தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்.
Whoever hates his brother is a murderer, and you know that no murderer has eternal life abiding in him. (1John 3:15)
Genesis 27:41; Genesis 4:8; Levitics 19:16-18; 2Samuel 13:22-28; Proverb 26:24-26; Matthew 5:21,22,28; Mark 6:19; Acts 23:12,14; James 1:15; James 4:1,2.
தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான். மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள். (1 யோவான் 3:15)
ஆதியாகமம் 27:41; ஆதியாகமம் 4:8; லேவியராகமம் 19:16-18; 2சாமுவவேல் 13:22-28; நீதிமொழிகள் 26:24-26; மத்தேயு 5:21,22,28; மாற்கு 6:19; அப்போஸ்தலர் 23:12,14; யாக்கோபு 1:15; யாக்கோபு 4:1,2.
ஜீவனில்லாதவன்.
தன் சகோதரனைப் பகைத்து, வெறுத்து, ஒதுக்குகிறவன், மன்னிக்காதவன், கொடுத்துதவாதவன் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான். அவனுக்குள் நித்திய ஜீவன் இல்லாததினால் காட்டு மிருகங்களை விடவும் ஈவிரக்கமில்லாத கொடியனாயிருக்கிறான். காயீனின் செயலை சுட்டிக் காட்டுகின்றார் ஆக்கியோன்.
இயேசு கிறிஸ்துவின் ஜீவனைப் பெற்றுக்கொள்ளாதவர்களிடம் உள்ள பல குணங்களில் ஒன்று கொலைபாதகம் ஆகும். செத்துக்கொண்டிருக்கின்ற மனிதன்மேல் கடைசி நேர இரக்கம் காண்பிக்காதவனும், மனுஷனுக்கு வரப்போகிற அழிவைக் குறித்து கவலையற்றவனும் மனுஷகொலைபாதகனேயாவான். தங்களுக்கு பிடிக்காதவர்களை அழிக்க நினைப்பதும், தான் மட்டும் உயர்ந்திருக்க விரும்பி பிறரை கீழ்படுத்துவதும் மனுஷ கொலைபாதகமேயாகும். மனிதாபிமானமும், மனசாட்சியும் இல்லாதவர்களாயிருக்கிறார்கள். மக்களின் அழிவைக் கண்டு மனம் துடிக்காத ஆட்சியாளர்கள் இரத்த காட்டேரிகளாக இருக்கிறார்கள்.
இயேசு கிறிஸ்து மட்டுமே தன் ஜீவனை மனிதனின் ஆன்ம ஈடேற்றத்திற்காக கொடுத்தார். உலகத்தில் வேறு எவரும் எந்த மத தலைவர்களும் தங்கள் ஜீவனை கொடுக்கவில்லை. ஆகையினால் ஜீவனை கொடுத்த இயேசுவின் ஜீவனை பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமே பிறத்தியாரின் ஜீவன்மேல் கரிசனையுள்ளவர்களாயிருப்பர். ஜாதி, மதம், இனம், மொழி, நாடு அடிப்படையில் பிரிவினைபேசி வெறுப்புணர்வை தூண்டுகிறவர்களும் ஜீவனில்லாதவர்களே. பட்டயத்தை தூக்குகிறவனும் பழிக்குபழி வாங்க துடிக்கிறவனும் ஜீவனில்லாதவனே. பிறரின் நன்மைக்காக உழைக்காத யாவரும் கிறிஸ்துவின் ஜீவன் இல்லாதவர்களே.
இயேசு கிறிஸ்து நமக்காய் ஜீவன் தந்தார். நம்மில் இருந்த ஜீவன் பாவத்தோடு பங்காளித்துவம் கொண்டு தேவனுடைய வார்த்தைகளுக்கும் ஜீவனுக்கும் எதிரிடையாக நின்று தேவனுடைய குமாரனை கொன்றவர்களோடு உறவு வைத்துகொண்டு காணப்பட்டதாகும். இந்த ஜீவன் தேவனால் மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கும்படி மரண வாசனையினால் கட்டப்பட்டதாகும். இயேசு கிறிஸ்துவின் ஜீவனை ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் மட்டுமே இந்த மரண கண்ணியிலிருந்து விடுபட்டு ஜீவனுக்குரியவர்களாயிருக்கிறார்கள். ஆகையினால் நன்மை செய்வதிலும் ஜீவனை காப்பதிலும் கவனம் செலுத்துகிறார்கள்.
உபத்திரவப்படுத்துகிற சக விசுவாசிக்கும் சக ஊழியனுக்கும் உதவி செய்யாதபடிக்கு தன் இருதயத்தை அடைத்துக் கொள்ளுகிற எவனும் மனுஷ கொலைபாதகனே. கிறிஸ்துவின் ஜீவன் இல்லாதவனே. நம் நாட்டில் உள்ள வசதி படைத்த கிறிஸ்தவர்கள், ஊழியர்களெல்லாம் கிறிஸ்துவின் ஜீவனை உடையவர்களாய் இருந்திருப்பார்களெனில் கிறிஸ்தவ சமுதாயத்தில் எளிய விசுவாசிகளும், எளிய ஊழியர்களும், நிறைய விசுவாசிகளை கொண்டிருந்தும் இடமில்லாலிருக்கிற ஊழியர்களும் இருந்திருக்க மாட்டார்கள்.
நாம் கிறிஸ்துவிடமிருந்து ஜீவனையும் நன்மையையும் பெற்றுக்கொண்டிருந்திருப்போமெனில் அவைகளை பிறருக்கு கொடுக்க தயங்கமாட்டோம். நமது கைபலன்களின் பெருக்கமாக கருதுவதினால் தான் ஈகைதிறன் குறைந்து போயிற்று.
ஜீவன் உள்ளவன் எவனோ அவன் பிறரின் ஜீவனைக் காப்பாற்றுவான்.
கேள்வி. ஐசுவரிய தனித்தாள் கிறிஸ்தவ நிறுவனங்கள் கிறிஸ்துவின் ஜீவனை கொண்டிராதவர்கள் என்பது உண்மையா?
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும், எர்மோன்மேலும் சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார். சங்கீதம் 133.