சுத்திகரிப்பு - CLEANLINESS

சுத்திகரிப்பு – CLEANLINESS

யோவான் 2:13-25.

மனித வாழ்வில் சுத்திகரிப்புஅவசியமானது.
மனிதனும், மனிதனின் உடைமை பொருளும் சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றது.

நமது கிறிஸ்தவ வாழ்வில் ஐந்து விதமான பகுதிகளில் சுத்திகரிப்பை தேவன் எதிர்பார்க்கின்றார்.

1. சரீர சுத்திகரிப்பு.
நமது சரீரம் கறைபட்டது, அசுசி பட்டது என்று விவிலியம் கூறுகின்றது. பாவத்தின் இருப்பிடம் – இச்சையின் இருப்பிடம் மாம்சமே. மாம்சத்தை பேணுவது இச்சைகளை பேணுவதாகும்.
நமது சரீரம் எப்படி இச்சைகளால் நிறைந்துள்ளது?
கலாத்தியர் 6:19-21 ல் மாம்சத்தின் கிரியைகளால் என்று கூறப்பட்டுள்ளது. நமது சரீர செயல்களுக்கு ஏற்றவாறு பலனுமுண்டு என்று 2கொரிந்தியர் 5:10 ல் பவுல் கூறுகின்றார்.
இந்த சரீரம் எப்படி இருக்க வேண்டும் என்று பவுல் கூறுவதை பார்க்கலாம். ரோமர் 12:1.
இப்படியிருக்க என்ன செய்ய வேண்டும்?. கழுவப்பட வேண்டும். எபிரெயர் 10:22b. கழுவப்படும் முறை – 1யோவா1:7. கழுவப்பட்டபின்பு 1கொரிந்தியர் 6:15-20 ன் படி வாழணும்.
இது மறுரூபத்துக்கானது 1கொரிந்தியர் 15:51. என்வே சரீர சுத்திகரிப்பு மிகவும் அவசியமானது.

2. நமது உள்ள சுத்திகரிப்பு.
உள்ளம் பட்சிக்கிற ஓநாய் மாதிரி – மத்தேயு 7:15. உள்ளம் மாயத்தால் நிறைந்தது – மத்தேயு 23:28.
உள்ளத்திலிருந்து வருவது மனுஷனை தீட்டுபடுத்தும் – மாற்கு 7;20-23.
உள்ளத்தில் இருப்பதை பேசுவது மனசாட்சி.
உள்ளத்தில் இருப்பதை மறைத்து வேறு பேசுவது பொய்சாட்சி.
வசனம் உள்ளே வாழ வேண்டும். அப்பொழுது மேலும் தூய்மையாகும் – எபிரெயர் 4:12.
பின்னர் உள்ளமானது ஆவியின் கட்டுபாட்டில் வர வேண்டும். அப்பொழுது தூய மனசாட்சி உண்டாகும். எபிரெயர் 9:14. இதைதான் மனம் புதிதாகுதல் என்கிறோம் – ரோமர் 12:2.
இதன் பின்பு அந்த மனசாட்சி படித்தான் வாழ வேண்டும்.

3. நமது குடும்ப சுத்திகரிப்பு.
நமது குடும்பம் ஆகமியத்தின் கூடாரம். எப்படி?
ஆதியில் தேவ குடும்பம் ஏற்படுத்தபட்டது.
பின்னர் சாத்தானுக்கு இடம் கொடுத்து பாவத்தின் பிறப்பிடமாக மாறியது. அதனால் அது ஆகமியத்தின் கூடாரம். இப்பொழுது நமது குடும்பம் தேவனுடைய ஆலயமாயிருக்க சுத்திகரிப்பு அவசியமாயிருக்கிறது. யோபு தன் குடும்பத்தில் சுத்திகரிப்பை கொண்டுவந்தார் யோபு 1:5.
குடும்ப தலைவன் – தலைவி சங்கீதம் 128 ன்படி வாழ்ந்தால் தேவ பக்தியுள்ள சந்ததி உண்டாகும். மல்கியா 2:15. குடும்பத்தில் தேவ தூதர்கள், சபை ஊழியகாரர்கள் அடிக்கடி வந்து செல்லும்படியான இடம் உண்டாக்க வேண்டும். மேலும் நமது விவாக மஞ்சம் அசுசி படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எபிரெயர் 13:4.

4. நமது பணியிட சுத்திகரிப்பு. பணத்துக்காக வேலையல்ல, வாழ்வதற்காக வேலை. நலமான வேலை செய்ய வேண்டும் என்று பவுல் கூறுகின்றார். எபேசியர் 4:28. வேலை செய்யாமல் சாப்பிடவும் கூடாது என்கிறார் பவுல். 2தெசலோனிக்கேயர் 3:10-12.
அந்த வேலையில் சுத்திகரிப்பு என்றால் என்ன?
நீ சாட்சியாக நிற்பதினால். 1பேதுரு 2:18-21. பவுல் வேலைக்காரரே என்று அறிவுறுத்துகின்றனர். எபேசியர் 6:5-8.

5. ஆலய சுத்திகரிப்பு.
ஆலயம் தேவன் தங்கும் இடம்.
தேவன் மனிதரை சந்திக்கும் இடம். ஆலயத்தில் பணபுழக்கம், மனபுழுக்கம் இருக்கலாகாது.
பாவிகள் சபையில் நிலை நிற்க முடியாது. சங்கீதம் 1:5.

ஏன் அவர்கள் நிற்கவியலாது?
அங்கே தேவன் எழுந்தருளியிருக்கிறார். சங்கீதம் 82:1

எப்படியிருந்தால் சபையில் தேவ மகிமை விளங்கும்?
மகிழ்ச்சியோடே காணப்பட்டால். சங்கீதம் 100:2 சங்கீதம் 66:13-15. சுத்திகரிக்கபட்டவர்கள் தான் தேவாலயத்தில் நாட்டப்படுகிறார்கள். சங்கீதம் 52:8; சங்கீதம் 92:13. சபையின் முன்னணியத்தில் நிற்பவரே தேவனின் பணியாட்கள். சங்கீதம் 134.
ஒப்படைப்பின் – அர்ப்பணிப்பின் மனிதர்களே சுத்திகரிக்கப்பட்ட ஆலயவாசிகள்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME