தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார்.
But this He said to test him, for He Himself knew what He would do. (John 6:5-7)
Mt15:32,33; Mk8:2-4; Jn12:21; Jn14:8; Heb5:11-14; Deu8:2,16; Deu13:3; Deu33:8; 2Chr32:31; Num11:21,22; 2Kin4:43.
தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார். (யோவான் 6:5-7)
மத்தேயு 15:32,33; மாற்கு 8:2-4; யோவான் 12:21; யோவான் 14:8; எபிரெயர் 5:11-14; உபாகமம் 8:2,16; உபாகமம் 13:3; உபாகமம் 33:8; 2நாளாகமம் 32:31; எண்ணாகமம் 11:21,22; 2 இராஜாக்கள் 4:43.
சோதிக்கும் தேவன்:
சீஷர்கள் யாவரையும் அல்லது பிலிப்புவை மட்டும் சோதிக்கும்படியாக அப்பங்களை எங்கே வாங்கலாம் என்றுக்கேட்டார். இதனை ‘பொய் சொன்னார் இயேசு’ என்றோ, ‘மறைத்து பொய் சொன்னார்’ என்றோ சிந்திக்க வேண்டியதில்லை.
ஒன்றை வெளிபடுத்த இன்னொன்றை பயன்படுத்துவது இயேசுவின் உபதேச இரகசியம்.
அனேக நேரங்களில் தேவனின் கிரியைகளும், வெளிப்பாடும் நேர் வழியாகவோ, நேரடியாகவோ, வெளிப்படையாகவோ காணப்படுவதில்லை. அவைகளை வெளிபடுத்தக்கூடிய ஞான வரங்களையோ, கிருபை வரங்களையோ, வெளிபாடுகளையோ நாம்தாமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பியே காரியங்களை மறைக்கிறார்.
இடறிபோகும்படியாக அவர் சோதிக்காமல் விசுவாசத்தில் நிலைத்திருக்கவே சோதிக்கிறார்.
நம்மில் உள்ள அழுக்குகள், பொல்லாப்புகள் வெளியேற்றப்பட்டு, பரிசுத்தத்தில் நிலைகொண்டிருக்கவே சோதிக்கிறார்.
தேவதிட்டத்துக்குட்பட்ட கோதுமை மணிகளை அடையாளம் கண்டுகொள்ள சோதிக்கிறார்.
Testing என்பது தம்பிள்ளைகளுக்குரியது மட்டுமே. Testing என்ற எரிசூளை வழியாகத்தான் தம் பிள்ளைகள் தம்மிடம் கடந்துவர விரும்புகிறார்.
தேவனுக்கு எதிராக செயல்படும் சாத்தானின் குற்றசாட்டுகள் தம் பிள்ளைகள்மேல் வரக்கூடாது என்பதற்காகவே சோதித்து பார்க்கிறார்.
பாவம், சாத்தான் இவ்வுலகில் இருப்பது வரையிலும் நாம் நமது விசுவாசம், பரிசுத்தம், கனிகொடுத்தல், நம்பிக்கை ஐக்கியம் போன்ற அத்தனையையும் சோதித்து பார்ப்பார்.
அவர் நம்மிடம் கொடுத்தது எதுவோ அது தேவனுக்கும் அவருடைய நாமத்துக்கும் எவ்வளவு பயன்பட்டது என்பதை அறியவே சோதிக்கிறார்.
உனக்கு நன்மை செய்யும்படியாகவும், உன்னோடுள்ள கனியற்ற மரங்களை அடையாளம் காணும்படியாகவும் சோதிக்கிறார்.
சோதிப்பதற்கு உடன்படு. சோதனையினின்று தப்பிக்கொள். உயர்வடைய சோதிக்கபடு. நிறைவடைய சோதிக்கபடு.
கர்த்தாவே, நீர் உம் மகனை கொண்டு எங்களையும், எங்கள் உள்ளங்களையும் ஆராய்ந்து அறிந்து எங்களை நல்வழிபடுத்துவதற்கு நன்றி. நாங்கள் உண்மையுள்ள உள்ளத்தோடு உம் குமாரனை பின்பற்ற எங்களில் உம் ஆவியை வைத்தருளும். நாங்கள் சோதிக்கப்பட்டு சுத்த பொன்னாக விளங்க எங்களுக்கு உதவிடும்.