சாட்சி கொடுக்கிறோம்

நாங்கள் அறிந்து, கண்டு சாட்சி கொடுக்கிறோம், நீங்களோ ஏற்றுக்கொள்வதில்லை.

Truly,I tell you,we speak of what we know and testify to what we have seen;yet you do not receive our testimony. (john3:11)
Jn3:32-34; 1:18; 7:16; 8:14,28,29,38; 12:49;14:24;Mt11:27;1Jn1:1-3;5:6-12; Rev1:4,5; Isa55:4.

மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்: நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. (யோவான் 3:11)

யோவான் 3:32-34; யோவான் 1:18; யோவான் 7:16; யோவான் 8:14,28,29,38; யோவான் 12:49; யோவான் 14:24; மத்தேயு :27; 1 யோவான் 1:1-3; 1 யோவான் 5:6-12; வெளி 1:4,5; ஏசாயா 55:4.

மனிதரால் மதிக்கப்படாத சாட்சியம்:

1. இயேசுவே சாட்சியாயிருக்கிறார். மனிதர் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி அவரே சாட்சியம். தேவனால் அங்கீகரிக்கபட்ட சாட்சியம். தேவனால் அனுப்பபட்ட சாட்சியம், உண்மையுள்ள சாட்சியம். அவர் மரித்து, உயிர்த்து தம்மை சாட்சியமாக உறுதிபடுத்தியுள்ளார்.

2. இயேசுவே சாட்சியங்களை அறிவிக்கிறவர். அவர் தன்னிஷ்டமாகவல்ல, தம்மை அனுப்பினவரிஷ்டமாகவே அறிவிப்பவர். தமது தந்தை சொல்வதையே அறிவிக்கிறார். தாம் அவரிடம் கேட்பதையே அறிவிக்கிறார். தம் பிதா செய்வதையே அறிவிக்கிறார். இயேசு கூறியிருப்பதே தேவனால் முத்திரையிடபட்ட சாட்சியம். அதை தேவன் மாற்றியமைப்பதில்லை. இந்த சாட்சியங்களின்படியே பிதா செயல்படுவார்.

3. இயேசுவே சாட்சியங்களின்படி வாழ்ந்தவர். எத்தகைய சாட்சியங்களை அறிவிக்கும்படியாக கொடுக்கப்பட்டதோ, அதற்கேர்றாற்போல் தன்னை அமைத்துக்கொண்டவர். தன்னுயிர் போனாலும், அந்த சாட்சியங்களின்படி வாழ்ந்து அதை நிறைவேற்றியுள்ளார். எனவே, பிதாவே, இயேசுகிறிஸ்து பரலோகத்துக்கு சென்றபின்பும் அவரையே இவ்வுலகில் சாட்சியமாய் வைத்துள்ளார். எந்த மதமோ, இனமோ இதற்கு இணையில்லை.

4. சாட்சியங்களின் உயிரோட்டம் பரிசுத்த ஆவியானவரே. இயேசுவையும், அவர் சாட்சியங்களயும் இன்றைக்கும் எத்தகைய எதிர்ப்புகள் மத்தியிலும் செத்துவிடாதபடி உயிருள்ளவையாக வைத்து சபை மூலமாகசெயல்படுத்துகிறார். அவரின் ஆவியானவருக்கு விரோதமாக ஒன்றுமில்லை.

5. சாட்சியங்களின் இறுதி நிறைவு அவரின் வருகையில் நிறைவடைகின்றது. வருகைக்கு ஆயத்தப்படுவோர் மட்டுமே அவரின் சாட்சியமுடையவர்களாயிருக்கின்றனர்.

கர்த்தாவே, இந்த சாட்சியங்களை உடையவர்களாக நாங்கள் உம் வருகை வரையிலும் வாழ்ந்து உம்மண்டையில் கற்புள்ளவர்களாக வந்து சேர உதவி செய்தருளும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME