பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கின்றேன்

பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கின்றேன்.

Jesus lifted up His eyes and said,Father,I thank You that You have heard Me. (John 11:42)

2Kin4:33; Ps89:26; Ps123:1; Dan2:23; Mt11:25; Mt14:19; Mk7:34; Lk10:21; Jn9:31; Jn11:22; Jn12:27-30; Jn17:1f; Jn18:11; Phil4:6; Rev17:17.

நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன், ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார். (யோவான் 11:42)

யோவான் 11:42. 2இராஜாக்கள் 4:33; சங்கீதம் 89:26; சங்கீதம் 123:1; தானியேல் 2:23; மத்தேயு 11:25; மத்தேயு 14:19; மாற்கு 7:34; லூக்கா 10:21; யோவான் 9:31; யோவான் 11:22; யோவான் 12:27-30; யோவான் 17:1f; யோவான் 18:11; பிலிப்பியர் 4:6; வெளி17:17.

ஜெபத்தைக் கேட்கும் பிதா.
41 ஆம் வசனத்தில் கர்த்தராகிய இயேசு இரண்டு காரியங்களைச் செய்கிறார். ஒன்று தன் கண்களை ஏறெடுக்கின்றார். வானத்துக்கு நேராய், தன் தந்தையிடமாய் தன் கண்களை ஏறெடுக்கின்றார். பக்தர்களைப்போல இயேசுவும் மாம்சீகத்தில் இருந்துகொண்டு தன் கண்களை ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராய் ஏறெடுக்கின்றார். தன் கண்களை மேல்நோக்கி திறந்தவராய் ஜெபிக்க போகின்றார். கீழ்நோக்கி ஜெபிக்கும்போது கண்களை திறவாமலும், மேல் நோக்கி பிதாவை பார்த்து ஜெபிக்கும்போது கண்களை திறந்தும் ஜெபிப்பது நலமாயிருக்கும் என நினைக்கின்றேன். வானத்தை அண்ணாந்து – ஏறெடுத்துப் பார்த்து ஜெபிக்கிறவன் கண்களை மூடியிருக்க இயலாது. இயேசு தம் கண்களைத் திறந்தவராய் வானத்தை நோக்கி ஜெபிக்கின்றார்.

2 ஆவதாக, பிதா தனக்கு செவிக்கொடுத்துவிட்டார் என்று உறுதிப்படுத்துகிறார். இச்சொற்றொடர் நம்பிக்கையின் உறுதியாக மட்டும் கருத முடியாது. மேலும் தான் கேட்பதற்கு முன்னமேயே பிதா தன் இருதய விருப்பத்தை அறிந்து உத்தரவிட்டார் எனலாம். இந்த ஜெபத்தை செய்யுமுன்பதாகவே பிதாவிடம் தம் ஆவியில் இக்காரியத்தை தெரிவித்திருப்பார். இப்பொழுது யாவரும் கேட்கும்படியாய் ஜெபத்தை செய்து உறுதிப்படுத்துகின்றார்.

ஆவியில் தேவனோடு உறவாடி ஆவியில் தேவனின் விருப்பத்தை அறிந்து ஜெபங்களை ஏறெடுப்பது நல்லது. ஆவியில் கிடைத்த உறுதியே நம்பிக்கையின் ஜெபத்தைச் செய்ய வைக்கும்.

பிதாவின் விருப்பத்தை அறிந்து செயல்பட்ட இயேசுவுக்கு ஒரு அற்புதம் நடக்க 40 நாட்கள் உபவாசம் தேவைப்படவில்லை. சாத்தானை விரட்ட பல நாட்கள், பல மணி நேரங்கள் தேவைப்படவில்லை. ஆனால் நமது ஜெபங்கள் பல மணி நேரங்களையும், பல நாட்களையும் கொண்டிருக்கின்றன. இதற்கு நம்மிடையில் – நமக்குள் உண்மையான – உறுதியான விசுவாசம் இல்லை என்றே கருத இடமுண்டாகின்றது. தேவன் நம் ஜெபத்தைக் கேட்டுவிட்டார் என்ற வெளிப்பாடு கிடைக்காமல் நாம் தேவனைக் கட்டாயபடுத்தவியலாது. அப்படிபட்ட ஜெபம் கேட்கப்படவும் செய்யாது. உபவாசித்து ஜெபிக்கவும் தக்கதாக ஆவியானவரின் அகத்தூண்டுதல் பெற்ற பின்பே அது நடைமுறைக்கு வர வேண்டும்.

இயேசுகிறிஸ்துவின் ஜெபம் கேட்கபட்டது என்பதினால் ஜெபம் ஏறெடுப்பப்பட்டது.

உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். மத்தேயு 6:8.

முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். மத்தேயு 6:8.

ADD YOUR COMMENT

Powered By Indic IME