தமது சந்நிதியில் மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற நிறுத்த வல்லவர்
வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,(யூதா 1:24)
சங்கீதம் 21:6; சங்கீதம் 43:4; மத்தேயு 5:12; மத்தேயு 19:28; 2கொரிந்தியர் 4:17; 1 பேதுரு 4:13.
நாம் அழுக்கு வஸ்திரம், அழுக்கு உதடுகள், அழுக்கு மாம்சம், பாவத்தோடு அவரிடம் வந்தாலும் அவர் நம்மை பரிசுத்த ஜாதியாக, தேவ ஜனமாக, பரிசுத்த அலங்காரமாக அவர் நம்மை தமது சந்நிதியில் நிறுத்துவார்.
நாம் துக்கம், துயரம், அழுகை, புலம்பலோடே அவரிடம் வந்தாலும் அவர் நம்மை மகிழ்ச்சியாக அவர் நம்மை தமது சந்நிதியில் நிறுத்துவார்.
நாம் சாம்பலுடனும், ஒடுங்கின ஆவி, நொறுங்கிய இதயம், பட்டுப்போன மரமாக, கட்டுண்டவர்களாக அவரிடம் வந்தாலும் அவர் நம்மை நீதியின் விருட்சங்களாக அவர் நம்மை தமது சந்நிதியில் நிறுத்துவார். ஏசாயா 61:1-3