சீமோன் பேதுருவும், வெறொருசீஷனும் அரமனைக்குள் பிரவேசித்தனர்

சீமோன் பேதுருவும், வெறொருசீஷனும் அரமனைக்குள் பிரவேசித்தனர்.

And Simon Peter followed Jesus, and so did another disciple. (John 18:15)

Matthew 26:58-68; Mark 14:54; Luke 22:54; Act 2:29; Act 4:13,30,31; Act 9:27,29; Act 13:46; Act 14:3; Act 18:26; Act 19:8.

சீமோன்பேதுருவும் வேறொருசீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால், இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான். (யோவான் 18:15)

மத்தேயு 26:58-68; மாற்கு 14:54; லூக்கா 22:54; அப்போஸ்தலர் 2:29; அப்போஸ்தலர் 4:13,30,31; அப்போஸ்தலர் 9:27,29; அப்போஸ்தலர் 13:46; அப்போஸ்தலர் 14:3; அப்போஸ்தலர் 18:26; அப்போஸ்தலர் 19:8.

துணிவு – தைரியம்:

சீஷர்களெல்லாரும் இயேசுவை விட்டு ஓடிப்போனார்கள். ஓடிப்போனவர்கள் பயத்தினால் ஓடிப்போனார்களேயன்றி பின்வாங்கி ஓடிப்போகவில்லை. ஆனால் பேதுருவும் யோவானும் தைரியமாய் இயேசுவுக்கு பின்சென்றார்கள். அரமனைக்குள்ளும் பிரவேசித்தார்கள். இதனை துணிவு என்று அழைக்கலாம். துணிச்சல், தைரியம், அச்சமின்மை ஆகியவைகள் மனிதரிடம் உள்ள குணங்களில் ஒன்றுதான். ஆனாலும் பயமுண்டாக்கும் நிகழ்வுகளுக்கு முன்பாக துணிவுடன் நிற்பதும் உண்டு.

இயேசுவின் சீஷர்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்ட பின்பே இவ்வித துணிவு, தைரியம் உடையவர்களாக மாறினர். இந்த தைரியத்தில் வெட்கமின்மை, அச்சமின்மை அகிய இரு பண்புகள் உள்ளன. வெட்கமின்மை என்பது வெட்கப்படாமல் சுவிசேஷத்தை அறிவிப்பதாகும். ஆகையினால் தான் வெட்கப்படாத ஊழியக்காரனாக இருக்க வேண்டும் என்று விவிலியம் கூறுகின்றது. (ரோமர் 1:16; 2 தீமோத்தேயு 1:8; 2தீமோத்தேயு 2:15; 1பேதுரு 4:16). அச்சமின்மை என்பது சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்வதினாலும், அறிவிப்பதினாலும் உண்டாகக்கூடிய எவ்வித இழப்புகளைக் குறித்தும் கவலைபடாமல் இயேசுவை பின்பற்றுவது ஆகும்.

பழைய ஏற்பாட்டின் காலத்தில் இவ்வார்த்தைகளின் பொருள் வித்தியாசமானதாக காணப்பட்டது. துணிந்து எதிராளிகளை அழிப்பதையே பிரதானமாக நாம் காண்கின்றோம். ஆனால் பு. ஏ ல் துணிவு என்பது உபத்திரவங்களைப் பொறுமையாய் சகிப்பதில்தான் அடங்கியுள்ளது.

இந்த பேதுருவும் யோவானும் இயேசுவோடுகூட காவலிலும், சாவிலும் பின்பற்றிச் செல்லும் துணிவு பெற்றிருந்தனர். பேதுரு இயேசுவைப் போல சிலுவையில் தலைகீழாக அறையப்பட தன்னை ஒப்புக்கொடுத்தார். யோவான் தன்னை பத்மு தீவுக்கு நாடுகடத்தப்பட ஒப்புக்கொடுத்தார். இக்காலத்தில் பாடுகளை அனுபவிக்க விருப்பமற்றவர்கள் கட்சிகளையும், நிறுவனங்களையும், பதவிகளையும் உருவாக்கி தங்களைக் காத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். தங்களுக்கு வரும் துன்பங்களை சகிக்காமல் எதிர்த்து நிற்கிறவர்களாக உள்ளனர். இயேசு கிறிஸ்து இப்படிப்பட்ட முறைமையை நமக்கு கற்றுதரவில்லை. தமது ஆவியை தந்திருப்பதுவே உபத்திரவங்களையும், பாடுகளையும், பொறுமையாக சகிப்பதற்காகும். நாம் பொறுமையாய் சகிப்பதற்காகவே இந்த ஆவியானவர் தைரியத்தையும், துணிவையும் தந்துள்ளார்.

சிங்க கெபியில் நுழையும் துணிவு;
எரி நெருப்பில் நுழையம் தைரியம் நமக்குண்டா?
ஒரு பெரிய ஜீவகிரீடம் நமக்காக வைக்கப்பட்டுள்ளது.

விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள், யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள். ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப்பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்;

வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்; கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்; உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்.

இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். எபிரேயர் 11:33-39.

ADD YOUR COMMENT

Powered By Indic IME