைதலைவர்களும், வசதிபடைத்தோரும் சபைகளில் பெருகி விட்டார்கள்.

இயேசுகிறிஸ்து எல்லாம் துறந்து தரித்திரராக வந்து தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாக மாற்ற இங்கு வந்தார். அவரின் சரீரமாகிய சபையார் எளியவர்களை உளபூர்வமாக, உணர்வுபூர்வமாக நேசியுங்கள். எளிய ஊழியகாரர்களை நேசித்து கனம் பண்ணுங்கள். எளிய விசுவாசிகளை அரவனைத்து கொள்ளுங்கள்.

அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில் கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும் தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள். 2கொரிிந்தியர் 8:2.

ADD YOUR COMMENT

Powered By Indic IME