இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்
By this we know the spirit of truth and the spirit of error. (1John 4:6)
1John 4:1; John 14:17; John 15:26; Romans 11:8; 2Thessonolians 2:9-11; Isaiah 29:10; Hosiah 4:12; Micha 2:11; Ephesians 4:14; 1John 2:26.
நாங்கள் தேவனால் உண்டானவர்கள். தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான். தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை. இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம். (1 யோவான் 4:6)
1யோவான் 4:1; யோவான் 14:17; யோவான் 15:26; ரோமர் 11:8; 2தெச2:9-11;ஏசா29:10;ஓசி4:12;மீகா2:11;எபே4:14;1யோவா2:26.
அறிந்திருக்கிறோம்.
கிறிஸ்துவின் உபதேசத்தில் இருவிதமான ஆவிகளின் செயற்பாடுகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து சத்திய ஆவியோடு தொடர்புடையவராகவும், கள்ள கிறிஸ்துக்கள் வஞ்சக ஆவியோடு தொடர்புடையதாகவும் கூறப்பட்டது. இயேசு கிறிஸ்து பரமேறி பிதாவிடம் சென்றபின்பு அப்போஸ்தலர்களும் கள்ள அப்போஸ்தலர்களும் என்ற வேறுபாடுகள் உண்டாக ஆரம்பித்தது. அதோடு கள்ள போதகர்களின் தாக்கமும் அதிகரித்தது. முதல் நூற்றாண்டின் முடிவில் வாழ்ந்திருந்த யோவான் இவைகளை பகுத்து சத்திய ஆவி, வஞ்சக ஆவி என்று தெளிவுபடுத்துகின்றார். தேவனுடைய மனிதர்கள் சத்திய ஆவியையும், வஞ்சக ஆவியையும் குறித்த தெளிவு உடையவர்களாயிருக்க வேண்டும். இந்த தெளிவுக்கான அடிப்படை உபதேசம் வசனமும் ஆவியும் இணைந்த நிலையாகும் என்பதை குறிப்பிடுகின்றார்.
ஆவிக்குரியவர்கள் இந்த வேறுபாட்டை அறிந்துக் கொள்வார்கள். ஒருவர் விசுவாசியாயிருப்பாரென்றால் இந்த வேறுபாட்டை அறிந்திருந்து தன் விசுவாசத்தையும், குடும்பத்தின் ஆவிக்குரிய வளர்ச்சியையும் கவனத்தில் கொள்வார். போதகராயிருக்கும் ஒருவர் இவ்வித வேறுபாட்டை அறிந்திருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் தன் சபையையும் காத்துக் கொள்வார். சத்திய ஆவியினால் வழிநடத்தப்படுகிற எவரொருவரும் தன் மக்களை சத்தியத்துக்குள்ளே நடத்துவார். வஞ்சக ஆவியை அறிந்துக் கொண்டு அந்நிய போதகங்களிலோ, அந்நிய காரியங்களிலோ தலையிடும்படி அனுமதிக்க மாட்டார். அனேக தேவ பிள்ளைகள் எங்கெல்லாம் தேவனுடைய வார்த்தைகள் பிரசங்கிக்கப்படுகிறதோ அல்லது அற்புதங்கள் காணப்படுகிறதோ அங்கெல்லாம் ஓடிக்கொண்டு கண்ட கண்ட புற்களை மேய்ந்துக்கொண்டு தாங்களும் வழிவிலகி தாங்கள் சார்ந்துள்ள சபையையும் வழிவிலக் செய்கிறவர்களாயுள்ளனர்.
தெருவெங்கும் கிறிஸ்து பிரசங்கிக்கப்படுகிறார் என்பதுபோல தொலைகாட்சியெல்லாம் கிறிஸ்து பிரசங்கிக்கப்படுகிறார். கிறிஸ்துவில் மாற்றமில்லை. ஆனால் அவர்கள் பிரசங்கிக்கும் கிறிஸ்து யார் என்றும், கிறிஸ்துவை பிரசங்கிக்கிறவர்கள் எப்படிபட்டவர்கள் என்றும் அறியும் அறிவு இக்காலத்தில் நமக்கு தேவை. நமக்கு முன்பாக காண்பிக்கப்படுகிறவைகளும் நம் காதுகளுக்கு கொடுக்கப்படுகிற சப்தங்களையும் குறித்த தெளிவில்லையெனில் வஞ்சக ஆவிகளின் பிடியில் அகப்பட்டு விடுவோம்.
கர்த்தருடைய வசனத்தை தேவனுடைய ஆவியைக் கொண்டு பேசவில்லையென்றாலும், கர்த்தருடைய ஆவி சொல்லுகிறார் என்று சொல்லிக்கொண்டு கர்த்தருடைய வசனத்தை தவறாக போதிப்பதும் வஞ்சக ஆவிகளின் வேலையாகும். நமக்குள் வசனமும் ஆவியும் இணைந்து வாழுமென்றால் அப்படிபட்ட நபர்களை அடையாளம் கண்டுக்கொண்டு நம்மையும் நம்மை சார்ந்த கூட்டத்தையும் தப்புவிக்க இயலும்.
வேறுபாடுகளை புரிந்துக்கொண்டு வாழ்வதே ஆவியின் பகுத்தறிவாகும்.
கேள்வி. நம்மில் எந்த ஆவி செயல்படுகிறது என்பதை நாம் எப்படி அறிய இயலும்?.
தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தருடைய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து, நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து, எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து விண்ணப்பம்பண்ணி, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள்நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே. நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, தοருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி, இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள். 1தெசலோனிக்கேயர் 1:2-7.