தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்

தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்.

He who loves his life will lose his life. (John 12:25)

Mt10:39a; Mt16:25a; Mk8:35a; Lk9:24a; Lk17:33a; 1Tim6:9,10; 2Tim2:16-18; 2Tim4:10; 2King5:20-27.

தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான், இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான். (யோவான் 12:25)

மத்தேயு 10:39a; மத்தேயு 16:25a; மாற்கு 8:35a; லூக்கா 9:24a; லூக்கா 17:33a; 1தீமோத்தேயு 6:9,10; 2தீமோத்தேயு 2:16-18; 2தீமோத்தேயு 4:10; 2இராஜாக்கள் 5:20-27.

இழந்து போவான்:
ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்து போவான். இங்கே ஜீவனைக் காப்பவன் அங்கே ஜீவனை இழந்து போவான். சிநேகிக்கிறவன் என்பதற்குரிய கிரேக்கச்சொல் தெய்வீக அன்பைக் குறிக்காது மனித அன்பை குறிக்கிறது. மனித அன்பு கொண்டு தேவ அன்பை விளங்கி கொள்ள முடியாது. தேவ அன்பை கொண்டுதான் மனித அன்பை விளங்கி கொள்ள முடியும். மாம்சத்தை சிநேகிக்கிறவனே ஜீவனை சிநேகிக்கிறவன் ஆவான். உலகை சிநேகிப்பவனே ஜீவனை சிநேகிக்கிறவன். இரட்சிக்கப்படாத உறவுகளை சிநேகித்து விசுவாசத்தை இழக்கிறவன் ஜீவனை இழப்பான்.

ஜீவனை சிநேகிப்பது இவ்வுலக காரியம். உடனடியாக நடக்கும் செயல். இதற்கு உடனடியாக தீர்வு உண்டாவதில்லை. சகலமும் சவுகரியமாக இருப்பதைபோல காணப்படும். ஆனால் சிநேகித்த ஜீவனை இழக்கின்ற ஒரு காலம் உள்ளது. அது அவரின் நியாயத்தீர்ப்பின் காலமாகும். தேவன் கொடுத்த ஜீவனை சிநேகித்து தேவனை விட்டு விலகி பின்வாங்கிப்போகிறவனின் ஜீவன் என்றும் மீண்டுவர இயலாத நரகத்திற்குள் தள்ளப்படும். அந்த ஜீவன் ஒருநாளும் திரும்ப மீட்கப்படவியாது போய்விடும். லூக்கா 16:23-31.

சவுகரியமான வாழ்வுக்காகவும், அற்ப நேர சிற்றின்பத்திற்காகவும், யாவரோடும் சமாதானமய் இருக்க வேண்டும் என்பதற்காகவும், நாட்டின் சட்டங்களுக்கும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்காகவும், ஆண்டவரால் கொடுக்கப்பட்ட ஜீவனை காத்துக்கொள்ள விரும்புகிறவன் அவருடைய வருகையின் நாளில் தன்னால் பத்திரமாக காக்கப்பட்ட ஜீவன் பறித்துக்கொள்ளப்படும் என்பதை மறக்க வேண்டாம்.

இந்த உலகம் நாம் வாழ்வதற்காகதான் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் என்றும் வாழப்போகும் உலகை அடைந்து கொள்வதற்காக தன் ஜீவனை தந்துள்ள இயேசுவை விட்டுவிலக முடியாது. இயேசு தன் ஜீவனை சிநேகித்திருந்தால் அவரும் அதை இழந்திருப்பார் நாமும் நித்திய ஜீவனை இழந்திருப்போம்.

இழக்க வேண்டியதை இழக்கலாம். ஆனால் இழக்கக்கூடாததை இழந்து விடலாகாது.

ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். எபிரெயர் 12:15,16.

ADD YOUR COMMENT

Powered By Indic IME