அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்
And everyone who has this hope in Him purifies himself, just as He is pure. (1John 3:3)
1John 2:6; 1john 4:17; Matthew 5:48;Hebrew 7:26; Acts 15:9; 2Corinthians 7:1; Hebrew 12:14; 2Peter 1:3,4; 2பேதுரு 3:14; Levitics 10:3,10,11; Levotics 20:7,8.
அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான். (1 யோவான் 3:3)
1யோவான் 2:6; 1யோவான் 4:17; மத்தேயு 5:48; எபிரெயர் 7:26; அப்போஸ்தலர் 15:9; 2கொரிந்தியர் 7:1; எபிரெயர் 12:14; 2பேதுரு 1:3,4,4; 2பேதுரு 3:14; லேவியராகமம் 10:3,101,1; லேவியராகமம் 20:7,8.
தன்னைதானே சுத்திகரித்துக்கொள்ளுதல்.
பரிசுத்தம் என்பது தேவனுடைய குணமல்ல, அவருடைய ஆளத்துவம். அவர் பரிசுத்தராயிருக்கிறார். ஆகையினால் அவரால் படைக்கப்பட்ட யாவிலும் அவரின் பரிசுத்தத்தின் சாயல் காணப்பட்டது. அவரால் உருவாக்கப்பட்ட மனிதனும் பரிசுத்தனாகவே காணப்பட்டான். பாவம் என்பது பரிசுத்தராகிய தேவனை விட்டு விலகிச் செல்வது ஆகும். ஆதிமனிதன் தேவனை விட்டு விலகி அவரின் பரிசுத்தத்தை இழந்து வெறும் மண்ணாக மாறினான். மனிதன் தன்னை மண்ணென்று நினைவு கூருவதே பரிசுத்தத்தை இழப்பதாகும்.
பாவ சிந்தனைகளைக் கொண்டு மிருகத்தின் புத்தியை உடையவனாய் இருந்து பிசாசோடு இணைந்து வாழ்ந்த மனிதனில் பரிசுத்த சிந்தையை உருவாக்கி தேவனோடு இணைந்து வாழும்படியாகவே தேவன் தமது குமாரனை அனுப்பினார். இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படுகிறவன் அல்லது விசுவாசத்தினால் கிறிஸ்துவோடு இணைகிறவனில் இருந்த பாவசிந்தை அகன்று பரிசுத்த சிந்தை உண்டாகின்றது. அதாவது தான் தேவனுடைய குமாரன் என்கின்ற உணர்வுக்குள் வருகின்றான். இதுவே அவன் பரிசுத்தனாயிருப்பதின் வெளியரங்கம். இயேசுவை உள்ளிலும் வெளியிலும் தரித்துக்கொள்வதே பரிசுத்தம் ஆகும்.
அவரின் பரிசுத்தம் அவருடைய பிள்ளைகளில் வெளிப்பட்டு பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காண்பிக்கின்றது. சொல்லிலும், செயலிலும் பழக்கவழக்கங்களிலும் பரிசுத்தம் வெளிப்பட்டு பரிசுத்தமில்லாதவைகளிலிருந்து நம்மை பிரிக்கின்றது. பிரித்தெடுக்கப்பட்டவன் என்ற சிந்தை மேலோங்காமல் பரிசுத்தத்தை வெளிப்படுத்த இயலாது. அவர்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவனும் தன்னை கிறிஸ்தவன் என்று சொல்லுகிறவனும் அவரது பரிசுத்தத்தை வெளிப்படுத்த வேண்டும்.
அவரது பரிசுத்தத்தின் அடிப்படையில் தன்னைதானே சுத்திகரித்துக்கொள்ளும் காரியங்களில் தேவனுடைய பிள்ளைகள் ஈடுபட வேண்டும். ஏனெனில் நாம் வாழும் பூமி பொல்லாங்கனுக்குள் விழுந்து கிடக்கின்றது. ஆகையினால் பரிசுத்தத்தைக் குலைத்துப்போடும் காரியங்கள் திரளாக காணப்படுகின்றன. சிந்தையில் உண்டாகும் தாறுமாறான எண்ணங்களும், மாம்சத்தில் உண்டாகும் இச்சைகளின் எழுச்சியும் நம்மை அசுசிபடுத்தும்படி போராடக்கூடியவைகள் ஆகும். ஆகவே இவைகளின் கிரியைகள் நம்மில் விளங்கும் பரிசுத்தத்தை குலைத்துப்போடாதபடிக்கு கீழ்படிதலுக்குள்ளும் விசுவாசத்திற்குள்ளும் அன்புக்குள்ளும் நற்கிரியைகளுக்குள்ளும் நம்மை நிலைநிறுத்திக்கொள்ள அநுதினமும் போராட வேண்டும். தன்னை வேறுபிரிக்கப்பட்டவனாக நிலைநிறுத்திக்கொள்ளுவதுதான் தன்னைதானே சுத்திக்கரிப்பதாகும்.
பல தேவனுடைய பிள்ளைகள் பொருளாசை என்ற அசுத்த செயலினால் தங்களில் விளங்கும் பரிசுத்தத்தை இழந்துக்கொண்டு வருகிறார்கள். தங்களில் பரிசுத்தம் இல்லாதிருந்தும் தேவனைப்போல காணப்படுகிறவர்களாகவும் ஆவிக்குரிய மனிதர்களாக காட்டிக்கொள்கிறவர்களாகவும் இருந்து ஒளியின் தூதனின் வேஷத்தை வெளிப்படுத்துகிறார்கள். இவர்களின் கிரியைகளிலே அசுத்தம் வெளிப்படுகின்றது.
கேள்வி. கிறிஸ்துவைபோல வாழ்வதற்கு நம்மில் காணப்பட வேண்டிய மாற்றம் என்ன?
நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்தபுத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.
நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள். 1பேதுரு 1:13-17.