பிதாவைபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.
Father raises the dead and gives life to them, even so the Son gives life to whom He will. (John 5:21)
Jn11:25,43,44; Jn14:6; Jn17:2; Lk7:14,15; Lk8:54,55; Act26:8; Ro4:17-19; 1Cor15;22,45; 2Co3:6; Phi3:10; Deu32:39; 1Ki17:21; 2Ki4:32-35.
பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். (யோவான் 5:21)
யோவான் 11:25,43,44; யோவான் 14:6; யோவான் 17:2; லூக்கா 7:14,15; லூக்கா 8:54,55; அப்போஸ்தலர் 26:8; ரோமர் 4:17-19; 1கொரிந்தியர் 15;22,45; 2கொரிந்தியர் 3:6; பிலிப்பியர் 3:10; உபாகமம் 32:39; 1 இராஜாக்கள் 17:21; 2 இராஜாக்கள் 4:32-35.
இயேசுகிறிஸ்து உயிர்ப்பிக்கிறார்:
இங்கு உயிர்ப்பிக்கிறார் என்று கூறுவதைவிட உயிரை கொடுத்து உயிராக்குகிறார். அதாவது உயிர் இல்லாதவர்க்கு உயிர்கொடுத்து உயிர்பெறச் செய்கிறார் என்று பொருளாகும். அதே நேரத்தில் மரித்தவர்களையும் அவரால் உயிர்ப்பிக்க முடியும் என்றும் கூறலாம்.
இயேசுகிறிஸ்து உயிர்ப்பிக்கிறார் என்று கூறும்போது 7 விஷயங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
1. தேவன் உயிர்ப்பிக்கிறவர்.எனவே உயிர்ப்பிக்கும் அதிகாரத்தை, ஆற்றலை குமாரனுக்கும் தந்துள்ளார்.
2. இயேசுகிறிஸ்துவில் உயிர்ப்பிக்கும் ஜீவன், ஆவி நிறைவாய் உள்ளது.
3. இயேசு கிறிஸ்துவே மரணத்தினின்று உயிர்ப்பிக்கப்பட்டு உயிர்ப்பிக்கப்பட்டோர்களில் முதற்பலனானார்.
4. பாவத்தில் செத்தவர்களை பாவ அடிமைதனத்தினின்று விடுவித்து உயிர்ப்பிக்கிறார்.
5. மரணத்தில் சென்றவரை – செத்தவரை உயிர்ப்பிக்கிறார்.
6. மன அளவில் செத்தவரை வார்த்தையினால் உயிர்ப்பிக்கிறார்.
7. மரண தூளில் நித்திரை பண்ணுகிறவர்களையும் உயிர்ப்பிக்கிறார்.
ஆம் இயேசுகிறிஸ்து அன்றுமட்டுமல்ல இன்றும் உயிர்ப்பிக்கிறார். ஆனால், பிதாவுக்கு விருப்பமானவர்களையே உயிர்ப்பிக்கிறார் என்பதை மறந்து போகலாகாது.
குமாரன் தமக்கு சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார் என்பது இரு விஷயங்கள் சார்ந்தது.
1. பிதாவின் விருப்பத்தையே தம் விருப்பமாகக் கொள்கிறார். தாமாக விரும்பி செய்வதும் தேவனது விருப்பத்துக்கு உட்பட்டதே.
2. இயேசுகிறிஸ்துவின் விருப்பம் யார்மேல் காண்பிக்கப்படுகிறதோ அவர்களின் கீழ்படிதல், அர்ப்பணம், விசுவாசம், நம்பிக்கையை சார்ந்தது.
நித்தியத்திற்காகவோ, அநித்தியத்திற்காகவோ யாவரும் உயிர்ப்பிக்கப்படுவர். ஆனால் அவருக்கும் அவரின் இராஜ்ஜியத்திற்கென்றும் உயிர்ப்பிக்கப்படுதலையே இயேசுகிறிஸ்து இங்கு குறிப்பிடுகிறார்.
இயேசுகிறிஸ்துவின் உயிர்ப்பிக்கும் ஆவி அவரால் உயிர்ப்பிக்கப்பட்ட யாவரிலும் இருந்து வல்லமையாய் கிரியை செய்கிறது.
மரணம் மேற்கொள்ளாது, பாதாளம் மேற்கொள்ளாது, பாவம் மேற்கொள்ளாது, பிசாசு மேற்கொள்ளாது, உலகம் மேற்கொள்ளாது, மாமிசம் மேற்கொள்ளாது.
அவரின் உயிர்ப்பிக்கப்படுதலுக்கு கடந்து வருகிறவரே நீர் பாக்கியவான். கர்த்தர் உம்மோடிருப்பார்.
கர்த்தாவே, நீர் உமது மகனை உயிர்ப்பித்து அவரைகொண்டு எங்களையும் பாவகட்டிலிருந்து ஜீவன் தந்து உயிர்ப்பித்தீர். இனி நாங்கள் பாவ சரீரத்துக்கு பணி செய்கிறவர்களாக அல்ல, உயிர்ப்பின் வாழ்விற்காய் பணி செய்ய எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். எங்களை கொண்டு பாவத்திலே செத்துமடியும் மனுக்குலத்துக்கு ஜீவன் கொடுக்க உமது ஆவியானவரை கொண்டு எங்களை பலபடுத்தும்.