ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்

விசுவாசிக்கிறவன் மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.

believes in Him shall not come into judgment, but has passed from death into life. (John 5:24)
Jn10:27-30; Ro8:1,16,17,28-30,33,34; 1The5:9; 2The2:13,14; 1Jn3:14; 1Jn5:12,13.

என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவான் 5:24)

யோவான் 10:27-30; ரோமர் 8:1,16,17,28-30,33,34; 1 தெசலோனிக்கேயர் 5:9; 2தெசலோனிக்கேயர் 2:13,14; 1 யோவான் 3:14; 1 யோவான் 5:12,13.

மரணத்தைவிட்டு நீங்குதல்:

நித்திய வாழ்வை பெறுகிறவன் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குள் செல்லுகிறான்.
கிறிஸ்துவின் வார்த்தையை கேட்டு பிதாவை விசுவாசிக்கிறவனுக்கே நித்திய ஜீவன்.

மரணம் என்பது பாவத்துக்கான தேவனின் ஏற்பாடு – நியமம். பாவம் முழுவதுமாய் இவ்வுலகிலிருந்து பரிகரிக்கப்படுவது வரையிலும் மரணம் இருந்துதானாக வேண்டும்.

மரணம் என்பது தேவன் மனிதர்க்கு கொடுத்த சாபத்தின் இறுதி அத்தியாயம். நாம் இரட்சிக்கப்பட்டாலும், அல்லாவிட்டாலும் இவ்வுலகம் இருக்கும்வரை – பாவம் இருக்கும்வரை இந்த சாபம் தொடரும்.

மரணம் என்பது பாவமும் அதன் கிரியைகளையும் மட்டுப்படுத்தும் எதிர்மறையான ஆயுதம். ஒரு மனிதன் செய்யும் பாவம், அதன் கிரியை அவன் மரிக்கும்போது முடிவடைகிறது. தேவன் இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி பாவத்துக்கு தடை ஏற்படுத்துகின்றார்.

மரணம் அதற்குபின்புள்ள இருவேறு இடங்களுக்கு செல்லும் நுழைவு வாயில். அநித்தியத்திற்கோ, நித்தியத்திற்கோ அலலது அழிவுக்கோ, ஜீவனுக்கோ செல்லும் நுழைவு வாயிலாகும்.

ஒவ்வொருவரும் இந்த வாசல் வழியாக சென்றுதானாக வேண்டும். அதாவது இதனை விளக்கமாக காண்போம்.
1. அழிவுக்கான நுழைவுவாயில்.
பாவம் செய்கிறவர்களும், அந்நியதெய்வ வணக்ககாரர்களும், கடவுள் மறுப்பாளர்களும், இயேசுவை மறுதலிக்கிறவர்களும், பின்வாங்கிபோனவர்களும் அழிவின் வாழ்வுக்கு – இருளின் தேசத்துக்கு – திரும்பிவர இயலாத இடத்துக்கு செல்லுகிறார்கள்.

2. ஜீவனுக்கான நுழைவு வாயில். பாவத்தைவிட்டு விலகி பாவமன்னிப்பை பெற்றவர்களும், இயேசுவையும் அவரை அனுப்பிய தேவனையும் பரிசுத்த ஆவியையும் நம்புகிறவர்களும், தேவனுடைய இராஜ்ஜியத்துக்காய் உழைக்கிறவர்களும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் பாடுகள் மத்தியிலும் நிலைத்திருக்கிறவர்களும் வாழ்வின் தேசத்துக்கு – ஜீவனுள்ளோரின் தேசத்துக்கு – ஒளியின் இராஜ்ஜியத்துக்கு – திரும்பிவரப்போகிற இடத்துக்கு செல்லுகிறார்கள்.

முதலாமவர்க்கு மரணத்தை விட்டு நீங்குதல் வேதனையாகவும், இரண்டாமவர்க்கு மரணத்தைவிட்டு நீங்குதல் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

நித்தியஜீவன் பெற்றவன் திரும்பிவரும்படியாய் மரிக்கிறான்.

கர்த்தாவே, உமது கோபத்தில் மரணத்தை வாக்களித்தீர். அந்த கொடுமையான பாத்திரத்தின் நீரை நீர் உம்முடைய மகனுக்கும் குடிக்க கொடுத்தீர். அவர் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்கு செல்லும் மார்க்கத்தை ஏற்படுத்தியதினால் நாங்களும் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்கு செல்லும் மார்க்கத்தில் நடக்கின்றோம். நீரே எங்களுக்கு நல்ல ஆலோசகராகவும், வழிநடத்துகிறவராகவும் இருந்து நாங்கள் ஜீவனில் பிரவேசிக்க உதவும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME