சேவகன், பிரதான ஆசாரியனுக்கு இப்படியா பதில் சொல்வது என்று இயேசுவை அடித்தான்.
officer struck Jesus with palm of his hand,saying,Do You answer the high priest like that? (John 18:22)
Job 16:10; Job 3010:-12; Isaiah 50:5-7; Jeremiah 20:2; Micah 5:1; Matthew 26:67,68; Mark 14:65; Luke 22:63,64; Act 23:2,3.
இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். (யோவான் 18:22)
யோபு 16:10; யோபு 30:10-12; ஏசாயா 50:5-7; எரேமியா 20:2; மீகா 5:1; மத்தேயு 26:67,68; மாற்கு 14:65; லூக்கா 22:63,64; அப்போஸ்தலர் 23:2,3.
சேவக அடி:
பிரதான ஆசாரியனுக்கு சேவகம் செய்கின்ற ஒருவன் இயேசுவை கோலினாலோ, இரும்பு கம்பியினாலோ, கையினால் கன்னத்திலோ அடித்தான். உப்பு போடுகிறவனுக்கு உபகாரமாக இருக்க வேண்டுமல்லவா?.அதுதான் இப்படி செய்தான். இயேசுவுக்கு பலமான அடி கொடுத்திருக்கின்றான். பிரதான ஆசாரியனுக்கு முன்பாக கைதியாக நிற்கின்ற நீ இப்பொழுதாவது பணிவுடன் நடந்து கொள்ளக் கூடாதா?. உனக்கு திமிர்தான். உன் திமிரை அடக்குகிறேன் பார் என்று சொல்லி கோபமாக அடித்தான். இப்படி செய்தால் ஏதாவது நன்மை உண்டாகும் என்று நினைத்தும் இவ்வாறு செய்திருக்கக் கூடும்.
முழு உலகையும் படைத்து மனிதர்க்கு சுவாசத்தையும், ஆகாரத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கும் தேவகுமாரனுக்கு தெய்வபயமில்லாமல், ரபீ என்றுகூட பாராமல் அடி கொடுத்திருக்கின்றான். இயேசு பிறந்தபோது இவ்வுலகம் அவருக்கு மாட்டு கொட்டகையைதான் கொடுத்தது. பூமியிலே அவருக்கு தங்குவதற்கு கூட இடமில்லை. உண்பதற்கு போதிய ஆகாரமில்லை. இப்பொழுது அவரை அடித்து அவமானப்படுத்துகிறார்கள்.
தேவகுமாரனின் திருப்பணியையும், நற்செய்தியையும், நற்கிரியைகலையும் அறியாத சேவகர்கள், காவலர்கள் அடித்து காயப்படுத்துகிறார்கள். யோசேப்பை அறியாத ராயன் தோன்றியபோது நன்றி மறந்த கூட்டம் இஸ்ராயேலை உபத்திரவபடுத்தியது.
இந்தியாவின் வ;லர்ச்சிக்கு தங்கள் உடமைகள், உரிமைகள்,உறவுகள், உயிர்களை தானம் செய்தகிறிஸ்தவ ல்பக்தர்களை குறித்த அறிவில்லாத அல்லது அவர்களை மறந்துபோன ஒரு சந்ததி ஊழியங்களையும், ஊழியர்களையும், சபைகளையும், நற்பணிகளையும் அழிப்பதற்கு உபாயம் பண்ணிக்கொண்டிருக்கின்றது.
சகாப்தங்கள் முடியும்போது சகலமும் எதிராகவே காணப்படுகின்றது. தலைமுறைகள் தடுமாறும்போது தலமைகளை மறந்து வாழும் தலைமுறைகள் எழும்புகின்றது. தகப்பனின் அளப்பற்கரிய பணிகளை கொச்சைபடுத்தி தலைமுறை இடைவெளியை உருவாக்கும் ஒருகாலம் இதுவாகும்.
இவைகளினூடே அடிவாங்கினாலும், உதைவாங்கினாலும், அவமானம் அடைந்தாலும், மரண வாசனை வந்தாலும் தேவனை நோக்கி அமர்ந்து அவருடைய விருப்பம் நிறைவேற்ற துணிவு கொண்டு கிறிஸ்துவைபோல கிறிஸ்துவிலே விசுவாசத்தை வளர்த்துகொண்ட ஒரு சந்ததி உருவாக வேண்டுமென்று இயேசு எதிர்பார்க்கின்றார். அந்த சந்ததியில் நாம் இருக்கின்றோமா?.
அடிகொடுத்தவன் அடிபணியும்காலம் வெகு தொலைவிலில்லை.
உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும் தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.
மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத்திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும். பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும். ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர். பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப்பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக் கூடாதே.
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.
அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிறவர்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள். சங்கீதம் 22:24-31.