சித்தமானதையே

நான் என் சுயமாய் எதையும் செய்யாமல் அவருக்கு சித்தமானதையே செய்கிறேன்.

I can of mine own self do nothing, I seek not mine own will. (John 5:30)
Jn4:34; Jn6:38; Jn8:50; Jn17:4; Jn18:11; Mt26:36-46; Ro15:3; Heb10:7-10; Ge18:25; Nu16:28; Ps40:7,8; Ps96:13; Isa11:3,4; Eph5:1,2.

நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை: நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்: எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான் 5:30)

யோவான் 4:34; யோவான் 6:38; யோவான் 8:50; யோவான் 17:4; யோவான் 18:11; மத்தேயு 26:36-46; ரோமர் 15:3; எபிரெயர் 10:7-10; ஆதியாகமம் 18:25; எண்ணாகமம் 16:28; சங்கீதம் 40:7,8; சங்கீதம் 96:13; ஏசாயா 11:3,4; எபேசியர் 5:1,2.

ஊழியனின் அதி முக்கிய பணி:

இயேசுகிறிஸ்து தேவனுடைய வேலையாள்.
இயேசுகிறிஸ்து தேவனால் அனுப்பபட்டவர்.
இயேசுகிறிஸ்து தேவனுடையதை தேவனுக்காக தேவனுடைய வழியில் நின்று செய்கிறவர்.
இயேசுகிறிஸ்து தேவனால் எழுப்பபட்டவர்.
இயேசுகிறிஸ்து தேவனால் உயர்த்தப்பட்டவர்.

கர்த்தரின் பணியை கர்த்தருக்காய் கர்த்தரின் வழியில் நின்று செயல்படுகிறவனே உண்மை ஊழியக்காரன்.
இயேசுகிறிஸ்துவின் அடிச்சுவட்டை பின்பற்றிசெல்ல இயேசுகிறிஸ்துவால் தெரிந்து கொள்ளபட்டு பிதாவினால் அழைக்கப்பட்டவர்.

இயேசுகிறிஸ்துவின் சரீரமாகிய தோட்டத்தில் யார் பணி செய்யவேண்டும் என்பதை தந்தையே தீர்மானிக்கின்றார்.

ஊழியகாரனை உண்மையுள்ளவன் – மருளாத விசுவாசத்தையுடையவன் – ஒழுக்கமுள்ளவன் – தன் புகழ்பாட விரும்பாதவன் போன்ற குணங்கள் உடையவனாக இருப்பான் என்று அறிந்து நம்பியே தன் களத்துமேட்டில் போரடிக்கும் பணியை செய்ய தெரிந்து கொண்டிருக்கின்றார்.

ஒரு ஊழியகாரன் பாவியாயிருந்து – மனந்திரும்பி – இரட்சிக்கப்பட்டு – நல்ல விசுவாசியாக வாழ்ந்து தன் பண்ணையில் பணி செய்யும்படி தேர்ந்தெடுக்கப்பட்டவன்.

இயேசுகிறிஸ்துவின் சாட்சி உண்மையானதே. ஆனால் அவர் தன்னைகுறித்து மிகைபடுத்த விரும்பவில்லை.
அவரின் பணியை செய்ய அழைப்புபெற்ற ஊழியகாரன் தன்புகழ் தேடுகிறவனாக அல்லாது அவர் புகழ் பாடுகிறவனாக இருக்க வேண்டும்.

ஊழியகாரன் இயேசுவைபோல வாழ்ந்து, பிரசங்கித்து, பாடுகளை அனுபவித்து, அனேகரை நீதிமான்களாக மாற்றி மரிக்க அழைக்கப்பெற்றவன்.

இந்த பூமியில் நல்ல வேலையாளாக இருந்தால் தேவனுடைய சந்நிதியில் கனம் பெற்றவனாகிறான்.
கனம் இந்த பூமி சார்ந்ததல்ல, அது மறுமை சார்ந்தது. இயேசுவைபோல உண்மை ஊழியனும் உயர்த்தப்படுவான்.

இயேசுகிறிஸ்து – ஊழியக்காரன் என்ற விளக்கவியல் மிகவும் ஆழமானது. அதை சிந்தியுங்கள்.இயேசுவைபோல மாறுங்கள். இந்தியா இயேசுவை அறியட்டும்.

கர்த்தாவே, உம் மகனைகொண்டு நல்ல பணியாட்களை உருவாக்கினீர். எங்களை உம் பண்ணையில் உண்மையாக பணியாற்றுவோம் என்று நம்பி ஏற்படுத்தினீர். நாங்கள் பல உபதேசங்களுக்கு செவிகொடுத்து சோரம்போகின்றவர்களாக இருக்கின்றோம். எங்களை மன்னியும். நாங்கள் உண்மையுள்ள பணியாட்களாக உம்மிடத்தில் பணி செய்து பணி நிறைவுபெற எங்களுக்கு உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME