சிலுவையே என் மேன்மை.
Cross:
Mt10:38; Mt16:24; Mt26:2; Mt27:22,31,32,38; Mt28:5; Jn10:31; Act2:23,36; Ro6:6; 1Cor1:17,18; 1Cor2:2; 2Cor13:4; Gal2:20; Gal5:11,24; Gal6:12; Eph2:16; Phi2:8; Col1:20; Col2:15; Heb6:6; Heb12:2; 1Pet2:24.
மத்தேயு 10:38; மத்தேயு 16:24; மத்தேயு 26:2; மத்தேயு 27:22,31,32,38; மத்தேயு 28:5; யோவான் 10:31; அப்போஸ்தலர் 2:23,36; ரோமர் 6:6; 1கொரிிந்தியர் 1:17,18; 1கொரிந்தியர் 2:2; 2கொரிந்தியர் 13:4; கலாத்தியர் 2:20; கலாத்தியர் 5:11,24; கலாத்தியர் 6:12; எபேசியர் 2:16; பிலிப்பியர் 2:8; கொலோசெயர் 1:20; கொலோசெயர் 2:15; எபிரெயர் 6:6; எபிரெயர் 12:2; 1பேதுரு 2:24.
சிலுவையே என் மேன்மை:
சிலுவை அவமானத்தின் சின்னம். மரண ஆயுதம். இரத்தக்கறைகளின் சங்கமம். குற்றவாளிகளின் கழுமரம். இந்த சிலுவையே கிறிஸ்தவத்தின் மையப்பொருளாய் மாறியது. பைத்தியகாரனை ஞானியாக்க முடியுமென்றால் சிலுவையையும் சிறப்பானதாக மாற்றமுடியும். சிலுவையைக் குறித்து பல உண்மைகள் இருந்தாலும் சிலவற்றை நாம் காண்போம்.
- இயேசு தாம் மரிக்குமுன்பதாகவே சிலுவையை குறித்து பிரசங்கித்தார். மத்தேயு 10:38; மத்தேயு 16:24.
- சிலுவை தேவனுடைய முன்னேற்பாடு. இரட்சிப்பின் திட்டத்தின் ஒரு பங்கு. அப்போஸ்தலர் 2:23.
- இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்பது வரலாற்று உண்மை. அவர் பாவிகளுக்காகவும், குற்றவாளிகளுக்காகவும் பாவியாக்கப்பட்டார்.
- கிறிஸ்துவ உபதேசம் சிலுவையிலிருந்துதான் ஆரம்பிக்கின்றது. உபதேசம் மட்டுமல்ல, வாழ்க்கைமுறையும் இங்கிருந்தே ஆரம்பமாகின்றது. எனவே சிலுவை ஒரு திருப்புமுனையாகும். எளிமையான உபதேசம், எளிமையான வாழ்க்கைமுறை.
- நாம் சிலுவையில் அறையப்படவேண்டும் என்பது வரலாற்று காரியமல்ல, ஆவிக்குரிய காரியமாகும். நமது சிந்தையிலும், குணங்களிலும் சிலுவை சந்திக்கப்படாமல் ஆவிக்குரிய அனுபவம் கூலாகாது. கிறிஸ்துவோடுகூட சிலுவையில் அறையப்படுதலே பாக்கியமானது. உயிர்ப்புக்கும் அதுவே அச்சாணி.
- சிலுவையைக் குறித்து பிரசங்கிக்க வேண்டும் என்பது சிலுவையில் அறையுண்டு மரித்தவரே ஆண்டவரும், மீட்பருமானார் என்பதாகும். சிலுவையைப்பற்றிய உபதேசம் அறிவிக்கப்பட்டாக வேண்டும். சிலுவையைக் குறித்த செய்தி தேவன் கொடுத்தச் செய்தி. பாவம் சாகடிக்கப்பட, பிசாசு தோற்கடிக்கப்பட சிலுவையை பிரசங்கி.
- சிலுவையே மேன்மை. சிலுவைக்கு பின்பே மேன்மையும், புகழ்ச்சியும் , ஆசீர்வாதமும். நாம் சிலுவை வழி சென்று ஆசீர்வாதமடைவோம். ஆமென்.