சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.
He Himself is the propitiation for sins of the whole world. (1John 2 :2)
1John 4:14; 1John 5:19; John 1:29; John 4:42; John 11:51,52; 2 Corinthians 5:18-21; Revelation 12:9.
நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.
(1 யோவான் 2:2)
1யோவான் 4:14; 1யோவான் 5:19; யோவான் 1:29; யோவான் 4:42; யோவான் 11:51,52; 2கொரிந்தியர் 5:18-21; வெளி 12:9.
இயேசு உலகத்தின் பாவங்களை நீக்குகிறவர்.
எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமையை இழந்து போனது உண்மையானால், நன்மை செய்கிறவர்கள் ஒருவருமில்லை என்பது உண்மையானால், உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் விழுந்து கிடக்கிறது என்பது உண்மையானால், பிசாசானவன் உலகம் முழுவதையும் கெடுத்துப்போட்டான் எனபது உண்மையானால் இயேசு கிறிஸ்து சர்வ லோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிறவர் என்பதும் உண்மையே. இதனால் இயேசு கிறிஸ்து உலக இரட்சகர் என்று அழைக்கப்படுகிறார்.
ஒரு மனிதனின் கீழ்படியாமையினால் முழு உலகமும் பாவத்துக்கு அடிமையாயிற்று. இதனால் ஒரு தகப்பன், ஒரு தாய், ஒரு பிள்ளை செய்கிற தவறு முழு குடும்பத்தையும் பாதிப்புக்குள்ளாக்குகின்றது. ஒரு குடும்பம் செய்கிற பாவம் முழு ஊரையும் பாதிப்படைய செய்கின்றது. ஒரு பணியாள், ஒரு நிர்வாகி செய்கிற தவறு முழு நிறுவனத்தையும் பாதிப்படைய செய்கின்றது. இது ஒரு பொதுமையாகும். அப்படியானால் ஒரு மனிதனின் கீழ்படிதலினால் முழு உலகமும் இரட்சிக்கப்படுவதும் சாத்தியமே. ஒரு தகப்பனின், தாயின், பிள்ளையின் மீட்பு முழு குடும்பத்தையும் இரட்சிக்க இடம் உண்டாக்குகின்றது. இப்படியாக பாவம் எவ்விதம் படர்ந்து பரவி எங்கும் நிரம்பியதோ அதுபோல கிறிஸ்துவின் மீட்பும் எங்கும் படர்ந்து பரவுகிறது.
பாவத்தை தடுத்து நிறுத்தும் ஆற்றல் இரட்சிப்புக்கு மட்டுமே உண்டு. ஆனால் மீட்பை தடுத்து நிறுத்த பாவத்தால் இயலாது. இருளை ஒளி மறைய செய்யும். ஒளியை இருள் மேற்கொள்ள இயலாது. ஆம் இரட்சிப்பு பாவத்தை மேற்கொள்ளும். பாவம் இரட்சிப்பை மேற்கொள்ள இயலாது. இதனால் பாவத்தைக் கொண்டு வந்த மனிதர்கள் சாவடைந்தார்கள். இரட்சிப்பை கொண்டுவந்த இயேசு ஜீவனடைந்தார். பாவத்துக்கு காரணமான சாத்தான் நரகத்துக்கு உரியவனானான். இரட்சிப்பின் அதிபதி நித்திய ஜீவனுக்குரியவரானார்.
இயேசுவே உலக இரட்சகர். உலகத்தின் பாவத்தை வேறு எவராலும் பரிகரிக்க இயலாது. இந்து மார்க்கம் மற்றும் மற்றைய மார்க்கங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கானதாகும். ஆகையினால் அவைகளால் முழு உலகமும் மீட்படைய இயலாது. இயேசுவின் சபையாகிய கிறிஸ்தவம் மட்டுமே முழு உலகிற்குமுரியது. ஆகையினால் எல்லாரும் மீட்கபடவும், சத்தியத்தை அறியவும் அவர் சித்தமுள்ளவ்ராயிருக்கிறார்.
இயேசு உலக பாவத்தை நீக்குவதினால்….
இயேசுவே உலக இரட்சகராக உயர்த்தப்படுகின்றார்….
கிறிஸ்தவமே உலக சமய இயக்கமாக பரிணமிக்கின்றது.
கிறிஸ்துவின் இராஜ்யம் மட்டுமே அழிவில்லாத இராஜ்யமாக என்றும் நிலைத்திருக்கும்.
சில கேள்விகள்…
கிறிஸ்து உலக இரட்சகர் என்றால் கிறிஸ்தவம் உலக மதம் என்று சொல்வதில் என்ன தவறு?….
சன்மார்க்க போதனைகளோ, நீதி போதனைகளோ எதுவாயிருந்தாலும் கிறிஸ்தவத்துக்கு ஈடாகாது என்பது உண்மையா?….
இயேசு உலக இரட்சகர் என்றால் எல்லா மனிதர்களும் இரட்சிக்கபடவில்லையே . காரணம் என்ன?…
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன். 1தீமோத்தேயு 2:4-7.