யோவானிடம்

ஜனங்கள் யோவானிடம் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.

John also was baptizing, People came and were baptized.(John 3:23)
Mt3:1-6; Mt21:24-27; Mk1:4,5; Lk3:3-14; Lk16:16; Jn1:26; Act1:4,21; Act10:37; Act11:16; Act18:25; Act19:3.

சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்: ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். (யோவான் 3:23)

மத்தேயு 3:1-6; மத்தேயு 21:24-27; மாற்கு 1:4,5; லூக்கா 3:3-14; லூக்கா 16:16; யோவான் 1:26; அப்போஸ்தலர் 1:4,21; அப்போஸ்தலர் 10:37; அப்போஸ்தலர் 11:16; அப்போஸ்தலர் 18:25; அப்போஸ்தலர் 19:3.

திருமுழுக்கு பெற்றுக்கொண்டவர்கள்.
1. பிரசங்கத்தை கேட்டு திருமுழுக்கு பெற்றனர். மத்தேயு 3:2
2. தாங்களாக முன்வந்து திருமுழுக்கு பெற்றனர். மத்தேயு 3:5
3. கூட்டம் கூட்டமாக வந்து திருமுழுக்கு பெற்ரனர். மத்தேயு 3:5
4. பாவங்களை அறிக்கையிட்டு திருமுழுக்கு பெற்றனர். மத்தேயு 3:6; அப்போஸ்தலர் 2:37.
5. பரிசேயர், சதுசேயர்(மத்தேயு 3:7), ஜனங்கள் (லூக்கா 3:10), ஆயக்காரர் (லூக்கா 3:12), போர் சேவகர்(லூக்கா 3:14) திருமுழுக்கு பெற்றனர்.
6. நீதிக்கு கீழ்படிந்து திருமுழுக்கு பெற்றனர். மத்தேயு 3:15
7. சீஷராக்கபட்டவர்கள் திருமுழுக்கு பெற்றனர். (யோவான் 14:1; மத்தேயு 28:19)
8. வார்த்தையை சந்தோஷமாய் ஏற்று கொண்டவர்கள் திருமுழுக்கு பெற்றனர். அப்போஸ்தலர் 2:41.
9. தேவனுடைய தொடுதல் நிமித்தம் திருமுழுக்கு பெற்றனர். அப்போஸ்தலர் 9:18.
10. அற்புதங்கள், மாற்றங்கள் நிமித்தம் திருமுழுக்கு பெற்றனர். அப்போஸ்தலர் 10:44-48; அப்போஸ்தலர் 16:33
11. விவிலிய ஆராய்ச்சியினிமித்தம் உணர்த்தபட்டு திருமுழுக்கு பெற்றனர். அப்போஸ்தலர் 8:36-38
12. குடும்பம் குடும்பமாக திருமுழுக்கு பெற்றனர். அப்போஸ்தலர் 16:33,34; 1கொரிந்தியர் 1:16

பு.ஏ ல் பணம் கொடுத்து, ஆசை காட்டி, வசியம் செய்து, ஏமாற்றி திருமுழுக்கு கொடுத்ததான குறிப்புகள் இல்லை. இன்றைய சபைகள் மீது பிறத்தியார் சுமத்தும் இத்தகையகுற்றங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. சபைகள், ஊழியர்கள் இந்த 12 விதங்களில் ஏதாவதுஒன்றை பின்பற்றிதான் ஞானஸ்நானம் கொடுக்கின்றனர்.

தூற்றுபவர் தூற்றட்டும். நாம் நம் பணியை செய்வோம். இறுதி தீர்ப்புகள் ராஜாக்களுடையதல்ல, பரலோக ராஜாவினுடையது.

கத்தாவே, எங்களை உம் குமாரனின் இரத்தத்தினால்முழுக்காட்டி உம் குடும்பத்தில் சேர்த்து கொண்டீர். நாங்கள் மண்ணுக்காகவும், பொன்னுக்காகவும் உம்மை பின்பற்றவில்லை. எங்கள் ஆத்தும ஈடேற்றத்திற்காகவே உம்மை பின்பற்றினோம். எங்கள் போராட்டங்களில் நாங்கள் உறுதியாய் நின்று உம் சாட்சியை விளங்க செய்ய உதவியருளும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME