பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்

பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்.

Now we know that God does not hear sinners. (John 9:31a)

Job27:8-10; Job35:11-13; Job42:8; Ps18:41; Ps66:18-20; Pr1:23-33; Pr15:29a; Pr21:13; Pr28:9; Isa1:10-16; Jer11:11; Jer14:12; Eze8:18; Mic3:4; Zec7:13.

பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம், ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
(யோவான் 9:31)

யோபு27:8-10; யோபு 35:11-13; யோபு 42:8; சங்கீதம் 18:41; சங்கீதம் 66:18-20; நீதிமொழிகள் 1:23-33; நீதிமொழிகள் 15:29a; நீதிமொழிகள் 21:13; நீதிமொழிகள் 28:9; ஏசாயா 1:10-16; எரேமியா 11:11; எரேமியா 14:12; எசேக்கியேல் 8:18; மீகா 3:4; சகரியா 7:13.

பாவிகள்:
பாவம் செய்கிறவர்கள் பாவிகள். தேவனுடைய கட்டளைகளை மீறுகிறவர்கள் பாவிகள். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியாதவர்கள் பாவிகள். கர்த்தருடைய சரீரமாகிய சபைக்கு உட்படாதவர்கள் பாவிகள். கீழ்படியாதவர்கள் பாவிகள். கலகம் பண்ணுகிறவர்கள், முரட்டாட்டம் பண்ணுகிறவர்கள், கசப்பை கொண்டிருப்பவர்கள், வேறு தெய்வங்களை பின்பற்றுகிறவர்கள், கடவுள் இல்லை என்று சொல்லுகிறவர்கள், இலஞ்சம் வாங்குகிறவர்கள் etc பாவிகளாயிருக்கின்றனர். இப்படிபட்டவர்கள் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் எடுத்து பாவ மன்னிப்பாகிய இரட்சிப்பை பெற்று இயேசுவின் சரீரமாகிய சபைக்கு உட்பட்டிருக்க வேண்டும். அப்பொழுது அவர்களின் கூப்பிடுதலுக்கு செவிக்கொடுப்பார்.

தேவன் தனக்கு செவிகொடுக்கவில்லை என்ற அறிவு ஒருவனுக்குள் வருமானால் தன்னை ஆராய்ந்து பார்க்க அவரிடம் தன்னை ஒப்படைக்கிறவனாயிருப்பான். தன் குறைகளை அறிய ஆவலாயிருப்பான். தன் குணங்களை, நடவடிக்கைகளை மாற்றிகொள்ள முன் வருவான். அவர் தனக்கு செவிகொடுப்பது வரையிலும் தன்னை தாழ்த்துவான். தகப்பனாகிய அவர் நமக்கு செவிகொடுக்காதிருப்பது வரையிலும் நாம் ஆசீர்வதிக்கப்பட மாட்டோம்.

கர்த்தாவே எங்களுக்கு நீர் செவிகொடுக்கதக்க நல்ல இருதயம் எங்களுக்குள் உண்டாகும்படி பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு எங்களுக்குள் கிரியை செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME