தம்மிடம் கேட்கும்படி விரும்புகிறதை அறிந்தார்

தம்மிடம் கேட்கும்படி விரும்புகிறதை அறிந்தார்.

Now Jesus knew that they desired to ask Him, (John 16:19)

John 16:30; John 2:24,25; John 21:17; Matthew 6:8; Matthew 9:4; Mark 9:33,34; Hebrew 4:13; Revelation 2:23; Psalm 139:1-4.

அதைக்குறித்துத் தம்மிடத்தில் கேட்கும்படி அவர்கள் விரும்புகிறதை இயேசு அறிந்து, அவர்களை நோக்கி: கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே விசாரிக்கிறீர்களோ? (யோவான் 16:19)

யோவான் 16:30; யோவான் 2:24,25; யோவான் 21:17; மத்தேயு 6:8; மத்தேயு 9:4; மாற்கு 9:33,34; எபிரெயர் 4:13; வெளி 2:23; சங்கீதம் 139:1-4.

நாம் விரும்புகிறதை அறிவார்.

இயேசுகிறிஸ்து தமது சீஷர்களின் உள்ளத்தில் இருப்பதை அறிந்து பேசுகிறவர். சீஷர்கள் விரும்பி கேட்பதையும் தெளிவுப்படுத்துகிற நல்ல குருவாயிருந்தார். தம்மை பின்பற்றுகிறவர்கள் எதை கேட்டாலும் கொடுப்பதாகவும், அதை குறித்து போதிப்பதாகவும் கூறியுள்ளார். அவரால் போதிக்கப்பட்ட சீஷர்கள் தங்களை பின்பற்றுகிறவர்களிடம் நீங்கள் எதை கேட்டாலும் தருவார் என்று விசுவாசபாதையில் அவர்மேல் சார்ந்திருக்கும்படி போதித்தனர். இன்னும் ஒருபடி மேலே சென்று நமக்குள் விருப்பத்தையும் செய்கையையும் உருவாக்குகிறவர் என்றும் கூறலாயினர்.

கர்த்தராகிய இயேசு எங்கு போகிறார், எப்படி போக இருக்கிறார், எப்பொழுது போகிறார், திரும்ப எப்படி வருவார் என்று அறிய விரும்பினர் சீஷர்கள். அதற்கு விடையாக பலதருணங்களில் பல மேன்மையான செய்திகளை சீஷர்களுக்கு உரைத்தார்.

தேவனுடைய மக்களாகிய நாம் தேவ குமாரனால் மீட்கப்பட்டு தேவ ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள். தேவனுடைய வழியிலே நடக்க அழைக்கப்பட்டுள்ளவர்கள். கிறிஸ்துவை போல பிதாவின் விருப்பத்தை அறிந்து அதற்கேற்றாற்போல் செய்து தேவனின் நாமம் மகிமைபடவே பரிசுத்த ஆவியானவர் நம்மில் கொடுக்கப்பட்டுள்ளார். பரிசுத்த ஆவியானவர் அழிவுக்குரியவைகள் மீதும், இச்சைகளை உண்டாக்கக்கூடியவைகள் மீதும், பொருளாசையை சார்ந்து செல்லும்படியும் ஒருபோதும் நமக்குள் விருப்பத்தை உண்டாக்கமாட்டார். நாம் நமது சொந்த விருப்பங்களின்படி வாழ பிரயாசப்பட்டு இழந்து போனவைகளுக்கு அவர் கணக்கு கட்ட வரமாட்டார். ஆனால் நாம் ஆவியின் வழியில் நடப்போமானால் அதிலிருந்து மீண்டு வரும்படியும், அதன்பின்பு அவருடைய இராஜ்ஜியத்தை கட்டும்படியும் சிந்தையை உண்டாக்குவார்.

நாம் உலகபிரகாரமாக சவுகரியமாக வாழ்வதற்காக அவர் நம்மை இரட்சிக்கவில்லை. பாவத்தில் அழிந்துபோகும் மனுகுலம் மீட்கப்பட்டு இராஜ்ஜியத்துக்குரியவைகளாய் மாற்றப்படும்படிக்காகவே நம்மை இரட்சித்தார். இத்தியாதி விருப்பமும் செய்கையும் நம்மில் உண்டாக்குகிறவர் அவரே. அதோடு நம் வாழ்வுக்குரியவைகளையும் அவர் தந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

எனக்குப் பியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார். நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்றபிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள். பிலிப்பியர் 2:12-16.

ADD YOUR COMMENT

Powered By Indic IME