சீஷனை நோக்கி: அதோ உன் தாய், அந்நேரமே அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்

சீஷனை நோக்கி: அதோ உன் தாய், அந்நேரமே அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.

He said to disciple,Behold ur mother.from that hour that disciple took her to his own home. (John 19:27)

Matthew 12:46-50; Matthew 25:40; Mark 3:34,35; Luke 2:34,35,51; John 2:1-5; 1John 3:18,19; 1John 5:2-4. 

பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார் அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். (யோவான் 19:27)

மத்தேயு 12:46-50; மத்தேயு 25:40; மாற்கு 3:34,35; லூக்கா 2:34,35,51; யோவான் 2:1-5; 1யோவான் 3:18,19; 1யோவான் 5:2-4. 

தெய்வமகனை ஈன்ற அன்பு தாய்:
மரியாள் கன்னிபெண்ணாயிருக்கையில் இயேசுவை பெற்றெடுத்ததினாலும், புருஷ சம்யோகத்தின்படி இயேசுவை பெற்றெடுக்காமல் பரிசுத்த ஆவியின் நிறைவினாலே பெற்றெடுத்ததினாலும் மரியாளை கன்னி மரியாள் என்று பாரம்பரியமாய் அழைப்பதுண்டு. ஏசாயா தீர்க்கதரிசியும்கூட இதோ ஒரு கன்னிகை பிள்ளை பெறுவாள் என்றே கூறுகின்றார். எனவே இந்த மரியாள் குறித்த சில காரியங்களை நாம் தியானிக்கலாம். 
மரியாளின் மேன்மையை குறித்து சொல்லும்போது எலிசெபேத் ‘என் ஆண்டவரின் தாயார்’ என்று கூறுகின்றார். இதற்கு காரணம் என்ன?
லூக்கா 1:38 ல் இதோ நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படியே ஆகக்கடவது என்று கூறியிருப்பதுவே காரணமாயிருக்கலாம். 

தேவனுடைய கிரியைகள் தன்னில் உருவாகவும், வெளிப்படவும் அவமானமாயிருந்தாலும், தள்ளப்படுகின்ற நிலை உண்டானாலும் அவருடைய வார்த்தையை உட்கிரகித்துக்கொண்டு அதற்கேற்றப்படி தன்னை தயார்படுத்துவதில்தான் உள்ளது. 

மரியள் அடிமையாக தன்னை ஒப்புக்கொடுத்ததும், தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்ததுவுமே தேவமகன் பிறப்பிற்கு வழி உண்டானது. 

கிறிஸ்து ஒருவரில் உருவாவதற்கு அடிப்படை காரணம் இவையிரண்டுமே ஆகும். தன்னை அவருக்கு தாரை வார்ப்பதும், அவரின் வார்த்தைக்கு தன்னை பழக்குவிப்பதுமேயாகும். அர்ப்பணம் இல்லையெனில் கீழ்படிதலை எப்படி பார்க்க முடியும்?

அடங்கிபோவதும், விட்டு கொடுப்பதும் கிறிஸ்தவத்தின் இரு கண்கள் ஆகும். தெய்வ அன்பு பலிதமாகாத இடத்தில் இவையிரண்டையும் காண்பது அரிதாயிருக்கும். 

இயேசுவை நேசித்த அன்பு தாயை இயேசுவை நேசித்த அன்பு சீஷன் ஏற்றுக்கொண்டார். அர்ப்பணமும் கீழ்படிதலும் உள்ள இடத்தில் பிறக்கும் அன்பே கிறிஸ்துவை பிறப்பிக்கும். ஆதி பக்தர்கள் இதையே செய்தார்கள். ஆகையினால் சுவிசேஷம் வேகமாக பரவியது. இக்காலத்தில் அர்ப்பணமும் இல்லை, கீழ்படிதலும் இல்லை. ஆனால் அன்பை பிரசங்கிப்போர் அதிகமாயினர். இதனால்தான் கிறிஸ்து பிறப்பிக்கப்படாமல் கிறிஸ்து வெளிப்படாமல் இருக்கின்றார். கிறிஸ்து வெளிப்படும்படியாக அவர் நம்மில் உருவாக அர்ப்பணம் கீழ்படிதலோடு கூடிய அன்பை கொண்டிருப்போம். 

கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. இவைகளைச் சிலர் நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள். 

தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள். ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம். 

எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய்தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும், வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும், நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது. 

என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன். முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச்செய்தபடியினால் இரக்கம்பெற்றேன். 
நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று. பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். 1தீமோத்தேயு 1:5-15.

ADD YOUR COMMENT

Powered By Indic IME