சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்டது.
Jn3:14.Moses lifted up the serpent in the wilderness. Num21:1-9; 2Kin18:4.
சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும். (யோவான் 3:14)
எண்ணாகமம் 21:1-9; 2 இராஜாக்கள் 18:4.
இயேசுகிறிஸ்து குறிப்பிட்டுள்ள இந்த பழைய ஏற்பாட்டு பாகத்தை நாம் தியானிக்கலாம்.
கொள்ளிவாய் சர்ப்பம் – வெண்கல சர்ப்பம்.
1. தோல்வியானது பிரதிக்னை ( vow) மூலம் ஜெயமாய் மாறிற்று. எண்ணாகமம் 21:1-3
2. கடினமான வழிமுறையினிமித்தம் பிரதிக்னை செய்யாது மனமடிவடைந்தனர். வசனம் 4.
Ways discouraged soul.
By the way people got impatient. சூழ்நிலைகளுக்கேற்றாற் போல் மாறிக்கொள்கிற மனம் தேவனுக்கும் பிரியமானதல்ல.
3. மனமடிதலினிமித்தம் தேவனுக்கும், மோசேக்கும் விரோதமாகப் பேசினர். வசனம் 5a. முன்னேற்றம் எளிதாய் கிடைப்பதல்ல கடினமான அப்பியாசங்களினால் தான் முன்னேற முடியும்.
4. தேவனுக்கும், மோசேக்கும் விரோதமாக எழும்பியதினிமித்தம் தேவனுடைய நடத்துதலையும், தேவனுடைய கொடையையும் அசட்டை செய்தனர். வசனம் 5b. எதிர்செயல் தேவன் விரும்பாதது. தேவனுடைய நடத்துதலில் அல்ல, நடத்தபட்ட மக்களில் இருந்த முரட்டு குணம்.
தேவனுடைய கொடையில் அல்ல, கொடையை பெற்றுக்கொண்ட மக்களின் திமிர்.
கேள்வி கேட்பதையே தேவன் விரும்பார்.
ஒரு தகப்பனைபோல – எந்த தகப்பனும் பிள்ளையானவன் எதிர்த்து கேள்வி கேட்பதை விரும்பான். அது போலவே தேவனும்.
தற்காலத்தில் கேள்வி கேட்பதை positive ஆக கொள்ளுகின்ற முறை ஏற்றுக்கொள்ளதக்கதல்ல.
Bible is unchanging Treasure.
5. கேள்வி எழுப்பியதினிமித்தம் கடிபட்டனர். வசனம் 6. தேவன் அன்புள்ளவர்தான். அள்ளிக்கொடுப்பவர்தான். ஆனால்தவறிழைக்கும்போது தண்டிக்கிறவர் என்பதை மறக்க வேண்டாம்.
தன் தவறுகளினிமித்தம் எவரொருவர் தண்டிக்கப்படவில்லையோ அவர் வேசி பிள்ளையாக்கப்பட்டுவிட்டார் என்று பொருளாகும்.
6. கடிபட்டதினிமித்தம் கர்த்தரை நோக்கி கதறி விண்ணப்பித்தனர். வசனம் 8,9. தண்டனை பின்மாற்றத்துக்கான அணுகுமுறையல்ல, கிட்டி சேர வைப்பதற்கான தேவ ஒழுங்கு.
கதறலும், விண்ணப்பமும் மனம் மாறுதலை இரு சாராரிடமும் கொண்டு வரும்.
தண்டித்தவரிடம் இரக்கம். தண்டிக்கபட்டவரிடத்தில் கீழ்படிதல் வரும்.
7. கதறுதலின் விண்ணப்பம் வெண்கல சர்ப்பத்தை கொண்டு வந்தது.
– வெண்கல சர்ப்பம் வழிபடுவதற்கானதல்ல, உன்னதங்களில் இருக்கும் தேவனை நோக்கி பார்க்க செய்வது. பிடரியை கடினபடுத்துதல் என்பது தேவனை நோக்கி பார்க்காதது. நோக்கிபார்த்தல் என்பது தேவனிடம் திரும்புதல் ஆகும்.
– வெண்கல சர்ப்பம் கிறிஸ்துவின் நிழலாட்டம். யோவான் 3:14.
கொள்ளிவாய் சர்ப்பம் கடித்தது.
வெண்கல சர்ப்பம் பிழைப்பூட்ட காரணமாயிற்று. பாவ வலுசர்ப்பம் கடித்தது. சிலுவை நாயகர் பிழைப்பூட்டுகிறார்.
கர்த்தாவே, எங்கள் கீழ்படியாமையினால் உண்டான பாவகடிவிஷத்தால் தீண்டபட்டு மரண வியாதிக்குள் தள்ளப்பட்டோம். உம் குமாரனை சிலுவை நாயகராய் அனுப்பி எங்களை பிழைப்பூட்டினீர். இனி நாங்கள் உம் வழியை விட்டு திரும்பாது வாழ வழிவகை செய்யும்.