இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்

இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்.

This is He who came by water and blood—Jesus Christ; not only by water, but by water and blood. (1John 5:6)

Isaiah 45:3,4; Ezekkiel 36:25; John 1:31-33; John 3:5; John 4:10,14; John 7:38,39; Acts 8:36; Ephesians 5:25-27; Titus 3:5; 1Peter 3:21.

இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறார். (1 யோவான் 5:6)

ஏசாயா 45:3,4; எசேக்கியேல் 36:25; யோவான் 1:31-33; யோவான் 3:5; யோவான் 4:10,14; யோவான் 7:38,39; அப்போஸ்தலர் 8:36; எபேசியர் 5:25-27; தீத்து 3:5; 1பேதுரு 3:21.

தண்ணீர், இரத்தம்.

இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வந்தவர் என்பதைக் குறிக்கின்றது. ஜலமும் இரத்தமும் மாம்சத்தின் தன்மைகளாகும். ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்த இயேசு அதே ஜலத்தையும் இரத்தத்தையும் இழந்தவராக மரணிக்கப்பட்டு அடக்கம்பண்னப்பட்டு ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டவராக பரலோகம் சென்றுள்ளார். யோவான் 19:34. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இப்பொழுது ஜலத்தையும் இரத்தத்தையும் உடையவராக அல்லாது ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டவராக தேவனிடம் இருக்கின்றார். இனி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூமியில் வரும்போது இதே இரத்தத்தையும் ஜலத்தையும் உடையவராக அல்ல. ஆவியிலே வாழ்கிறவராக வரப்போகிறார்.

இரத்தமும் ஜலமும் மனிதனின் மீட்புக்காகவே முழுவதுமாக கொடுக்கப்பட்டது. இந்த பூமி உள்ளளவும் இந்த ஜலமும் இரத்தமும் இயேசுவை குறித்த சாட்சியை சொல்லிக்கொண்டேயிருக்கும். மேலும் மீட்பின் காலம் முடிவது வரையிலும் இந்த ஜலமும் இரத்தமும் மாம்சத்தில் வந்த இயேசுவை உயிரோடே வைத்திருக்கும்.

இரத்தமும் ஜலமும் இயேசுவின் தூய்மையையும், உத்தமத்தையும் குறிக்கின்றது. அவர் பாவமில்லாதவர் என்பது மட்டுமல்ல, சத்தியமுள்ளவராகவும் இருந்தார் என்பதையும் நிரூபிக்கின்றது. ஆகவே அவரை பின்பற்றுகிறவர்கள் யாவரும் தூய்மையாகவும், உத்தமர்களாகவும் காணப்பட வேண்டும் என்பதாகின்றது.

இரத்தமும் ஜலமும் இயேசுவின் பாடுபடுதலையும் , துன்புறுதலையும் குறிக்கின்றது. மனுகுலம் இயேசுவின் தூய்மையான இரத்தத்தை சிந்தியதினால் இரத்தபழி என்ற பெரிய பாதகத்துக்கு ஆளாகின்றது. இந்த இரத்தபழி விலக வேண்டுமானால் அவரின் இரத்தத்தாலும் ஜலத்தாலும் மீட்புக்குள் வரவேண்டும்.

ஜலம் என்பது உடல் திருமுழுக்கையும், இரத்தம் என்பது உள திருமுழுக்கையும் குறிக்கின்றது. அதாவது ஜலத்தினால் மாம்ச கறைகளும், இரத்தகறைகளும் கழுவப்படுகின்றது. இரத்தத்தினால் மனதின் கறைகளும் மனசாட்சியின் கேடானவைகளும் கழுவப்பட்டு தூய்மையான மனசாட்சி உடையதாகின்றது. எபிரேயர் 10:22. இப்பொழுது தூய்மையான சரீரமும், சுத்தமான மனசாட்சியும் உடையவர்களாகின்றோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆவியினால் உருவானவராயிருந்தாலும் மாம்ச இரத்தத்தினாலே பிறந்தவர். அவரின் பிறப்பு மனிதர்களின் பிறப்பைப்போலவே இரத்தத்தோடே பிறந்ததாகக் காணப்பட்டது. இதனால் மாம்சீக மனுகுலத்தோடு இணைக்கப்பட்டார். தண்ணீரினால் முழுக்காட்டப்பட்டு நியாயபிரமாணத்தோடு இணைக்கப்பட்டார். இதினிமித்தம் மெய்யான மனிதகுமாரனாக காணப்பட்டார் இயேசு.

நாமும் இரத்தத்தையும் ஜலத்தையும் இழந்தவர்களாய் ஆவியிலேஉயிர்ப்பிக்கப்பட்டவர்களாய் அவரின் ராஜ்யத்தில் சேர்க்கப்படவுள்ளோம் என்பதை மறவாதிருப்போமாக.

ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. எபிரேயர் 10:19-23.

ADD YOUR COMMENT

Powered By Indic IME