ஜீவனத்தின் பெருமை உலகத்தினாலுண்டானவை

ஜீவனத்தின் பெருமை உலகத்தினாலுண்டானவை.

For all that is in world the pride of life is not of Father but is of world. (1 John 2:16)

Esther 1:3-7; Psalms 73:6-9; Daniel 4:30; Revalation 18:11-19; Psalms10:3; Psalms 52:1-5; Psalms 62:10; Psalms 97:7; Proverb 27:1,2.

ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். (1 யோவான் 2:16)

எஸ்தர் 1:3-7; சங்கீதம் 73:6-9; தானியேல் 4:30; வெளி 18:11-19; சங்கீதம்‌ 10:3; சங்கீதம் 52:1-5; சங்கீதம் 62:10; சங்கீதம் 97:7; நீதிமொழிகள் 27:1,2.

வாழ்வின் பெருமை:

பெருமை என்றால் வெற்றிடம் என்று பொருள். ஒன்றுமில்லாத வாக்குறுதி, உலகப்பொருட்களைக் கொண்டிருப்பதினால் தன்னை உயர்த்திக்காட்டுதல் என்று பலவாறாக பொருள் கூறப்படும். விவிலியத்தில் ஆவியில் எளிமை என்பதை ஆவிக்குரியவர்களின் குணமாகவும், வாழ்வின் பெருமையை சிந்தையில் பெருமை என்று கூறி அது துன்மார்க்கனின் குணமாகவும் காட்டப்பட்டுள்ளது. தன்னைதான் தாழ்த்துகிறது உன்னதமான அனுபவம். தன்னை உயர்த்திக்காட்டுவது பிசாசின் குணம். பிசாசானவன் உன்னதத்திற்கு ஏறுவேன் என்றும் அங்கு குடியிருப்பேன் என்றும் பெருமை பேசி அந்தகார சங்கிலிகளினால் கட்டப்பட்டுப்போனவன்.

மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும் கொண்டிருப்பவன் நிச்சயமாக வாழ்வின் பெருமையைக் கொண்டிருப்பான். தனக்கு ஒன்றுமில்லாதிருந்தும் தன்னை பெரியவனாக காண்பிப்பதும், பிறரின் பொருளைக் கொண்டிருந்து தன்னை பெரியவனாக காண்பிப்பதும் வாழ்வின் பெருமையாகும். பொருள், செல்வம் பெருகினால் அதை தின்கிறவர்களும் பெருகுவார்கள் என்பதை அறிந்தும் ஆகாயத்தில் சிலம்பம் அடிக்கிறவர்களாக இருக்கிறார்கள்.

பொருளாசை உடையவர்களில் கட்டாயம் பெருமையின் ஆவி குடிக்கொண்டிருக்கும். இச்சைகளை கொண்டிருப்பவரிலும் இந்த ஆவி வாசம் செய்யும். விக்கிரகாராதனை என்பது பெருமையை உண்டாக்கும் ஆவி. பெருமை எவரிலெல்லாம் இருக்கிறதோ அவர்களிலெல்லாம் பொருளாசையாகிய விக்கிரகாராதனை, விபசாரம் சார்ந்த இச்சைகள், காதல் மற்றும் உலக வைராக்கியம், கோபம், எரிச்சல், மூர்க்கம் போன்றவைகள் காணப்படும். சாதிக்கமுடியவில்லையென்றால் சாவைத் தேடிக்கொள்வர். எனவே வாழ்வின் பெருமை என்பது உலகத்தால் உண்டானது.

பணம் பொன் பொருள் போன்றவை தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்வதற்காக கொடுக்கப்படவில்லை. இல்லாதோரை கவனிக்கும்படியாகவே தரப்பட்டுள்ளது. அழகு என்பது பெருமைக்கானதல்ல, அழகற்றதையும் நேசித்து உள்ளத்தில் அழகை காண்பிக்கவே. கல்வி என்பது பெருமைப்பட்டுக்கொள்வதற்கானதல்ல, கல்வியறிவில்லாதோரை கற்பிக்க. பதவிகள் என்பது பெருமைக்கானதல்ல, பிறருக்கு சேவை செய்வதற்கானது. பிஷப், போதகர் என்ற பதவிகள் பெருமைக்கானதல்ல, கால்களை கழுவுவதற்கும், மந்தைகளை செம்மையாய் மேய்ப்பதற்கும் சிலுவையை சுமப்பதற்கும் ஆகும்.

கேள்வி…
வரங்கள், தாலந்துகள், நற்கிரியைகள் போன்றவற்றைக்குறித்து பெருமைப்பட்டு கொள்கிறவர்கள் உலகத்தாலுண்டானவர்கள் என்று சொல்லலாமா?

ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே. அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை. அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழந்தாலும், அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான். கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். சங்கீதம் 49:16-20.

ADD YOUR COMMENT

Powered By Indic IME