தமது குமாரனை கிருபாதாரபலியாக அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.
In this is love, not that we loved God, but that He loved us and sent His Son to be the propitiation for our sins. (1John 4:10)
1John 2:2; Romans 3:25,26; 1Peter 2:22-24; 1Peter 3:18; 1Peter 4:1; Daniel 9:24; Revalation 7:9-14.
நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. (1 யோவான் 4:10)
1யோவான் 2:2; ரோமர் 3:25,26; 1பேதுரு 2:22-24; 1பேதுரு 3:18; 1பேதுரு 4:1; தானியேல் 9:24; வெளி 7:9-14.
ஆதி அன்பு.
அன்பு தேவனிடமிருந்து உண்டாகிறது என்பதை முன்னர் நாம் அறிந்தோம். தேவனுக்குள் அன்பு இருந்தது. அவர் அன்பாயிருக்கிறார் என்பது விவிலிய பாடம். இந்த அன்பு தேவனிடமிருந்து வெளிப்பட்டது. இதனை மூன்று விதங்களில் நாம் புரிந்துக் கொள்ளலாம். தேவனுக்குள் ஆதியிலேயே இருந்த அன்பு. தேவன் தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் காண்பித்த அன்பு. தேவன் வீழ்ந்த மனுகுலத்தின் மீது காண்பித்த அன்பு. இது ஒருவழி அன்பாக அறியப்படுகின்றது. கிறிஸ்து பிதாவுக்கு கீழ்படியும்போதும், மனுகுலம் தேவனுக்கு கீழ்படியும் போதும் இந்த அன்பு இருவழி அன்பாக மாறுகின்றது. ஆனாலும் அன்பு தேவனிடத்திலிருந்தே உண்டாகியது. ஆனால் இந்த அன்பை பூமிக்கு கொண்டுவந்த விதம் ஒரே வழிதடமாக அறியப்படுகின்றது. அதாவது தேவன் தமது அன்பை குமாரனில் கொடுத்து குமாரன் வழியாக அந்த அன்பை முனுகுலத்துக்குக் கொடுக்கின்றார். ஆகவே இந்த ஆதி அன்பை அறிய இயேசு கிறிஸ்துவினிடமே செல்ல வேண்டும்.
இந்த 10 ஆம் வசனத்தில் தேவன் மனுகுலத்தை நேசித்ததினால் தமது அன்பின் குமாரனை கிருபையின் பலியாக கொடுத்து அன்பை உண்டுபண்ணினார் என்று கூறுகின்றார் ஆசிரியர். தேவனிடமிருந்து கிறிஸ்துவில் வெளிப்பட்ட அன்பு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்படுகிறவர்களில் மட்டுமே உருவாகும். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இயேசு கிறிஸ்து எனக்காக மரித்து என் பாவங்களை மன்னிக்கிறார். அவருடைய இரத்தத்தால் கழுப்வப்படுகிறேன் என்று விசுவாசித்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் திருமுழுக்கு பெற்றுக்கொண்டு இயேசு கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்குள் அமையும்போது இந்த அன்பு மனிதனில் உண்டாகின்றது.
இயேசு கிறிஸ்து பூமியில் பிறந்தபோதே தேவனுடைய அன்பு வெளிப்பட்டுவிட்டது. ஆனால் அவரை ஏற்றுக்கொள்ளும்போதுதான் அன்பு அந்த நபரில் உண்டாகின்றது. தன்னில் உண்டான அன்பினிமித்தம் நான்கு காரியங்களை செய்கிறான். எப்பொழுதும் இயேசுவை தனக்குள்ளும், தன்னிலும் சுமந்து செல்கிறான். இயேசுவையும் அவரின் அன்பின் பலியையும் பிறருக்கு கொடுக்க முயற்சிக்கின்றான். பிதாவாகிய தேவனை எப்பொழுதும் தொழுது கொள்ளுகிறவனாயிருக்கின்றான். தேவனுடைய வார்த்தையாகிய விவிலியத்தை நேசித்து அதன்படியாக தன் வாழ்க்கையை கட்டி எழுப்புகின்றான். இப்பொழுது பூமியெங்கும் ஆதி அன்பின் பிரவாகம் பிரவாகித்துக் கொண்டிருக்கும்.
ஆதி அன்பை இயேசு கிறிஸ்துவின் கிருபாதார பலியின் மூலமாக மட்டுமே விளங்கிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பிறரில் தேவனின் அன்பு உருவாக நாமும் நம்மை பலியாக்க ஒப்புக்கொடுப்போம். ஆதி அப்போஸ்தலர்கள் இவ்விதமே நடந்துக்கொண்டார்கள். சபைகளில் காணப்படும் ஒவ்வொரு பதவிகளும் தங்களை பலியாடுகளாக முன்னணியத்தில் நிறுத்திக்கொள்ள முன்னெடுக்கும் செயல் என்று சபைதலைவர்கள் புரிந்துக் கொள்வார்களெனில் பிரவாகித்து வரும் கிறிஸ்துவின் அன்பை ஒருவரும் தடுக்கவியலாது.
உங்கள் விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் வார்க்கப்பட்டுப்போனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன். பிலிப்பியர் 2:17.
ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:1,2.
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. ரோமர் 12:1.
சகோதரரே, புறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு, நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து புறஜாதிகளுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகும்பொருட்டு, தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்தும்படிக்கு இவைகளை நான் அதிக தைரிமாய் எழுதினேன். ரோமர் 15:15,16.