ஆண்டவரே

ஆண்டவரே, எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும்?

Woman said,Where then do You get that living water? (John 4:11)
Jn3:4; 1Cor2:14; Jn6:51,52; jn14:22; Rom11:2; Rev7;17; Rev22:1; Gen26:19; Num19:17; Num20:8-11; Ps57:1-4; Pr12:10a.

அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும். (யோவான் 4:11)

யோவான் 3:4; 1கொரிந்தியர் 2:14; யோவான் 6:51,52; யோவான் 14:22; ரோமர் 11:2; வெளி 7;17; வெளி 22:1; ஆதியாகமம் 26:19; எண்ணாகமம் 19:17; எண்ணாகமம் 20:8-11; சங்கீதம் 57:1-4; நீதிமொழிகள் 12:10a.

ஆண்டவரே, நீர் எனக்கு எங்கிருந்து எடுத்து தருவீர்?
இது ஒரு புத்திசாலித்தனமான – அறிவுகூர்மையான – சமீபகாலத்திய கேள்வி.
முற்காலங்களில் ஏன், எப்படி, எங்கிருந்து போன்ற கேள்விகளை கேட்கவியலாது. சொல்வதை செய்ய வேண்டும், கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டும்.
தற்காலத்திலோ, இக்கேள்விகளை கேட்பதுவே படித்தவன் – புத்திசாலி என்று கூறப்படுவதற்கு ஏற்றதானதாக மாறியுள்ளது. விவிலியம் ஒருபோதும் இத்தகைய கேள்விகளுக்கு இடம் தரவில்லை.

தருவேன் என்றவர் தருவார். பெறுவது வரையிலும் தரித்திரு.

ஜீவதண்ணீர் எங்கிருந்து சுரக்கும்? அழகான கேள்வி.
பாறையிலிருந்து நீர் சுரக்கும். மண்ணிலிருந்து நீர் சுரக்கும். வானத்திலிருந்து மழை உண்டாகும். ஆனால், ஜீவதண்ணீர் எங்கிருந்து வரும்?

யாக்கோபு இக்கிணறை வெட்டி நீரை தந்தார். நீர் எங்கிருந்து நீரை தருவீர்?

ஜீவ நீர் – அது உயிர் நீர்.
மரம், செடி,கொடி, உயிரினங்களுக்கு தண்ணீரே உயிர் நீராகும்.
ஆனால், உமக்கு ஜீவநீர் எங்கிருந்து வரும்?

அவர்….
1. வார்த்தையிலே உயிர் நீரை வைத்துள்ளார்.
2. பரிசுத்த ஆவியிலே உயிர் நீரை வைத்துள்ளார்.
3. கிறிஸ்துவின் மரணத்திலே உயிர் நீரை வைத்துள்ளார்.
4. அவரின் இரத்தத்திலே உயிர் நீரை வைத்துள்ளார்.
5. விசுவாசத்திலே உயிர் நீரை வைத்துள்ளார்.

ஆம், நாம் சமாரிய பெண்ணைபோல கேள்வி கேட்காது சொல்லப்பட்டுள்ளவைகளை நம்பி உயிர்நீர் பெற்று உயர்வாய் வளர்வோம்.

கர்த்தாவே, நீர் கொடுக்கும் நீரை விசுவாசத்தின் வழியில் எங்களுக்குள்ளே நீர் வைத்திருக்கிறதற்காக உமக்கு நன்றி. அந்த உயிர் நீரை நாங்கள் அளவில்லாமல் சுரந்து பிறரும் தாகம் தீர்க்க்கும்படியாய் செய்ய எங்களுக்கு உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME