தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
What is this thing that He said,You will seek Me and not find Me,and where I am you cannot come. (John 7:36)
Jn3:4,9; Jn 6:41,42,52,60; Jn10:6; Jn12:34; Jn16:17,18; Act17:20; 1Cor2:14.
நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்னவென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். (யோவான் 7:36)
யோவான் 3:4,9; யோவான் 6:41,42,52,60; யோவான் 10:6; யோவான் 12:34; யோவான் 16:17,18; அப்போஸ்தலர் 17:20; 1கொரிந்தியர் 2:14.
மந்த இருதயம். லூக்கா 24:25.
யூதர்கள் இயேசுவின் உபதேசத்தையும், இயேசுவையும் நம்ப இயலாதபடிக்கு உணர்வற்றவர்களாயிருந்தனர். மத்தேயு 13:15.
சீஷர்கள் இயேசுவோடு கூட இருந்து கண்டும் கேட்டும் அனுபவித்தும் அவருடைய உயிர்த்தெழுதலை விசுவாசிக்க இயலாதபடிக்கு மந்த இருதயமுள்ளவர்களாயிருந்தனர்.
அனேக தேவனுடைய ஊழியகாரர்கள் விவிலியத்தை நன்றாக கற்றிருந்தும் இயேசுகிறிஸ்துவின் மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் குறித்த நம்பிக்கை அற்றவர்களாயிருக்கின்றனர்.
அனேக விசுவாசிகளும், ஊழியர்களும் இயேசுகிறிஸ்துவின் ரகசிய மற்றும் இரண்டாம் வருகையை குறித்த நம்பிக்கை அற்றவற்றவர்களாயிருக்கின்றனர்.
அனேகர் இயேசுகிறிஸ்து இன்றும் ஜீவிக்கிறார் என்றும், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்றும் அவர் என் வாழ்விலே இன்னும் கிரியை செய்ய முடியும் என்றும் நம்ப இயலாதவர்களாயுள்ளனர்.
உலகம் நம்பவேண்டும் என்பதற்காக சபையைகொண்டு – ஊழியர்களைகொண்டு – விசுவாசிக்கிறவர்களைகொண்டு இன்றும் அற்புதம் நடப்பிக்கிறார்.
அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் நமக்கு வேண்டாம்.
கர்த்தாவே உம் மகன்மூலம் எங்களுக்குள் நம்பிக்கையை ஊட்டியதினால்தான் விசுவாசத்தில் நாங்கள் வளரமுடிகின்றது. தொடர்ந்து உம் ஆவியில் நாங்கள் வளர்ந்து மாம்சகிரியைகளை நிறைவேற்றாதிருக்க பெலன் தாரும்.