மெய்யான

என்னைக்குறித்து அவர் கொடுக்கிற சாட்சியே மெய்யான சாட்சி.

I know that the witness which He witnesses of Me is true. (John 5:31,32)
Jn5:36,37; Jn1:33; Jn8:17,18; Jn12:28-30; Mt3:17; Mt17:5; Mk1:11; Lk3:22; 2Co10:12,18; heb11:4; 1Jn5:6-9; Pr20:6; Pr25:27b; Pr27:2.

என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது.
என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன். (யோவான் 5:31,32)

யோவாள5:36,37; யோவான் 1:33; யோவான் 8:17,18; யோவான் 12:28-30; மத்தேயு 3:17; மத்தேயு 17:5; மாற்கு 1:11; லூக்கா 3:22; 2கொரிந்தியர் 10:12,18; எபிரெயர் 11:4; 1 யோவான் 5:6-9; நீதிமொழிகள் 20:6; நீதிமொழிகள் 25:27b; நீதிமொழிகள் 27:2.

மெய்யான சாட்சி:

இயேசுகிறிஸ்து தன்னைதானே சாட்சிகொடுப்பதைவிடவும் தன்னை அனுப்பின பிதா தன்னைகுறித்து சொல்லும் சாட்சியே மெய்யானது. அது போதுமானது என்று கூறுகிறார்.

இந்த மெய்யான சாட்சி விளங்குவதற்கு இயேசுகிறிஸ்துவில் காணப்பட்ட 4 விஷயங்கள் என்ன?

1. உண்மை.
– சத்தியத்தை சத்தியமாக கூறுவது.
– சத்தியத்தை உண்மையானது என்று நிரூபித்து காட்டுவது.
– சத்தியத்தை தன் வாழ்வில் நிறைவேற்றி மெய்ப்பித்தல் ஆகிய மூன்று.

2. நேர்மை.
– நேர்வழி நின்று செயல்படுதல்.
– இடர்வரினும் இடறாமல் நிற்றல்.
– தனிமையாக்கப்பட்டாலும் தனித்துவத்தை இழக்காமை ஆகிய மூன்று.

3. ஒழுக்கம்.
– கற்றுகொண்டதை கடைபிடிப்பது.
– கடைபிடிப்பதை பறைசாற்றுவது.
– பறைசாற்றுவதை நிலைநிறுத்துவது ஆகிய மூன்று.

4. தாழ்மையின் கீழ்படிதல்.
– தன்னை – தன்னிலையை இழத்தல்.
– செய்ய பணித்ததை செய்துமுடித்தல்.
– இன்னும் செய்ய எதிர்பார்த்திருத்தல் ஆகிய மூன்று.

இயேசுகிறிஸ்துவுக்கு தான் யார் என்பதை குறித்த தெளிவு இருந்தது.
அது என்ன தெளிவு?
1. உலகமும் உலகத்தின் குடிகளும் பிதாவினுடையவைகள்.
2. மனுக்குலத்தின் வீழ்ச்சியானாலும், பாவத்தின் எழுச்சியானாலும் பாதிக்கபட்டவர் தந்தையே.
3. தாம் நிறைவேற்ற வேண்டியவைகளை மனிதர் நிறைவேற்றாததினால் நான் தெரிந்துகொள்ளபட்டிருக்கிறேன்.
4. பிதா தன்னை முழுவதுமாய் நம்பி இந்த பொறுப்பை தந்துள்ளார். அந்த பொறுப்பை இடறலடைய வைத்து நம்பிக்கை துரோகம் செய்யலாகாது.
5. தன் விருப்பம் செய்ய நினைக்கும் நேரம் இதுவல்ல, தாம் செய்யவேண்டியதை செய்து நிறைவேற்றினால் தன் விருப்பம் நிறைவேறும் என்று அறிந்திருந்தார்.
6. பிதாவின் விருப்பம் நிறைவேற்ற ஒத்துழைக்காவிட்டால் அவரின் கோபம் என்னச் செய்யும் என்றும் அறிவார்.
7. தன் உயிர்போகும் கடைசி நிமிடம் கூட பிதாவின் மடியாகதானிருக்கவேண்டும் என்பதில் உறுதியாயிருந்தார்.

கர்த்தாவே, நீர் உமது மகனைகொண்டு நல்ல கீழ்படிதலை, உண்மை, நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுதந்துள்ளமைக்கு நன்றி. உமது ஆவியால் இன்னும் இவைகளில் நாங்கள் அதிதீவிரமாய் முன்னேற உதவுகிறீர். நாங்கள் எங்களையல்ல, உம்மையே பின்பற்றி, உம்மையே அறிவித்து, உம்மிலே நிறைவடைய எங்களுக்கு பெலன் தாரும். உலக பொருள்களுக்காக மெய்பொருளை இழக்காமலும், பொறுப்புணர்ச்சியை மறுக்காமலும் இருக்க உதவும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME