தன் சகோதரனில் அன்புகூராதவன் தேவனால் பிறந்தவனல்ல

தன் சகோதரனில் அன்புகூராதவன் தேவனால் பிறந்தவனல்ல.

Whoever does not practice righteousness is not of God, nor is he who does not love his brother. (1John 3:10)

1John 3:7,8; 1John 2:29; 1John 3:14,15; 1John 2:9,10; 1John 4:8,21.

இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும். நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. (1 யோவான் 3:10)

1யோவான் 3:7,8; 1யோவான் 2:29; 1யோவான் 3:14,15; 1யோவான் 2:9,10; 1யோவான் 4:8,21.

தேவனால் பிறவாதவன் யார்?

நீதியை செய்யாதவன், நீதியைக் குறித்து பேசாதவன், நீதியாய் வாழாதவன் தேவனால் பிறந்தவனாயிராதபடியினால் அவன் பிசாசினால் பிறந்தவனாயிருக்கின்றான்.

சகோதரனை நேசிக்காதவன், தனக்கிருந்தும் சிறுமைப்பட்டுப்போன தன் சகோதரனுக்கு உதவி செய்யாதவனும், சகோதரன் படும் உபத்திரவத்தில் பங்கெடுக்காதவனும், சகோதரனை விசாரியாதவனும், சகோதரனை மன்னியாதவனும், சகோதரனுக்கு தீங்கு செய்கிறவனும் தேவனால் பிறவாதிருந்து பிசாசின் பிள்ளையாயிருக்கின்றான்.

விவிலியத்தில் இந்த இரு பாவகரமான காரியமும் மிகவும் பெரிய பாவங்களாக அறியப்பட்டுள்ளது.

நீதி செய்யாதவன் என்றால் தேவனை அறியாதவன் என்றுபொருள். தேவன் தமது நீதியை வார்த்தைகளிலும் கிரியைகளிலும் வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய கட்டளைகளின்படி செய்யும்போது அவரின் நீதி விளங்குகின்றது. அவருடைய செயல்களின் மூலம் தமது நீதியை வெளிப்படுத்தியுள்ளதினால் அவரது செயல்களை செய்யும்படி தூண்டப்படுகின்றோம். நீதி செய்யாதவன் என்றால் தேவனை நம்பாதவனாகவும், அவருடைய பிரமாணங்களுக்கு எதிர்த்து நிற்கிறவனாகவும், அவருடைய செயல்களை சேதப்படுத்துகிறவனாகவும் இருக்கிறவனாகையினால் அவன் தேவனால் பிறவாது பிசாசினால் பிறந்தவனாயிருக்கின்றான்.

சகோதர சிநேகத்தை ஆதியிலே குலைத்துப்போட்டவன் பிசாசாயிருக்கின்றான். சகோதர சிநேகத்தினால் ஒருமன செயற்பாடு விளங்குகின்றது. இந்த ஒருமன செயற்பாடுதான் தேவனோடு இணைந்து செலவதற்கும் பிறரோடு இணைந்து தேவனை தொழுகை செய்வதற்கும் தேவனுடைய பிரமாணங்களுக்கு கீழ்படிவதற்கும் தேவனுடைய செயல்களை தொடர்ந்து கொண்டு செல்வதற்கும் தேவனின் இராஜ்யத்தை அறிவிப்பதற்கும் மிகவும் அவசியமாயிருக்கின்றது. சகோதர உறவு அறுந்துபோகுமானால் இவைகள் அனைத்தும் செயலற்றுப்போகும். ஆகையினால்தான் அன்றுமுதல் இன்றுவரையிலும் தேவனுக்கு எதிர்த்து கலகம் விளைவிக்கிறவனாக மனிதன் காணப்படுகின்றான்.

சகோதர சிநேகத்தின் வெற்றிடமே அத்தனை விரோதங்களுக்கும் பகைமைக்கும் சண்டைகளுக்கும் பிரிவினைகளுக்கும் போட்டிகளுக்கும் அடிப்படைக் காரணமாயிருக்கின்றது. எல்லாவிதமான அக்கிரமங்களுக்கும் துர்கிரியைகளுக்கும் சகோதர சிநேகமின்மையும் நீதியை செய்யாதிருப்பதுமே காரணமாகும். தான் வாழ வேண்டும், தன் குடும்பம் வாழ வேண்டும் என்ற சுயசார்பு சிந்தனை மேலோங்கிவிட்டது. இவைகள் உடைக்கப்பட்டு பிரமாணங்களின்படி வாழ்ந்து ஒருவரிலொருவர் அன்புடையவர்களாயிருந்து தேவ நீதியை நிறைவேற்றும்படியாகவே சபைகூடிவருதலை உருவாக்கி தேவன் தமது இராஜ்யத்தைக் கட்டுகிறார்.

கேள்வி. தேவனால் பிறவாதவனோடு தேவனால் பிறந்தவன் இணைந்து பயணிக்க முடியுமா?

சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது. அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு. கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கநுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள். எபிரேயர் 13:1-3…

ADD YOUR COMMENT

Powered By Indic IME