சிலர் நினைத்தார்கள்

சிலர் நினைத்தார்கள்.

For some thought, because Judas had the money box, that Jesus had said to him. (John 13:29)

John 12:5; Acts 20:34,35; Gal2:10; Eph4:28; Job31:17; Ps112:9.

யூதாஸ் பணப்பையை வைத்துக் கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள். (யோவான் 13:29)

யோவான் 12:5; அப்போஸ்தலர் 20:34,35; கலாத்தியர் 2:10; எபேசியர் 4:28; யோபு31:17; சங்கீதம் 112:9.

சிலர் நினைத்தார்கள். கிறிஸ்தவம் குறித்தும், கிறிஸ்தவ வாழ்வியல் குறித்தும், கிறிஸ்தவ உபதேசங்கள் குறித்தும் பலவிதமான பேச்சுக்கள் உலகமெங்கும் பரவி கிடக்கின்றன. ஒரே ஆவியை பெற்றிருந்து ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமாக திரித்துரைக்கின்றனர். அனுமானங்களும், ஹோஸ்யங்களும் அதிகரித்துவிட்டன. இயேசுவின் காலத்திலும் இத்தியாதி காரியங்கள் காணப்பட்டன. யூதாஸ் நலமல்லாத காரியத்தில் ஈடுபடும்படியாய் முயற்சிக்கிறதை அறியாமல் அவனை குறித்து நல்லவிதமாக பேசக்கூடிய ஆரோக்கியமற்ற உள்பார்வையை கொண்டிருந்த சீஷர்களை போல இக்காலத்திலும் பாவத்துக்கும், பாவக்கிரியைகளுக்கும் ஒத்துதவக்கூடிய மனோபாவங்கள் காணப்படுகின்றன. தேவன் எல்லாவற்றையும் கவனிக்கின்றார்.

யாவையும் ஆராய்கின்றார். அவருடைய கண்களுக்கு மறைவானது ஒன்றுமில்லை. அவரை நம்மிஷ்டம்போல் வளைக்கமுடியாது. அவர் நேரானவர். நேர்மையானவர். பிறர் சொல்வதை கேட்டு தீர்ப்பிடுகிறவர் அல்ல. ஆராய்ந்து தீர்ப்பிடுகிறார். முகம் பார்த்து பேசுகிரறவர் அல்ல. அகம் பார்த்து பேசுகிறவர். நம் நிலைபார்த்து உபதேசங்களை உருவாக்குகிறவர் அல்ல, அவர் நிலைக்கு நாம் வரவேண்டும் என்ற முறையில் உபதேசங்களை உருவாக்குகிறவர்.
சத்தியத்தை சத்தியமாகவும், உண்மையை உண்மையாகவும், பொய்யை பொய்யாகவும், தீமையை தீமையாகவும் பேச அழைக்கப்பட்டுள்ளோம். உள்ளதை உள்ளதென்று பேச அழைக்கப்பட்டுள்ளோம். மறைவானவைகளை மறைவானவைகளாகவே கருதுவோம். வெளிபடுத்தப்பட்டவைகளை வெளியரங்கமாக்குவோம்.

நம் நினைவுகளின்படியல்ல, நம்கையில் தரப்பட்டுள்ள விவிலிய வசனங்களை பரிசுத்த ஆவியை கொண்டு தியானித்து பெலமடைவோம்.

கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.

நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார். பிலிப்பியர்4:8,9.

ADD YOUR COMMENT

Powered By Indic IME