சீஷருடைய கால்களைக் கழுவவும், துடைக்கவும் தொடங்கினார்

சீஷருடைய கால்களைக் கழுவவும், துடைக்கவும் தொடங்கினார்.

began to wash the disciples’ feet, and to wipe them with the towel . (John 13:4,5)

Acts 22:16; 1Cor6:11; Tit3:3-5; Hebrews 10:19-22; 1John1:7; Revelation 1:5; Revelation 7:14; Exodus 29:4; Lev14:8; 2Kings 5:10-13; Ps51:2; Isaiah 1:16.

போஐனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, (யோவான் 13:4)

பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். (யோவான் 13:5)

அப்போஸ்தலர் 22:16; 1கொரிந்தியர் 6:11; தீத்து 3:3-5; எபிரெயர் 10:19-22; 1யோவான் 1:7; வெளி1:5; வெளி 7:14; யாத்திராகமம் 29:4; லேவியராகமம் 14:8; 2இராஜாக்கள் 5:10-13; சங்கீதம் 51:2; ஏசாயா 1:16

இயேசு கால்களைக் கழுவினார்:
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது சீஷர்களின் கால்களை கழுவிய செயல்பாடு குறித்து ஒருசில உண்மைகளை நாம் அறிய வேண்டும்.
இது ஒரு மாதிரிக்காக செய்யப்பட்டுள்ளது. யோவான் 13:15. சீஷர்கள் இவ்விதமான அணுகுமுறைகளை கூச்சம் பாராது, வெட்கம் பாராது, அந்தஸ்தை துறந்து செய்ய வேண்டும்.

இது தாழ்மையையும், சாந்தகுணத்தையும், பொறுமையையும் சுட்டிக்காட்டுகின்றது. எதிர்த்து செயல்படுவதை கிறிஸ்தவம் அனுமதிக்கவில்லை. அதேபோன்று கிறிஸ்துவின் லட்சணங்களுக்கு மாறானவைகளோடு ஒத்துபோவதையும், சமரசம் செய்து கொள்வதையும் அனுமதிக்காது. சகிப்புதன்மையே இதன் பிரதானம்.

இது தூய்மையாக்கப்படுதலுக்கு அடையாளம். சமய சடங்குகளினால் உண்டாகும் தூய்மை அவசியமே. ஆனாலும் கர்த்தராகிய இயேசுவினால் உண்டாகக்கூடிய தூய்மையாக்கப்படுதல் மிக அவசியமானதாகும். அவருடைய நாமத்தினாலும், அவருடைய வசனத்தினாலும், அவருடைய இரத்தத்தினாலும் தூய்மை உண்டாகின்றது.

இது ஒரு யூத சமூக ஒழுங்கை பிரதிபலிக்கின்றது. இது பஸ்கா காலங்களிலோ, மற்றுள்ள சமய நிகழ்வுகளிலோ நடத்தப்படுகிறதல்ல, மாறாக பிரயாணத்தில் வருகிற பிரயாணியின் கால்களை வேலைக்காரர்களைக் கொண்டு கழுவுதலை வெளிபடுத்துகின்றது.

முடிவாக, இது இயேசுகிறிஸ்துவின் வேலையாள் – அடிமை பண்பை வெளிபடுத்துகிறது. அவர் அடிமையின் ரூபமெடுத்து வந்தார். ஒரு அடிமையை போல நடத்தப்பட்டார். ஒரு அடிமைக்கு எவ்வித உரிமையும் இல்லாதிருப்பதைபோல இவ்வுலகில் கிறிஸ்துவுக்கும் உரிமைபாராட்டும்படி எதுவும் காணப்படவில்லை.

அவர் சீஷர்களின் கால்களை கழுவினார். பிரகடனப்படுத்த அல்ல, தற்செயலாக – மனரம்மியத்தோடு தந்தை விருப்பத்தோடு செய்தார். நாம் நமது மனதளவில் ஏற்படுத்துகின்ற தாழ்மை உணர்வே அவர் பார்வையில் மேலானதாகும்.

என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும். தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.

உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும், அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள். சங்கீதம் 51:9-13..

ADD YOUR COMMENT

Powered By Indic IME