ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை

ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை

Greater love has no one than this, than to lay down one’s life for his friends. (John 15:13)

John 10:11,15; Romans 5:6-8; Romans 16:4; Galathians 2:20; Ephesians :1,2; 1 Thessalonians 5:10; 1John 3:16; 1John 4:7-11.

ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. (யோவான் 15:13)

யோவான் 10:11,15; ரோமர் 5:6-8; ரோமர் 16:4; கலாத்தியர் 2:20; எபேசியர் 5:1,2; 1தெசலோனிக்கேயர் 5:10; 1யோவான் 3:16; 1யோவான் 4:7-11.

அதிக அன்பு:

ஒருவன் தன் நண்பனுக்காக தன் உயிரைக் கொடுப்பதுவே சிறந்த அன்பு என்று கூறுகின்றார் இயேசு. இதனால் சிநேகிதனுக்காகவும், சிநேகிதிக்காகவும் உயிரை மாய்ப்பது உயர்ந்த அன்பு என்று பொருளல்ல. காதலர்கள் காதலர்களுக்காக உயிரை மாய்ப்பது உன்னத அன்பல்ல. இந்த பொருளில் இயேசுகிறிஸ்து கூறவில்லை.

இயேசுகிறிஸ்து தன் கற்பனைகளைக் கைக்கொண்டு தன் அன்பிலே நிலைத்திருக்கிற சீஷர்களையே சிநேகிதர் என்று கூறினார்.

யோவான் 15:15. மேலும் உயிரை மாய்ப்பதைக் குறித்தல்ல, தான் மரிப்பதைக் குறித்தே பேசினார். இயேசுகிறிஸ்து தம்மை பின்பற்றுகிற உண்மையான பின்னடியார்கள் நிலைத்து நின்று சாட்சியாய் இருக்க தமது ஜீவனை அவர்களுக்கு கொடுக்கிறார். அவருடைய ஜீவனை பெற்றுக்கொள்ளுகிறவர்கள் இனி தாங்களல்ல அவரே தங்களில் பிழைத்திருக்கிறார் என்று சொல்லி உலகின் முடிவுபரியந்தமும் அவருக்கு சாட்சிகளாயிருப்பர்.

கிறிஸ்துவின் அன்பிலும் கற்பனைகளிலும் நிலைத்திருக்கிறவர்களே சிநேகிதர்கள். அவர்களுக்கு ஜீவன் கொடுத்து அவர்களை இயேசுவுக்காய் ஜீவிக்க வைப்பது. அவர்கள் இயேசுவை போலவே பிறரின் மீட்புக்காய் ஜீவன் கொடுக்கிறவர்களாக மாறுகிறார்கள். தனக்குதானே வைத்துக் கொள்வதற்காக அவர் ஜீவன் தரவில்லை. பிறருக்காய் கொடுப்பதற்காகவே அவர் ஜீவன் கொடுத்துள்ளார். நாம் சுகமாகவும் சவுக்கியமாகவும் வழ்வதற்கல்ல, இயேசுவைபோல சிலுவை சுமந்து சிலுவையிலே மரிப்பதற்காகவே ஜீவன் கொடுத்தார்.

அவர் நமக்கு தந்த ஜீவனைக் குறித்து அவர் நம்மிடம் கணக்கு கேட்பார். நாம் எத்தனை பேரை ஜீவனடைய செய்தோம். சம்பாதிப்பதற்கும், கல்வியடைவதற்கும், அந்தஸ்தடைவதற்கும், அழகுபடுத்திக் கொள்வதற்குமல்ல, மரித்து கொண்டிருக்கின்ற மனுகுலத்தை ஜீவனடைய செய்வதற்காகவே அவர் ஜீவன் தந்துள்ளார்.

ஜீவன் பெற்ற நாம் ஜீவன் கொடுக்க துணிந்தோமா?

பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம். 1யோவான் 4:7-11.

ADD YOUR COMMENT

Powered By Indic IME