விசுவாசிக்கிறவர்கள்

தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகும் ஆவியைக் குறித்து கூறினார்.

He spoke concerning the Spirit, whom those believing in Him would receive. (John 7:39)

Jn14:16,17,26; Lk3:16; Lk24:49; Act1:4-8; Act2:4,17,38; Act4:31; Ro8:9; Eph1:13,14; Eph4:30; Pr1:23; Isa12:3; Isa32:15; Isa44:3; Joe2:28.

 தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச்சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி இன்னும் அருளப்படவில்லை. (யோவான் 7:39) 

யோவான் 14:16,17,26; லூக்கா 3:16; லூக்கா 24:49; அப்போஸ்தலர் 1:4-8; அப்போஸ்தலர் 2:4,17,38; அப்போஸ்தலர் 4:31; ரோமர் 8:9; எபேசியர் 1:13,14; எபேசியர் 4:30; நீதிமொழிகள் 1:23; ஏசாயா 12:3; ஏசாயா 32:15; ஏசாயா 44:3; யோவேல் 2:28.

விசுவாசிக்கிறவர்கள் பெறும் ஆவி:

பரிசுத்த ஆவியானவர் பழைய ஏற்பாட்டின் பிரதான வாக்குத்தத்தமாவார். மாம்சமான யாவருக்கும் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுவார் என்று கூறப்பட்டது. இதன் பொருள் என்னவெனில் பேதம் பார்க்காமல் எல்லா மனிதருக்கும் ஆவியானவர் கொடுக்கப்படுவார் என்பதாகும்.
ஆனால் அதற்கொரு நிபந்தனை உண்டு. அது என்னவெனில் இயேசுவை கிறிஸ்து என்றும், ஆண்டவர் என்றும், மீட்பர் என்றும் விசுவாசிக்க வேண்டும் என்பதாகும்.

இயேசுவை விசுவாசிப்பதற்கும், இயேசுவினிடத்தில் விசுவாசம் வைப்பதற்கும் துணிவு வேண்டும். இயேசுகிறிஸ்து பிதாவின் விருப்பத்தை நிறைவேற்றுகிறவர்.
நாம் கிறிஸ்துவின் வார்த்தைகளை விசுவாசிக்க வேண்டும்.

முன்னர் நாம் அறிந்துள்ளதின்படி இயேசுவை விசுவாசித்தல்,
இயேசுவின் வார்த்தைகளை விசுவாசித்தல்,
இயேசுவின் கிரியைகளை விசுவாசித்தல் என்பதுவே விசுவாசபாதையாகும்.
விசுவாசத்தின் வழி பரிசுத்த ஆவியை பெறுகின்றோம்.
பரிசுத்த ஆவியினால் தேவ வாக்கியங்களை விளங்கிக்கொள்கின்றோம்.
தேவ வாக்கியங்களினால் நாம் அவருடைய சாட்சிகளாகவும், அவரால் ஆசீர்வதிக்கப்படுகிறவர்களாகவும் மாறுகின்றோம்.

விசுவாசியுங்கள்…
ஆவியின் நிறைவை பெறுங்கள்.

கர்த்தாவே, உம் மகனை விசுவாசித்து உம் ஆவியை பெற்றுக்கொள்ள எங்களுக்கு போதித்தமைக்காக நன்றி. நாங்கள் இந்த விசுவாச பாதையில் நின்று முன்னேற எங்களுக்கு உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME