நானே அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்க வந்தேன்.
I have come that they may have life, (John 10:10)
Jn3:17; Jn6:33,51; Jn12:47; Mt18:11; Mt20:28; Lk19:10; 1Tim1:15; 1Cor15:45.
திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோவான் 10:10)
யோவான் 3:17; யோவாான் 6:33,51; யோவான் 12:47; மத்தேயு 18:11; மத்தேயு 20:28; லூக்கா 19:10; 1தீமோத்தேயு 1:15; 1கொரிந்தியர் 15:45.
ஜீவன் கொடுக்க வந்தேன்:
இருளில் இருக்கிறவர்களுக்கு ஒளியாக வந்தவர், மரண திசையிலிருப்போருக்கு ஜீவன் கொடுக்க, வாழ்வு கொடுக்க வந்தார். மரணத்தோடு போராடிக்கொண்டிருந்தவர்களுக்கு ஜீவன் கொடுத்தார். மரண தூளில் மூழ்கிபோனவர்களுக்கும் ஜீவன் கொடுத்தார். மரணத்தை நோக்கி விரைகின்றவர்களுக்கும் வாழ்வு கொடுக்க வந்தார்.
இழப்புகளினாலும், தோல்விகளினாலும், ஏமாற்றங்களினாலும், தீராவியாதிகளினாலும், பாவங்களினாலும், சாபங்களினாலும், சாத்தானாலும், தீமைகளினாலும் மரணத்தை நோக்கி விரைகின்றவர்களுக்கு ஜீவன் கொடுக்கவும், வாழ்வு கொடுக்கவும் வந்தார்.
இயேசுகிறிஸ்துவினால் மூன்றுவித ஜீவன் கொடுக்க இயலும். மாம்சத்தில் மரண தூளை நோக்கி போகின்றவனுக்கு உலகவாழ்வுக்குரிய ஜீவனையும், ஆவிக்குரிய வாழ்வில் நரகை நோக்கி விரைகின்றவனுக்கு ஆவிக்குரிய ஜீவனையும், மரணத்தோடு முடிந்துபோகும் வாழ்வு என்று நினைத்து ஏனோதானோ என்று வாழ்கிறவனுக்கு விசுவாசத்தின் மூலம் நித்திய வாழ்வையும் கொடுக்க வந்தார்.
ஜீவனாய் வந்தவர் அவர் மட்டுமே. அதனால் அவரால் மட்டுமே ஜீவனை கொடுக்க முடியும். வேறு எவரை பின்தொடர்ந்தாலும், நம்பினாலும் ஜீவன் தர இயலாது. எனவே இயேசுவை பின்பற்றுங்கள். அவரை ஏற்றுகொள்ளுங்கள். அவர் உங்களில் வந்தால் நீங்கள் புத்துயிர் அடைந்து, புது பெலனடைந்து கழுகுகளை போல செட்டைகளை அடித்து உயர எழும்புவீர்கள். ஓடினாலும் இளைப்படையார். நடந்தாலும் சோர்வடையார்.
கிறிஸ்துவுக்குள் வந்தவர் மட்டுமே ஜீவன் பெற்றவர்கள். கிறிஸ்துவுக்குவெளியே ஜீவன் இல்லை. கிறிஸ்துவுக்குள் வாழாதோரும், கிறிஸ்துவுக்குள் வராதோரும் ஜீவன் பெற கிறிஸ்துவுக்குள் வாழ ஆயத்தமாகுங்கள்.
அவரே ஜீவன்.
அவர் கொடுப்பதே நித்திய ஜீவன்.
கர்த்தாவே உம் மகன்மூலம் எங்களுக்கு வாழ்வு தந்து எங்களை நித்திய ஜீவ கரை சேர்த்தமைக்காக உமக்கு ஸ்தோத்திரம்.