ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்கும்

ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்கும்.

Caiaphas who advised the Jews that it was expedient that one man should die for the people. (John 18:14)

John 11:46-53; Exodus 8:9; Exodus 18:9; Levitics9:7; Levitics 16:33; Number 21:7; Esther 4:8; Isaiah 62:10; Matthew 15:32.

ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.
(யோவான் 18:14)

யோவான் 11:46-53; யாத்திராகமம் 8:9; யாத்திராகமம் 18:9; லேவியராகமம் 9:7; லேவியராகமம் 16:33; எண்ணாகமம் 21:7; எஸ்தர் 4:8; ஏசாயா 62:10; மத்தேயு 15:32.

ஜனங்களுக்காக:

ஜனங்களுக்காக என்பது உலகத்துக்காக, மக்களுக்காக, மனிதர்களுக்காக என்று நாம் பொருள் கொள்கின்றோம். ஜனங்களுக்காக பரிதபித்த இயேசு ஜனங்களுக்காக கொல்லப்பட போகிறார். மோசே ஜனங்களுக்காக குறிப்பாக இஸ்ராயேலருக்காக பல நிலைகளிலும் தேவனிடம் மன்றாடினார். அவர்களை காக்க தன் வாழ்நாளையே அர்ப்பணித்தார். ஆனால் மோசேயும் ஆரோனும் ஒரு தவறு செய்த போது அவர்களுக்காக அதே இஸ்ராயேல் ஜனம் ஒரு முறைகூட தேவனிடம் மன்றாடினதாக குறிப்பில்லை. அதைப்போலவே இயேசு கிறிஸ்து இஸ்ராயேலுக்காக பிதாவிடம் பலமுறை மன்றாடியும், அவர்களுக்காக பரிதாபப்பட்டும், மனதுருக்கம் கொண்டிருந்தும் அவர்களின் நலனுக்காக அவரை கொல்லும்படி யோசனை செய்தார்கள்.

இக்காலத்திலும் உலகத்தின் அத்தனை மக்களின் மீட்புக்காகவும், ஜீவனுக்காகவும், நன்மைக்காகவும் கர்த்தராகிய இயேசு பிதாவின் அருகில் இருந்து கொண்டு பிதாவிடம் அநுதினமும் மன்றாடிக்கொண்டிருக்கின்றார். அப்படியிருந்தும் அதே ஜனம் அவருடைய சரீரமாகிய திருச்சபையையும், அதன் சார்பு இயக்கங்களையும் அழித்து ஒழிப்பதிலேயே அதிக கவனமாயிருக்கின்றார்கள் என்பதை கிறிஸ்தவம் அறிந்து கொள்க.

யூதர்களுக்காக மரிக்க போகிற இயேசு என்று ஆட்சியாளர்கள் தீர்மானம் செய்தனர். தேவனோ உலகத்தின் அத்தனை ஜனங்களுக்காகவும் இயேசு மரிக்க போகிறார் என்று தீர்மானம் செய்தார். மனிதனின் தீர்மானம் நிறைவேறியது என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் அதற்காக இன்றுவரையிலும் விலைகிரயம் செலுத்தி ஓயவில்லை. தேவனுக்கும், அவரது குமாரனுக்கும், அவரது சபைக்கும், திருச்சபை சார்பு இயக்கங்களுக்கும் எதிராக எழும்பி தங்கள் தேசத்தின் நன்மைக்காக இவர்களை அழித்து விடுவோம் என்று தீர்மானம் செய்திருக்கலாம். அந்த தீர்மானத்தின் பிரகாரம் அவர்களுக்கு ஜெயம் கிடைக்கக்கூடும். ஆனாலும் யூதர்கள் தங்களின் தீர்மானத்துக்கு விலை கொடுத்து மாளாததுபோல இவர்கள் கொடுக்க போகிற விலைகிரயம் அதைவிடவும் விரைவாகவும், அதிபயங்கரமாகவும் இருக்கும்.

தேவனின் தீர்மானமானது தமது மகனாகிய இயேசுவை கொண்டு முழு உலகையும் ஆளுகை செய்ய வேண்டும் என்பதேயாகும். இந்த தேவனின் தீர்மானத்துக்கு ஆட்சியாளர்கள் விலைகிரயம் கொடுக்க முடியுமா?
முடியும்.
எப்படி?
தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, மனந்திரும்பி, இயேசுவை சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும், தேவனாகவும் ஏற்றுக்கொண்டு பரலோக ஆட்சி வரும்படியாக அநுதினமும் ஜெபித்து இயேசுவின் வருகைக்காக காத்திருப்பதுவே.

அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். அப்போஸ்தலர் 1:9-11.

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். வெளிபடுத்தல் 22:12-14.

ADD YOUR COMMENT

Powered By Indic IME