பக்தியுள்ளவனாயிருந்து தேவனுக்கு சித்தமானவைகளைச் செய்தால் செவிகொடுப்பார்.
if anyone is a worshiper of God and does His will, He hears him. (John 9:31b)
Jn11:41,42; 1Jn3:21,22; 1Kin17:20-22; Ps99:6; Ps106:23; Jer15:1; Jas5:15-18; Ps4:3; Ps5:7; Ps32:6; Jona1:9; Mal2:15; Act10:2; Jas1:26.
பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம், ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
(யோவான் 9:31)
யோவான் 11:41,42; 1யோவான் 3:21,22; 1இராஜாக்கள் 17:20-22; சங்கீதம் 99:6; சங்கீதம் 106:23; எரேமியா 15:1; யாக்கோபு 5:15-18; சங்கீதம் 4:3; சங்கீதம் 5:7; சங்கீதம் 32:6; யோனா1:9; மல்கியா 2:15; அப்போஸ்தலர் 10:2; யாக்கோபு 1:26.
பக்தியுள்ளவன்:
ஒருவன் பக்தியுள்ளவனாயிருப்பதால் மாத்திரம் அல்ல, பக்தியுள்ளவனாயிருந்து தேவனுடைய விருப்பத்தை செய்கிறவனாயிருந்தால் மட்டுமே தேவன் செவிகொடுப்பார். ஒருவன் விசுவாசமுள்ளவனாயிருக்கிறதினால் மாத்திரமல்ல, விசுவாசமயிருந்து தேவனுக்கு விருப்பமானதை செய்தால் தான் செவிகொடுப்பார். ஒருவன் கிறிஸ்தவனாயிருந்து தேவனுக்கு சித்தமானவைகளை செய்தால் மட்டுமே செவிகொடுப்பார். ஒருவர் பிரசங்கியாராகவோ, ஊழியராகவோ இருந்து அவருக்கு சித்தமானவைகளை செய்தால்தான் செவிகொடுப்பார். ஒருவர் அபிஷேகம் பெற்றிருந்து அவருக்கு பிரியமானதை செய்தால் தான் செவிகொடுப்பார். இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரனாயிருந்து ஆவியின் நிறைவை பெற்றிருந்து தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றினதினால்தான் அவருக்கு பிதா செவிகொடுத்தார். பக்தியுள்ளவனை தேவன் தமக்காக தெரிந்துகொண்டதின் நோக்கமே அவருடைய விருப்பத்தை செய்வதற்காகத்தான்.
பக்தியுள்ளவன் என்றால் தேவனுக்கும், அவருடைய குமாரனுக்கும், ஆவிக்கும், வசனத்துக்கும், கிரியைகளுக்கும், சபைக்கும் பயந்து வாழ்கிறவனே. அவரை மாத்திரம் நம்பி, அவரை மாத்திரம் தொழுதுகொள்ளுகிறவனே பக்தியுள்ளவன். கிறிஸ்துவை மாத்திரமே நம்பி தொழுகிற அனைவரும் பக்தியுள்ளவர்களே. எனவே கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்கிற அனைவரும் இயேசுவின் விருப்பம் எதுவோ அதை மட்டுமே செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். (சங்கீதம் 40:7) நாம் அவருடைய விருப்பத்தின்படி பேசியும், நடந்தும், வாழ்ந்தும், செய்தும் வருவோமென்றால் அவர் நமக்கு செவிகொடுப்பார் என்கிற தைரியத்தில் வாழலாம். பக்தியுள்ளவன் அற்றுபோகுமுன்பு சித்தம் செய்து பக்தியை நிலைநிறுத்துவோம்.
கர்த்தாவே உம்மை நம்பி உம்மை மாத்திரமே பின்பற்றி வாழ்கிற அனைவரும் உமது சித்தம் செய்து வாழதக்கதாக உதவி செய்யும்.