சத்தியத்தின்படி

சத்தியத்தின்படி செய்கிறவன் ஒளியினிடம் வருகிறான்

Truth comes to the light,his deeds may be clearly seen,they have been done in God. (John 3:21)
Jn 5:39; Jn 1:47; Act 17:11,12; 1 Co7:39; 1Jn 1:6; Rev14:13; Ps1:1-3; psl 86:11; ps119:80; ps139:23,24; Isa8:20.

சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
(யோவான் 3:21)

யோவான் 5:39; யோவான் 1:47; அப்போஸ்தலர் 17:11,12; 1கொரிந்தியர் 7:39; 1 யோவான் 1:6; வெளி 14:13; சங்கீதம் 1:1-3; சங்கீதம் 86:11; சங்கீதம் 119:80; சங்கீதம் 139:23,24; ஏசாயா 8:20.

சத்தியத்தின்படி:
1. இயேசுகிறிஸ்து சத்தியத்தினால் நிறைந்தவராய் வந்தார். யோவான் 1:14
2. இயேசுகிறிஸ்து சத்தியத்தின்படி பேசினார். லூக்கா 4:27; எபேசியர் 4:21
3. இயேசுகிறிஸ்துவின் தீர்ப்பு சத்தியத்தின்படி இருக்கும். யோவான் 8:16 4. இயேசுகிறிஸ்து சத்திய ஆவியையே தம் அடியவர்க்கு வாக்களித்தார். யோவான் 16:13
5. இயேசுகிறிஸ்து சத்தியத்தினிமித்தம் தூய்மையானவராக இருந்தார். யோவான் 17:19
6. தமது சீஷர்கள் சத்தியத்தின்படி தூய்மையானவர்களாயிருக்க பிதாவிடம் வேண்டினார். யோவான் 17:17
7. சத்தியத்தின்படி இயேசுகிறிஸ்து ஊழியகாரர் ஆனார். ரோமர் 15:8
8. கிறிஸ்துவின் சரீரமாகிய சபை சத்தியத்திற்கு தூணும், ஆதாரமுமாயிருக்கிறது. 1தீமோத்தேயு 3:15
9. இயேசுவைபோல விசுவாச குடும்பங்களும் சத்தியத்திலே நடக்க வேண்டுமென்று விரும்புகிறார். 2 யோவான் 1:4; 3 யோவான் 1:3,4
10. நாம் சத்தியத்திற்கு உடன் வேலையாட்களாயிருக்கிறோம். 3 யோவான் 1:8
11. யோவானைபோல நாமும் சத்தியத்திற்கு சாட்சி கொடுக்க அழைக்கபட்டுள்ளோம். யோவான் 5:33

சத்தியமாவது என்ன? இயேசு பிலாத்துவிடம், ‘நான் சத்தியத்திற்கு சாட்சி கொடுக்க வந்தேன்’ என்றார். பிலாத்து இயேசுவிடம், ‘சத்தியமாவது என்ன?’ என்று கேட்டான். யோவான் 18:37,38.
இதற்கு பதில் தரப்படவில்லை. அதனால்தான் என்னவோ, சத்தியம் என்பதுஎன்னவென்று தெரியாமல் மனிதர் உழன்று கொண்டிருக்கின்றனர்.

சிலர் இயற்கையில் சத்தியத்தை தேடி இயற்கையே தெய்வம் என்றனர்.
சிலர் எங்கும் சத்தியத்தை காணவில்லை என்றுகூறி கடவுள் இல்லை என்கின்றனர்.
சிலர் தத்துவ இயல், மதகோட்பாடுகளில் சத்தியத்தை தேடி நவ கோட்பாடுகளை வெளியிடுகின்றனர். சிலர் தாங்களே சத்தியம் கண்டவர் என்று கூறி தங்களையே வழிபட கூறுகின்றனர்.

சத்தியத்தை எங்கும், எதிலும், எவரிலும் தேட வேண்டாம். ‘இயேசுவே சத்தியம்’ யோவான் 14:6. சத்தியத்திற்கு வழி உண்டு. ஜீவன் உண்டு. அவர் வழி சென்று சத்தியத்தை கண்டால் ஜீவன் அடையலாம்.

கர்த்தாவே, நீர் உம்முடைய சத்தியத்தை வெளிபடுத்தியும் இவ்வுலகம் உம் சத்தியத்தை இழந்தது. என்றாலும் கிருபை உள்ள நீர் திரும்பவும் உமது சத்தியமாகிய கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பி கிருபையும்,சத்தியமும் இணைந்து வர செய்தீர். இந்த சத்தியத்தை ஏற்றுகொண்ட நாங்கள் பிறரும் சத்தியத்தை அறியும்படி செய்ய எங்கள் மேல் கிருபையாயிரும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME