அவர் உனக்கு ஜீவதண்ணீரை கொடுத்திருப்பார்

அவர் உனக்கு ஜீவதண்ணீரை கொடுத்திருப்பார்.

Give Me a drink,you would have asked Him,and He would have given you living water. (John 4:10)
Jn4:14; Jn7:37-39; 1Co10:4; Re7:17; Re21:6; Re22:1,2,17; Ex17:6; Ps36:8,9; Ps46:4; Isa12:3; Isa35:6; Isa41:17-19; Isa43:20; Isa44:3; Isa49:10; Isa55:1-3; Jer2:13; Eze47:1-9; zec13:1; zec1;8.

இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். (யோவான் 4:10)

யோவான் 4:14; யோவான் 7:37-39; 1கொரிந்தியர் 10:4; வெளி 7:17; வெளி 21:6; வெளி 22:1,2,17; யாத்திராகமம் 17:6; சங்கீதம் 36:8,9; சங்கீதம் 46:4; ஏசாயா 12:3; ஏசாயா 35:6; ஏசாயா 41:17-19; ஏசாயா 43:20; ஏசாயா 44:3; ஏசாயா 49:10; ஏசாயா 55:1-3; எரேமியா 2:13; எசேக்கியேல் 47:1-9; சகரியா 13:1; சகரியா 14;8.

ஜீவதண்ணீர்:

இந்த நீர் இயேசுகிறிஸ்துவிடம் கேட்பதினால் கிடைப்பது.

இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்வதினால் கிடைப்பது.

இயேசுவோடு இணைந்து வாழ்வதினால் கிடைப்பது.

இயேசுவால் மட்டுமே பெற்றுக்கொள்வது.

இயேசுவிடம் நடத்தபடுவதினால் கிடைப்பது.

இயேசுகிறிஸ்து இலவசமாய் கொடுப்பது.

இயேசுகிறிஸ்துவின் சிங்காசனத்தண்டையிலிருந்து புறப்படுவது.

இதன் தன்மைகள்:
– தாகத்தை முழுமையாக தீர்க்கும் ஆற்றல் உள்ளது. சங்கீதம் 36:8.
– இது சந்தோஷபடுத்தும். சங்கீதம் 46:4.
– இது இரட்சிப்பை தரும் நீர். சங்கீதம் 46:4.
– இது செழிப்படைய செய்யும். ஏசாயா 41:17-19.
– இந்நீரினால் தேவனுக்கு கனமுண்டாகும். ஏசாயா 43:20.
– இது ஆவி, ஆசீர்வாதத்தையும் குறிக்கும். ஏசாயா 44:3.
– இது அழைப்பு கொடுக்கும். ஏசாயா 55:1.
– இது ஆரோக்கியமுண்டாக்கும். எசேக்கியேல் 47:1-9.
– இது பாவம், அழுக்கை நீக்கும். சகரியா 13:1.
– இதன் புறப்பாடு இயேசுவின் ராஜரீக எழுச்சியை அறிவிக்கும். சகரியா 14:8.

நாம் ஏசாயா கூறுவதைபோல இந்த ஜீவதண்ணீரையும், அதை கொடுப்பவரையும் இழந்து வெடிப்புள்ள தொட்டிகளாக காட்சியளிக்கின்றோமா?
இந்த நீர் கிருபையின் காலத்துக்குரியது மட்டுமே. இப்பொழுதே நமது வெடிப்புகளை – வறண்ட வாழ்வை உணர்ந்து அழைக்கும் – கொடுக்கும் இயேசுவிடம் வாருங்கள்.
அவர் உங்களுக்கு இலவசமாய் கொடுப்பார்.
நீங்கள் மகிழ்ந்திருக்கலாம்.

கர்த்தாவே, அநேக நேரங்களில் வெடிப்புள்ள தொட்டிகளை சுமந்து நீங்க கொடுக்கும் கிருபையின் நீரை வீணாக்குகின்றோம். எங்களை புடமிட்டு – செப்பனிட்டு உம் கிருபையின் நீரை – உயிர் நீரை – வாழ்வின் நீரை எங்களில் தாராளமாய் ஊற்றும். நாங்கள் எங்கள் சபையில் – தேசத்தில் ஆவிக்குரிய செழிப்பும், மலர்ச்சியும், வளமையும் உண்டாகச் செய்ய எங்களுக்கு உதவும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME