நேசிக்கப்பட்ட இவனைச் சாகாமலிருக்கவும் செய்யக்கூடாதா?
See how He loved him!.Could not this Man have kept this man from dying? (John 11:36,37)
Jn14:21-23; 2Cor8:8,9; Eph5:1,2,25; 1Jn3:1; 1Jn4:9,10; Rev1:5; Mt27:40-42; Ps78:19,20.
அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்! (யோவான் 11:36)
அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர், இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள். (யோவான் 11:37)
யோவான் 14:21-23; 2கொரிந்தியர் 8:8,9; எபேசியர் 5:1,2,25; 1யோவான் 3:1; 1யோவான் 4:9,10; வெளி 1:5; மத்தேயு 27:40-42; சங்கீதம் 78:19,20.
இயேசுவின் அன்பு உண்மையானதா?
இயேசுகிறிஸ்து உளபூர்வமாக, உண்மையாக லாசருவின் குடும்பத்தின் மீது அன்பு வைத்திருந்தாரானால் லாசருவை மரிக்க வைத்திருக்கக்கூடாதே என்பது பலரது வாதம். யோவான் சுவிசேஷகன் இயேசுவின் உண்மை அன்பைக் குறிப்பிடும் அதே நேரத்தில் அவருக்கு எதிரான குற்றசாட்டுகள் குறித்தும் பதிவு செய்கின்றார். இயேசு உண்மையிலேயே அவர்கள்மீது அன்பு வைத்தாரா? ஆம். அவரின் அன்பு உண்மையானது. புனிதமானது. இயல்பானது. அதனை லாசருவின் குடும்பத்தார் புரிந்திருந்தனர். பார்வையாளர்களும், விமர்சனவாதிகளும் அவரது அன்பை குறித்து கேள்வி கேட்டுக்கொண்டேயிருக்கட்டும். லாசருவின் குடும்பத்தாரோ, இயேசுவோ அவர்களின் விமர்சனத்தை கவனிக்காது அன்பின் அடுத்த பரிணாமத்தை நோக்கி முன்னேறுகின்றனர். ஒரு கூட்டம் இயேசுவைக் குறித்து விமர்சனம் செய்யும்போது இயேசுவின் யோசனையோ லாசருவை பிழைக்கவைப்பதில் தான் கவனம் இருந்தது.
நாம் கிறிஸ்துவின்மேல் வைத்துள்ள உறுதிபாட்டை அசைத்து பார்க்கும்படியான சில நிகழ்வுகளை நாம் சந்தித்தாலும் நாம் அவருக்குள் கொண்டுள்ள உறுதியிலேயே கருத்தாய் இருக்க வேண்டும். இந்த உறுதியோ இயேசு கிறிஸ்து நமக்காய் செய்யபோகின்ற பலத்த கிரியைகளுக்கு அச்சாணியாகின்றது. நமது வாழ்வின் வேதனையான அனுபவங்களினிமித்தம் பிறரால் உண்டாகும் விமர்சனங்களுக்கு இடம் கொடுக்காமல் இயேசு நமக்காய் செய்யப்போகின்ற பெரிய காரியங்களுக்கு நேராக நம் இருதயத்தையும், கண்களையும் திருப்புவோமாக. விமர்சனம் செய்கிறவர்களல்ல அவரே நம் காயத்தைக் கட்ட வேண்டும்.
நான் அவர்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றி, அவர்களை தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க, அவர்களை சந்தோஷப்படுத்துவேன். எரேமியா 31:13.